கிப்பி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

கிப்பி அல்லது ஹிப்பி என்பது Hippie என்றதன் நேரடித் தமிழ்ப்படுத்தலாகும். கிப்பி அமெரிக்காவில் 1960 களில் தோற்றங்கண்ட ஓர் எதிர்ப் பண்பாட்டு வாழ்வுமுறையைக் குறிக்கின்றது. 1960 களில் விடுதலை மனப்பாங்குடன், பெரும்பாலும் மைய அதிகார பண்பாட்டுப் போக்குகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், அக்கால மாணவர்கள், இளையோர் மத்தியில் இடம்பெற்ற பல்வேறு தேடல்களின் வெளிப்பாடாக அமைந்தது.
தலைமயிரை நீளமாக வளர்த்தல், போதைப் பொருட்களை நுகர்தல், வீடுகளை விட்டுவிட்டு ஒருவித நாடோடி வாழ்க்கை வாழ்தல், சமூக குடிமங்களை அமைத்தல் போன்றவை குறிப்பிடத்தக்க கிப்பி போக்குகள் ஆகும்.