உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. வி. ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஆர். கோதவர்ம ராஜா
தாய்மொழியில் பெயர்கார்த்திகை நாள் கோதவர்ம ராஜா
பிறப்பு1908 அக்டோபர் 13
பூஞ்சார் அரச குடும்பம், கோட்டயம்
இறப்பு30 April 1971
குலு பள்ளத்தாக்கு, இமாச்சலப் பிரதேசம்
இறப்பிற்கான
காரணம்
விமான விபத்து
சொந்த ஊர்பூஞ்ஞார், கேரளம்
பெற்றோர்புதுசேரி மனையின் நாராயணன் நம்பூதிரி (தந்தை)
பூஞ்சார் அரண்மனையின் அம்பாலிகா தம்புராட்டி (தாய்)
வாழ்க்கைத்
துணை
திருவிதாங்கூரின் மாகாரணி கார்த்திகை திருநாள் லட்சுமி பாய்
பிள்ளைகள்பட்டத்து இளவரசர் இராம வர்மன் (ஆறு வயதில் இறந்தார்)
மகாராஜா மூலம் திருநாள் இராம வர்மன்
இளவரசி பூசம் திருநாள் கௌரி பார்வதி பாய்
இளவரசி அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய்
உறவினர்கள்சித்திரை திருநாள் பலராம வர்மன் (மைத்துனர்)
உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன்]] (மைத்துனர்)

லெப்டினன்ட் கர்னல் பி.ஆர்.கோதவர்ம ராஜா (1908 அக்டோபர் 13 - 1971 ஏப்ரல் 30) அதிகமாக ஜி.வி. ராஜா (G. V. Raja) என அழைக்கப்பட்ட இவர் ஓர் நிர்வாகியும், விமான ஓட்டியும், வேட்டைக்காரரும் மற்றும் சமசுகிருத அறிஞரும் ஆவார். இவர் விளையாட்டுத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றை விளம்பரப்படுத்தியவர் ஆவார். இளைஞர்களை விளையாட்டுகளில் ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்திய இவர் 1953இல் கேரள விளையாட்டுக் குழுவை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். 1971 ஆம் ஆண்டில் விமான விபத்தில் தான் இறக்கும் வரை ஜி.வி.ராஜா விளையாட்டு அமைப்பின் தலைவர் பதவியிலிருந்தார். [1] திருவனந்தபுரம் டென்னிசு சங்கம், பறப்பவர் சங்கம் மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதிலும் ஜி.வி.ராஜா முக்கிய பங்கு வகித்தார். [2] [3]

ஜி வி ராஜா கேரள மாநில விளையாட்டு அமைப்பு, கேரள துடுப்பாட்ட சங்கத்தின் நிறுவனர் தலைவராகவும், ஏராளமான விளையாட்டுக் கழகங்கள், சங்கங்களின் புரவலராகவும் இருந்தார்.[4] இந்தியாவில் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவரான முதல் கேரளவாதி ராஜா என்றும், இவர் வாழ்ந்திருந்தால், இவர் இந்தியாவில் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்திருப்பார் என்றும் கிரிக் இன்ஃபோ என்ற வலைத்தளம் தெரிவித்துள்ளது.[5]

ஜி.வி.ராஜா கேரள சுற்றுலா மேம்பாட்டு அமைப்பின் தலைவராகவும் இருந்தார். கோவளத்தை ஒரு சர்வதேச சுற்றுலா தலமாக வளர்ப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகித்தார். விளையாட்டு ஊடகவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், வல்லுநர்கள், விளையாட்டு வீரர்கள் இவரை கேரளாவின் விளையாட்டுக்கும் சுற்றுலாவுக்குமான தந்தை என்று கருதுகின்றனர். ஜி.வி.ராஜாவின் பிறந்த நாளான, அக்டோபர் 13, "கேரள விளையாட்டு தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது.

பின்னணியும் ஆரம்ப வாழ்க்கையும்[தொகு]

பி. ஆர் கோதவர்ம ராஜா 1908 அக்டோபர் 13 அன்று கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் பூஞ்சார் அரசக் குடும்பத்தில், அம்பாலிகா தம்புராட்டி, அவரது சம்பந்தம் கணவர் புதுசேரி நாராயணன் நம்பூதிரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஜி.வி.ராஜா தனது பள்ளி கல்வியை பூஞ்சார், எஸ்.எம்.வி. உயர்நிலைப்பள்ளி, கோட்டயத்திலுள்ள எம்.டி. செமினரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தனது கல்வியைப் பெற்றார். [6] [7] பின்னர் சென்னை சென்று மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

திருமணம்[தொகு]

கோதவர்மனின் மூத்த சகோதரர் இராமவர்மன், திருவிதாங்கூரின் மகாராணி சேது பார்வதி பாயின் சகோதரி பவானி அம்மா தம்புராட்டி என்பவரை மணந்தார். இவர் மூலம் திருவிதாங்கூர் ராணியான கார்த்திகை திருநாள் லட்சுமி பாயுடனான திருமணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தின் திருமண முன்மொழிவு சமயத்தில் , ஜி.வி.ராஜா சென்னையில் படித்துக்கொண்டிருந்தார். இவர் தனது கல்வியை நிறுத்திவிட்டு, திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டார். 1934 சனவரி 24 அன்று, தனது 26 வயதில், இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர்.

 1. இளையராஜா (பட்டத்து இளவரசர்) அவிட்டம் திருநாள் ராம வர்மன் (1938-1944), தனது ஆறாவது வயதில் இறந்தார்
 2. பூசம் திருநாள் கௌரி பார்வதி பாயி (பிறப்பு 1941)
 3. அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய் (பிறப்பு 1945), இந்திய ஆங்கிலேய எழுத்தாளர்.
 4. மகாராஜா மூலம் திருநாள் இராம வர்மன் (பிறப்பு 1949). [8]

திருவனந்தபுரத்தில் தனது மனைவியுடன் அரண்மனையில் குடியேறிய பின்னர், ஜி.வி.ராஜா திருவிதாங்கூர் மாநிலப் படையில் நாயர் படைப்பிரிவின் தளபதியாக தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார். வெளிநாட்டு பிரமுகர்கள், முக்கியமான மாநில விருந்தினர்களின் வருகைக்கும் அவர்களை கையாள்வதற்கும் கூடுதல் பொறுப்பை மகாராஜா இவரிடம் ஒப்படைத்தார். மேலும், அப்போதைய அரசாங்கத்தின் விளையாட்டு, சுற்றுலா துறைகளின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1949 வரை இராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் லெப்டினன்ட் கர்னலாக ஓய்வு பெற்றார்.

பங்களிப்புகள்[தொகு]

ஜி.வி.ராஜா கேரளாவில் விளையாட்டுப் பயிற்சியினை ஊக்குவித்தார். மேலும், விளையாட்டு மேம்பாடு, சுற்றுலா, விமானத் தொழில் மற்றும் இந்த மாறுபட்ட துறைகள் அனைத்தையும் மேம்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை நிறுவுவதில் இவர் ஈடுபட்டார். [9] [10]

சுற்றுலா மேம்பாடு[தொகு]

மகாராணியின் கணவராக பொது நிர்வாகத்தில் இவருக்கு ஒரு முக்கிய இடம் இருந்ததால், கோவளத்தை ஒரு சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய முடிவு செய்தார். பின்னர் திருவிதாங்கூருக்குள் சுற்றுலா ஆர்வமுள்ள மற்ற இடங்களுக்கும் தனது ஆர்வத்தை விரிவுபடுத்தினார். திருவிதாங்கூர் இராச்சியத்தின் பல்வேறு முக்கிய சுற்றுலா இடங்களை பிரபலப்படுத்த கேரளா டிராவல்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைந்தபோது, கேரளா டிராவல்ஸ் லிமிடெட் இவரது உரிமையின் கீழ் ஒரு தனியார் (கார்ப்பரேட்) நிறுவனமாக மாறியது. 1960 களில், இந்த நிறுவனம் தாமஸ் குக் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கத்திய நாடுகளில் கோவளத்தை பிரபலப்படுத்தத் தொடங்கியது. இதன் விளைவாக கோவளம் கடற்கரையில் கிப்பி கலாச்சாரம் தொடங்கியது. இவர் பல வெளிநாட்டு பிரமுகர்களை அழைத்து கோவளம் அரண்மனையில் விருந்துகளை ஏற்பாடு செய்து அந்த இடத்தை விளம்பரப்படுத்தினார். [11] [12] [13] திருவனந்தபுரம் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இவர் முன்முயற்சி எடுத்தார். [14]

விளையாட்டினை முன்னெடுத்தல்[தொகு]

ஜி.வி.ராஜா அகில இந்திய விளையாட்டு அமைப்பை 1954 இல் நிறுவினார். இவர் கேரளாவில் குழிப்பந்தாட்டச் சங்கத்தை ஏற்படுத்தினார். மேலும் கேரள மக்களை மலையேற்றம் மற்றும் உலாவலுக்கும் அறிமுகப்படுத்தினார். [15]

இறப்பு[தொகு]

ஜி.வி.இராஜா 1971 ஆம் ஆண்டில் அகில இந்திய விளையாட்டு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பட்டியாலா சென்றார். 1971 ஏப்ரல் 30, அன்று குலு பள்ளத்தாக்கு அருகே நடந்த விமான விபத்தில் இவர் இறந்தார். [16]. இவரது உடல் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பூஞ்சாரில் தகனம் செய்யப்பட்டது. [17]

மரியாதை[தொகு]

இவரது நினைவாக திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டுப் பள்ளிக்கு ஜி.வி.ராஜா விளையாட்டுப் பள்ளி என்று பெயரிடப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கத்திற்கு இவரது பெயரிடப்பட்டது. கேரள மாநில விளையாட்டு அமைப்பு ஜி.வி.ராஜா விருதை நிறுவியது. இது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. [18] சுற்றுலாத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக கேரள சுற்றுலாத் துறையின் விருதும் இவரது பெயரிடப்பட்டுள்ளது. லெப்டினன்ட் கர்ணல். ராஜாவின் பிறந்த நாளான, அக்டோபர் 13, "கேரள விளையாட்டு தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

 1. "KSSC President – President Details as on Lt.Col.Goda Varma Raja Founder President Kerala Sports Council 1954–1971". Kerala State Sports Council. Kerala State Sports Council. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-16. பார்க்கப்பட்ட நாள் 2020-07-16.
 3. "Trivandrum International Airport/History, Wikipedia, the free encyclopedia"திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
 4. "Kerala State Sports Council : KSSC Presidents". Archived from the original on 3 December 2010. பார்க்கப்பட்ட நாள் 15 December 2009.
 5. cricinfo, India. "History of Kerala cricket By Professor AS Balakrishnan". CricInfo 2000. Archived from the original on 4 May 2014. பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.
 6. "Sri. V J Itticheria (1919—1943) The buildings, ground were given to Baselius College were built during his tenure. During his time greats Olympian Abdul Salle, Col. Godavarma Raja studied here."
 7. mdseminary, highersecondaryschool. "Heads Of MDSHSS (1893-till Date)". பார்க்கப்பட்ட நாள் 25 June 2014.
 8. "Though by the 26th amendment to the Constitution, Article 363 was repealed whereby the rights and privileges of the rulers of Indian states were taken away, still the name and title of the rulers remained as such and unaffected in so far as names and titles were not contemplated as rights or privileges under the repealed Articles 291 and 362 of the Constitution."
 9. In 1936, Queen, Karthika Thirunal choose Haylcon Palace for her honeymoon with newly wed husband, Prince Consort Lt.Col. Godavarma Raja/G. V. Raja. It was Prince Consort G.V Raja who found immense tourist potentiality of Kovalam and decided promote the region among state guests, by inviting Thomas Cook & Sons- UK to develop the region. The Maharajah of Travancore, Chithira Thirunal Balarama Varma, soon started hosting regular state banquets in Kovalam Haylcon Palace. Thus, the move helped to lay foundations of modern tourism industry in South India.
 10. "Kovalam – Travel guide at Wikivoyage". en.wikivoyage.org. பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
 11. "Goda Varma Raja" (in Malayalam). Archived from the original on 29 September 2011. பார்க்கப்பட்ட நாள் 15 December 2009.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 12. "Kayikakelikalude Thampuran" (in Malayalam). Webduniya. பார்க்கப்பட்ட நாள் 15 December 2009.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 13. Maheshawari, Uma. "Maharani Karthika Thirunal:Witnessing History". Kerala 4u.in. Archived from the original on 31 December 2013. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
 14. "Trivandrum International Airport/History, Wikipedia, the free encyclopedia"Trivandrum International Airport 'The airport was established as part of the Royal Flying Club under the initiative of Colonel Goda Varma Raja, husband of H. H. Princess Karthika Thirunal of Travancore Kingdom.[8] Col G.V Raja, being a trained pilot, felt the need an airport to accommodate Travancore in the aviation map of India. In 1935, on royal patronage of Maharaja Chitra Thirunal, Tata Airlines made its maiden flight to the airport using DH.83 Fox Moth aircraft under command of India's first pilot Nevill Vintcent, carried two passengers Jamshed Navoroji, a Tata company official, and Kanchi Dwarakadas, commercial agent of Travancore to Bombay Presidency along with a special mail from Viceroy of British India, Lord Willingdon wishing birthday greetings to the Maharaja.[9] The first flight from the airport took off on 1 November 1935, carrying mails of Royal Anchal (Travancore Post) to Bombay. Soon in 1938, the Royal Government of Travancore acquired a Dakota aircraft as Maharajah's private aircraft and placed 1st Squadron of Royal Indian Air Force (Travancore) for protection of State from aerial attacks.'
 15. Maheshwari, Uma. "G.V.Raja (The history of Sports and Games in Kerala)". Kerala 4u.in. Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014. "He did mountaineering course in Switzerland, and enjoyed mountaineering at the Alps. He was a person with extraordinary ability to organize things. Amidst his busy schedule when Col. Thirumeni as he is called affectionately called reaches TTC other members would have finished their practice. He used to call the picker boys Maniyan or Thanakappan to play against him. And finally these two rose to the rank of State tennis players. He believed professional coaching is essential for sports too and brought A G Ram Singh to train cricket enthusiasts in Kerala."
 16. keralawindow, .net. "IMPORTANT PERSONALITIES – GODAVARMA RAJA (COLONOL)". keralawindow.net. keralawindow. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
 17. Maheshawari, Uma. "G.V.Raja (The history of Sports and Games in Kerala)". Kerala 4u.in. Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.
 18. "G.V. Raja award for Renjith". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 15 December 2009.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வி._ராஜா&oldid=3792152" இலிருந்து மீள்விக்கப்பட்டது