உள்ளடக்கத்துக்குச் செல்

ஜானேசுவர் மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜானேசுவர் மிசுரா
Janeshwar Misra
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர்
பதவியில்
சூன் 1996 – மே 1997
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1989–1991
முன்னையவர்வி. பி. சிங்
பின்னவர்சரோஜ் துபே
தொகுதிஅலகபாத்து
பதவியில்
1977–1980
முன்னையவர்கேமாவதி நந்தன் பகுகுனா
பின்னவர்வி. பி. சிங்
தொகுதிஅலகபாத்து
பதவியில்
1969–1971
முன்னையவர்விஜயலட்சுமி பண்டித்
பின்னவர்வி. பி. சிங்
தொகுதிபுகுல்பர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-08-05)5 ஆகத்து 1933
பலியா மாவட்டம், இந்தியா
இறப்பு22 சனவரி 2010(2010-01-22) (அகவை 76)
பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்கங்கோதரி தேவி
பிள்ளைகள்2 மகள்கள்

ஜானேசுவர் மிசுரா (5 ஆகத்து 1933– 22 சனவரி 2010) என்பவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவை உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ராம் மனோகர் லோகியாவைக் குறிப்பிடும் வகையில், பொதுவுடைமை சித்தாந்தத்திற்கான இவரது அர்ப்பணிப்பிற்காக இவரை இளம் லோகியா என்று அழைத்தனர்.[1]

வாழ்க்கை

[தொகு]

ஜானேசுவர் ஆகத்து 5, 1933-ல் பலியாவில் உள்ள சுபநாதஹின் கிராமத்தில் பிறந்தார்.[2][3] இவர் இளங்கலை மற்றும் இளநிலை சட்டம் படிப்புகளை முடித்துள்ளார்.[4] கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஜானேசுவர் மிசுரா, பூர்ணா நந்த் இடைநிலைக் கல்லூரியின் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். மாணவராக இருந்தபோதே, சமாஜ்வாதி இளைஞர் சபாவில் சேர்ந்தார். ராம் மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நாராயணன் ஆகியோருடன் தொடர்பிலிருந்தார்.[2]

மக்களவை

[தொகு]

ஜானேசுவர் அலகாபாத் மக்களவைத் தொகுதியை மூன்று முறை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3] 1969-70ல் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள புல்பூர் தொகுதியிலிருந்து இந்திரா காந்தி அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த கே.டி.மாளவியாவை தோற்கடித்து முதன் முதலில் மக்களவை உறுப்பினரானார்.[3] பின்னர், 1977 தேர்தலில் அலகாபாத்-ஜமுனாபார் நாடாளுமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வி. பி. சிங்கை தோற்கடித்தார்.[5] இவர் ஆறாவது மக்களவை உறுப்பினராக, 1977-80, மற்றும் ஒன்பதாவது மக்களவை உறுப்பினராக, 1989-91 காலங்களில் பணியாற்றினார்.[4]

மத்திய அமைச்சர்

[தொகு]

ஜானேசுவர் மிசுரா, மொரார்ஜி தேசாய், சவுத்ரி சரண் சிங், வி. பி. சிங், சந்திரசேகர், எச். டி. தேவ கெளடா மற்றும் ஐ. கே. குஜரால் ஆகியோரின் அமைச்சரவையில் பணியாற்றினார்.[3][6] 1977 முதல் மத்திய இணை அமைச்சராக பணியாற்றினார். பெட்ரோலியம், நீர்வள இரசாயனங்கள் மற்றும் உரங்கள், எரிசக்தி, கப்பல் மற்றும் போக்குவரத்து, தொடர்பு மற்றும் இரயில்வே ஆகிய துறைகளையும் இவர் நிர்வகித்துள்ளார்.[6] 1990-91 காலகட்டத்தில் சந்திரசேகர் அரசில் ரயில்வே துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[1][6]

மாநிலங்களவை

[தொகு]

ஜானேசுவர் மிசுரா 1996-ல் மாநிலங்களவை உறுப்பினராக உத்தரப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் 2000[7] மற்றும் 2006[4] ஆண்டில் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பு

[தொகு]

மிசுரா 22 சனவரி 2010 அன்று அலகாபாத்தில் உள்ள தேஜ் பகதூர் சப்ரு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக இறந்தார்.[2][8] மிசுரா இறக்கும் போது, சமாஜ்வாதி கட்சியின் துணைத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[1] இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் மினா திவாரி.[6]

செல்வாக்கு

[தொகு]

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தான் அரசியலுக்கு வரக் காரணமாக அமைந்தவர் ஜானேசுவர் மிசுரா என்று புகழ்ந்துள்ளார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Socialist leader Janeshwar Mishra passes away
  2. 2.0 2.1 2.2 Janeshwar Mishra passes away, TNN, 22 January 2010, 10:39pm IST
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 SP leader Janeshwar Mishra died பரணிடப்பட்டது 17 பெப்பிரவரி 2015 at the வந்தவழி இயந்திரம், HT Correspondent/M Hasan, Hindustan Times Lucknow, 22 January 2010
  4. 4.0 4.1 4.2 Detailed Profile: Shri Janeshwar Mishra
  5. Socialist leader Janeshwar Mishra passes away
  6. 6.0 6.1 6.2 6.3 Veteran socialist leader Janeshwar Mishra dies, Lucknow, 22 Jan (PTI)
  7. "Jethmalani, Kesri's RS term ends on April 2, 2000". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
  8. SP leader Janeshwar Mishra dies at 76
  9. The party is over and the bill is due: Akhilesh Yadav, 14 March 2012, Tehelka, http://www.tehelka.com/story_main52.asp?filename=Ws140312UTTAR_PRADESH.asp பரணிடப்பட்டது 19 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானேசுவர்_மிசுரா&oldid=3755886" இலிருந்து மீள்விக்கப்பட்டது