அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுவதி திருநாள்

கௌரி லட்சுமி பாய்
பிறப்புகௌரி லட்சுமி பாய்
திருவிதாங்கூர்
புனைபெயர்கௌரி லட்சுமி பாய்
தொழில்எழுத்தாளர்
மொழிமலையாளம்
தேசியம் இந்தியா
குடியுரிமைதிருவிதாங்கூர்
கல்விபொருளாதாரப் பட்டதாரி
காலம்1994 முதல் தற்போது வரை
துணைவர்திருவல்லாவின் பாளையக்காரர் மேற்கு அரண்மனையின் மறைந்த விசாகம் திருநாள் சுகுமாரன் ராஜ ராஜ வர்மன்
பிள்ளைகள்பூரட்டாதி திருநாள் மார்த்தாண்ட வர்மன், அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மன் மற்றும் பரணி திருநாள் லேகா பார்வதி பாய் (1994 இல் ததெடுக்கப்பட்டார்)
பெற்றோர்ஜி. வி. இராஜா (தந்தை)
கார்த்திகை திருநாள் லட்சுமி பாய் (தாயார்)

அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய் (Aswathy Thirunal Gowri Lakshmi Bayi ) (பிறப்பு 1945) முன்னாள் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஆவார். இவர் சுமார் பத்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.[1] இவர், திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மனின் மருமகளாவார்.[2]

பிறப்பும் கல்வியும்[தொகு]

திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மகாராணி கார்த்திகா திருநாள் லக்ஷ்மி பாயி, ஜி.வி.ராஜா ஆகியோருக்கு 1945 சூலை 4 அன்று மூன்றாவது குழந்தையாக பிறந்தார். அவிட்டம் திருநாள் ராம வர்மன் (1938-1944), பூசம் திருநாள் கௌரி பார்வதி பாய் (1941) மற்றும் மூலம் திருநாள் ராம வர்மன் (1949) ஆகியோர் இவரது உடன்பிறப்புகள் ஆவர்.[3] இவர் தனது உடன்பிறப்புகளுடன் ஆங்கிலோ-இந்தியன் ஆசிரியர்களால் வீட்டிலேயே கல்வி கற்றார். பள்ளிக்கல்வி முடிந்ததும், திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் சேர்ந்து 1966 இல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

திருமணம்[தொகு]

1963 ஆம் ஆண்டில் தனது 18 வயதில், அசுவதி திருநாள் திருவல்லாவின் பாளையக்காரர் மேற்கு அரண்மனையின் 26 வயதான விசாகம் திருநாள் சுகுமாரன் ராஜ ராஜ வர்மன் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு வளர்ப்பு மகளும் இருந்தனர். ராஜ ராஜ வர்மன் 2005 திசமபர் 30 அன்று வாகன விபத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார்.  

இலக்கியப் படைப்புகள்[தொகு]

திருவிதாங்கூர் கோயில்கள், கேரள கோயில் கட்டிடக்கலை போன்ற பாடங்களில் அசுவதி திருநாள் பல புத்தகங்களையும், மூன்று ஆங்கிலக் கவிதைகள், செய்தித்தாள்களில் ஏராளமான கட்டுரைகள், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி 12 புத்தகங்களை எழுதியுள்ளார். விமர்சகர்களின் கூற்றுப்படி, 1998 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இவரது நூலான சிறீ பத்மநாப சுவாமி கோயில், என்ற படைப்பு பண்டைய கோயில் பற்றிய விரிவான படைப்பாகக் கருதப்படுகிறது. இது மிகவும் பிரபலமானது. மேலும் பல பதிப்புகளில் வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தை மலையாளத்தில் கே.சங்கரன் நம்பூதிரி, கே.ஜெயக்குமார் ஆகியோர் 1998 இல் மொழிபெயர்த்தனர்.[4] தமிழில் இந்நூல் கமலா பத்மகிரீசுவரனின் மொழிபெயர்ப்பில் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. SANTHANAM, KAUSALYA. "Writer with a royal lineage". THE HINDU. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/writer-with-a-royal-lineage/article2455596.ece. பார்த்த நாள்: 4 December 2014. 
  2. Express, Express News Service. "New Book by Aswathi Thirunal". http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/New-Book-by-Aswathi-Thirunal/2014/02/25/article2075780.ece#.UzwN7aiSzao. பார்த்த நாள்: 2 April 2014. 
  3. Maheshawari, Uma. "Maharani Karthika Thirunal:Witnessing History". Kerala 4u.in. Archived from the original on 31 December 2013.
  4. Express, Express News Service. "New Book by Aswathi Thirunal". THE NEW INDIA EXPRESS. http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/New-Book-by-Aswathi-Thirunal/2014/02/25/article2075780.ece#.UzwN7aiSzao. பார்த்த நாள்: 2 April 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]