உள்ளடக்கத்துக்குச் செல்

கார்த்திகை திருநாள் லட்சுமி பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்திகை திருநாள் லட்சுமி பாய்
திருவிதாங்கூரின் மகாராணி; ஆற்றிங்கல் மூத்த தம்புரான்
ஆட்சிக்காலம்(1985–2008 மகாராணி பட்டம்)
முன்னையவர்சேது லட்சுமி பாயி
பின்னையவர்கார்த்திகை திருநாள் இந்திரா பாய் (1926–2017)
பிறப்பு(1916-09-17)17 செப்டம்பர் 1916
திருவிதாங்கூர்
இறப்பு8 சூன் 2008(2008-06-08) (அகவை 91)
திருவனந்தபுரம்
துணைவர்பூஞ்சார் அரண்மனையைச் சேர்ந்த ஜி. வி. ராஜா (1934)
குழந்தைகளின்
பெயர்கள்
அவிட்டம் திருநாள் ராம வர்மன்
பூரம் திருநாள் கௌரி பார்வதி பாய்
அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய்
மூலம் திருநாள் இராம வர்மன்
பெயர்கள்
"சிறீ பத்மநாபசேவினி வஞ்சி தர்மவர்தினி ராஜராஜேஸ்வரி மகாராணி கார்த்திகை திருநாள் இலட்சுமி பாய், ஆற்றிங்கல் மூத்த தம்புரான் மற்றும் திருவிதாங்கூரின் மகாராணி"
மரபுவேணாடு சொரூபம்
குலசேகர அரச வம்சம்
தந்தைகிளிமானூர் அரண்மனையைச் சேர்ந்த பூரம் திருநாள் ரவி வர்மன்
தாய்அம்மா மகாராணி மூலம் திருநாள் சேது பார்வதி பாய்
மதம்இந்து சமயம்

கார்த்திகை திருநாள் லட்சுமி பாய் (Karthika Thirunal Lakshmi Bayi) இவர் திருவாங்கூரின் கடைசி ஆளும் மகாராஜா, சித்திரை திருநாள் பலராம வர்மன் மற்றும் அவரது வாரிசான உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் ஆகியோரின் ஒரே சகோதரியாவார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் நிலவிய மரபுரிமையான மருமக்கதாயம் முறையின் கீழ், இவரது குழந்தைகள் தான் அரியணைக்கு வாரிசுகளாவர். எனவே இவர் திருவிதாங்கூர் அரசவையில் மகாராஜாவின் மனைவிகளை விட உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தார். மேலும் இவர் தனது சொந்த உரிமையில் ஆற்றிங்கல்லின் ராணி என்றும் அழைக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில், இவரது ஒரே மகன் திருவிதாங்கூரின் மகாராஜா என்ற பெயரில் தனது மாமாக்களுக்குப் பின் முறையாக வாரிசானர். மேலும் அவர் மூலம் திருநாள் ராம வர்மன் என்று அழைக்கப்படுகிறார் .

ஆரம்ப ஆண்டுகள்[தொகு]

கிளிமானூரைச் சேர்ந்த ராணி சேது பார்வதி பாய் மற்றும் ரவி வர்மா கோயி தம்புரான் ஆகியோரின் ஒரே மகளாகப் பிறந்த இவர் இராணுவ அதிகாரி ஜி. வி. ராஜா என்பவரை மணந்தார். ஒன் இந்தியா ஆன்லைன் என்ற நாளிதழின் படி, இவர் சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் சுதந்திர இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார். இவர், ஒரு திறமையான நடனக் கலைஞரும், பாடகரும் மற்றும் மொழியியலாளருமாவார். [1] மரபுக்கு இணங்க, மூத்த தம்புரான் என்று அழைக்கப்படும் ஆற்றிங்கல் அரண்மனையின் தலைவராகவும் இருந்தார்.

கார்த்திகை திருநாள் தனது தம்பியும், வருங்கால மகாராஜாவுமான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மனுடன் .

சமசுகிருத அறிஞரும் மற்றும் கிளிமானூர் கோவிலகமத்தின் பூரம் திருநாள் ரவி வர்மா கொச்சு கோயி தம்புரான், மற்றும் திருவிதாங்கூரைச் சேர்ந்த மகாராணி சேது பார்வதிபாயி ஆகியோரின் ஒரே மகளாக 1916 செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்களால் இவர் கல்வி கற்றார். இவர் மலையாளம், சமசுகிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தனது குழந்தை பருவத்திலிருந்தே நடனம் மற்றும் இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரது நலன்களை உணர்ந்து, அவரது மூத்த சகோதரர் மகாராஜா சித்திரை திருநாள், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரை இவரது இசை ஆசிரியராக நியமித்தார். 1933 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், கார்த்திகை திருநாள் தனது குடும்பத்தினரிடமிருந்து தனது தாயுடன் கடல் பயணத்தை மேற்கொண்ட முதல் பெண்ணானார். இவர், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 1935 அகில இந்திய மகளிர் மாநாட்டிலும் பங்கேற்றார். [2]

திருமணம்[தொகு]

கார்த்திகை திருநாளுக்கு 16 வயதை எட்டியவுடன், இவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக, கோயி தம்புரான்கள் திருவிதாங்கூர் இளவரசிகள் மற்றும் ராணிகளுக்கு மணமகனாக தேர்வு செய்யப்படுவார்கள். [3] உத்திராடம் திருநாளின் கூற்றுப்படி, மகாராஜா சித்திரை திருநாள் மற்றும் சேது பார்வதி பாய் ஆகியோர் கோயில் தம்புரான்களை புறக்கணித்து, பூஞ்சார் அரண்மனையைச் சேர்ந்த பி. ஆர். கோதவர்மா ராஜா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். [4]

இராணுவ அதிகாரி. பி. ஆர். கோதவர்மா ராஜா - கார்த்திகை திருநாள் லட்சுமி பாயின் இளவரசர் தனது இராணுவ நாட்களில்

[5] [6]

இந்த தம்பதியினருக்கு அவிட்டம் திருநாள் ராம வர்மன் (1938-1944, வாத நோய் காரணமாக தனது ஆறு வயதில் இறந்தார்) பூசம் திருநாள் கௌரி பார்வதி பாய் (1941), அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய் (1945) மற்றும் மூலம் திருநாள் ராம வர்மன் (1949) ஆகியோர் இவர்களின் குழந்தைகளாகப் பிறந்தனர்.[7] [8] இவர், தற்போது திருவிதாங்கூர் மகாராஜா மற்றும் திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தின் தலைவர் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் பாதுகாவலாக இருக்கிறார். [9] மறைந்த அவிட்டம் திருநாளின் நினைவாக, மகாராஜா சித்திரை திருநாள் பலராம வர்மன் திருவனந்தபுரத்தில் எஸ் ஏ டி என்ற ஒரு மருத்துவமனையை கட்டினார். [10] [11]

குறிப்புகள்[தொகு]

 1. .in, oneindia. "lakshmibai-thampuratti". oneindia.in. http://malayalam.oneindia.in/news/2008/06/08/kerala-lakshmibai-thampuratti-obit.html. பார்த்த நாள்: 24 March 2014. 
 2. UMA, MAHESWARI. "Maharani Karthika Thirunal: Witnessing History". kerala4u.in. Archived from the original on 31 December 2013. பார்க்கப்பட்ட நாள் 24 March 2014.
 3. Mewat, Mahi. The Indian Encyclopaedia. p. 4690.
 4. Uma Maheshwari, S. Thrippadidanam.
 5. https://en.wikivoyage.org/wiki/Kovalam Kovalam Wikivoyage In 1934, the next Queen, H.H Karthika Thirunal choose this palace for her honeymoon with her newly wed husband, G.V. Raja. It was Prince Consort G.V Raja who found immense tourist potentiality of the region and decided promote the region among state guests, by inviting Thomas Cook & Sons- UK to develop the region. The Maharaja of Travancore soon started hosting regular state banquets and accommodation of his European guests in Kovalam Haylcon Palace. This made the beach popular among European families living in nearby Madras and Bombay Presidencies as well as elite Travancore families to spend their holidays. Thus, the move helped to lay foundations of modern tourism industry in South India.
 6. kovalamhotels., com. "KOVALAM – PARADISE OF SOUTH INDIA". பார்க்கப்பட்ட நாள் 24 March 2014.
 7. "Though by the 26th amendment to the Constitution, Article 363 was repealed whereby the rights and privileges of the rulers of Indian states were taken away, still the name and title of the rulers remained as such and unaffected in so far as names and titles were not contemplated as rights or privileges under the repealed Articles 291 and 362 of the Constitution."
 8. HANEEF, MAHIR. "'His Highness' isn't unconstitutional: Kerala high court". http://timesofindia.indiatimes.com/city/kochi/His-Highness-isnt-unconstitutional-Kerala-high-court/articleshow/27492597.cms?intenttarget=no. பார்த்த நாள்: 27 January 2014. 
 9. Express News Service. "Moolam Thirunal Anointed Custodian of Temple". http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/Moolam-Thirunal-Anointed-Custodian-of-Temple/2014/01/04/article1981976.ece. பார்த்த நாள்: 22 January 2014. 
 10. രാജകുടുംബത്തിന്‍റെ കണ്ണീര്‍ തോരുന്നില്ല! മനോരമഓണ്‍ലൈന്‍ – 2012 ജനു 28, ശനി : 'ആറാം വയസ്സിലാണ് അവിട്ടം തിരുനാള്‍ രാമവര്‍മയുടെ വേര്‍പാട്. 1944ല്‍ ആയിരുന്നു അത്. ജന്മനാ അനാരോഗ്യമുള്ള കുട്ടിയായിരുന്നു. റുമാറ്റിക് ഹാര്‍ട്ട് എന്ന ഹൃദയത്തെ ബാധിക്കുന്ന രോഗമായിരുന്നു. രോഗത്തിന്‍റെ കാഠിന്യത്തെ കുറിച്ചു ഡോക്ടര്‍മാര്‍ ഞങ്ങളെ ആരെയും അറിയിച്ചിരുന്നില്ല. കഴിവുറ്റ ഡോക്ടര്‍മാരോ ചികില്‍സാസൗകര്യമോ ഉണ്ടായിരുന്നുമില്ല. സൂക്ഷിച്ചു വളര്‍ത്തണമെന്നു പറഞ്ഞിട്ടില്ലാത്തതിനാല്‍ മറ്റു കുട്ടികളെ പോലെ അവിട്ടം തിരുനാളിനെയും ഒാടാനും ചാടാനുമെല്ലാം വിട്ടു. കേരളത്തില്‍ നല്ല മഴയുള്ള സമയമായിരുന്നു. ഈര്‍പ്പവും തണുപ്പും നല്ലതലെ്ലന്നു ഡോക്ടര്‍മാര്‍ പറഞ്ഞതനുസരിച്ചു കാര്‍ത്തിക തിരുനാളും ഭര്‍ത്താവ് കേണല്‍ ഗോദവര്‍മരാജയും അവിട്ടം തിരുനാളിനെയും കൂട്ടി കന്യാകുമാരിയിലേക്കു പോയി. അവിടെ മഴയുണ്ടായിരുന്നില്ല. ഒരു ദിവസം വൈകുന്നേരം അവിട്ടം തിരുനാള്‍ അമ്മയോടു പേടിയാകുന്നുവെന്നു പറഞ്ഞു മടിയില്‍ തലവച്ചു കിടന്നു. പിന്നെ ഇരുട്ടാകുന്നുവെന്നു പറഞ്ഞു, കണ്ണ് കാണുന്നിലെ്ലന്നു പറഞ്ഞു. പതിയെ ബോധം മറഞ്ഞു. മടിയില്‍ കിടന്നുകൊണ്ടു തന്നെ ഈ ലോകം വിട്ടു പോയി.
 11. മനോരമ, ഓണ്‍ലൈന്‍. "രാജകുടുംബത്തിന്‍റെ കണ്ണീര്‍ തോരുന്നില്ല!". https://malayalam.yahoo.com/%E0%B4%B0%E0%B4%BE%E0%B4%9C%E0%B4%95%E0%B5%81%E0%B4%9F%E0%B5%81%E0%B4%82%E0%B4%AC%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BF%E0%B4%A8%E0%B5%8D-%E0%B4%B1%E0%B5%86-%E0%B4%95%E0%B4%A3%E0%B5%8D%E0%B4%A3%E0%B5%80%E0%B4%B0%E0%B5%8D-%E0%B4%A4%E0%B5%8B%E0%B4%B0%E0%B5%81%E0%B4%A8%E0%B5%8D%E0%B4%A8%E0%B4%BF%E0%B4%B2%E0%B5%8D%E0%B4%B2-062125143.html. பார்த்த நாள்: 30 March 2014. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]