ஜனனி ஜனநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜனனி ஜனநாயகம்
Janani Jananayagam
தனிநபர் தகவல்
பிறப்பு யாழ்ப்பாணம், இலங்கை[1]
தேசியம் பிரித்தானியர்
அரசியல் கட்சி சுயேட்சை
இருப்பிடம் லண்டன்[2]
படித்த கல்வி நிறுவனங்கள் மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
இம்பீரியல் கல்லூரி
இலண்டன்

INSEAD
பணி திட்ட முகாமையாளர்
இணையம் http://vote4jan.org/beta/

ஜனனி (ஜான்) ஜனநாயகம் என்பவர் பிரித்தானியத் தமிழரும், வங்கித் தொழில் நெறிஞரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், அரசியல்வாதியும் ஆவர். இவர் 2009 இல் இடம்பெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டன் பகுதியில் இருந்து சுயேட்சையாகப் போட்டியிட்டார்[3]. இவர் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஆதரவில் போட்டியிட்டார். 2009, ஜூன் 8 இல் நடந்த தேர்தலில் இவர் 50,000 வாக்குகளைப் பெற்றிருந்தும், வெற்றி பெறத் தவறினார்[4].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனனி, தனது பெரும்பாலான இளமைக் காலத்தை நைஜீரியாவிலும், சாம்பியாவிலும் கழித்தார். இவரின் பெற்றோர் அங்கு ஆசிரியத் தொழிலாற்றி வந்தனர்[1]. பின்னர் பெற்றோருடன் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார்[5]. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கணினியியலில் சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பிரயோக கணிதத்தில் முதுமாணிப் பட்டத்தையும், இன்சீட் வர்த்தகக் கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

தொழில் நெறிஞராக[தொகு]

கணினித் துறையில் சிலகாலம் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜனனி, பின்னர் வங்கி முகாமைத்துவத்தில் நாட்டம் கொண்டார். தற்போது இவர் முன்னணி இத்தாலிய வங்கியொன்றின் திட்ட முகாமையாளராக லண்டனிலும், ஜெர்மனியிலும் பணிபுரிகிறார்.

சமூக சேவகராக[தொகு]

1995ஆம் ஆண்டில் HURT என்ற பெயரில் மனித உரிமை இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். அத்துடன் இனவழிப்புக்கு எதிரான தமிழர் என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் செயற்படுகிறார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற வேட்பாளர்[தொகு]

2009இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களில் ஜனனி லண்டன் நகர சுயேட்சை வேட்பாளராக நின்றார். பின்வரும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இவர் தேர்தல் களத்தில் இறங்கினார்[6]:

 • மனித உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரம்
 • Financial transparency and effective regulation
 • Equality and diversity
 • Small Businesses and entrepreneurship
 • Ethical foreign policy
 • Animal welfare

இவருக்கு பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். பிரபல பாடகி மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ.) ஆதரவு தெரிவித்திருந்தார்[1]. அத்துடன் ஜனனிக்கு ஆதரவாக அவர் ஒரு ஒன்லைன் பிரச்சாரத்தையும் தொடங்கி பாடல் ஒன்றையும் பாடியிருந்தார்[1].

போட்டியிட்ட 19 கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களில், ஜனனி 50,014 வாக்குகள் (2..86%) பெற்று 8வதாக வந்தார்[7]. ஆனாலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு இவர் தெரிவாகவில்லை. ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் இதுவரை கிடைத்ததில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார்.

லண்டன் பகுதியில் எட்டு எம்.பி. இடங்கள் உள்ளன. இதில், 3 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், ஆளும் தொழிற் கட்சி 2 இடங்களையும் பெற்றன. லிபரல் மக்களாட்சிக் கட்சி, பசுமைக் கட்சி, இங்கிலாந்து சுயேச்சைக் கட்சி ஆகியோருக்கு தலா ஓர் இடம் கிடைத்தது[8].

ஒவ்வொரு லண்டன் லண்டன் தன்னாட்சி நகரங்களில் (London borough) ஜனனி பெற்ற வாக்குகள்:

நகரம் வாக்குகள் % நிலை நகரம் வாக்குகள் % நிலை நகரம் வாக்குகள் % நிலை
பார்க்கிங், டாகென்ஹாம்[9] 386 1.08% 10வது ஹாமர்சிமித் & ஃபூலம்[10] 140 0.35% 13வது லூவிஷாம்[11] 1,992 3.76% 8வது
பார்னெட்[12] 1,234 1.51% 8வது ஹாரிங்கி நியூஹம்[13] 3,520 7.40% 3வது
பெக்சிலி[14] 378 0.62% 11வது ஹரோ[15] 6,856 11.00% 3வது ரெட்பிரிட்ஜ்[16] 4,910 7.81% 6வது
பிரெண்ட்[17] 4,867 8.33% 5வது ஹாவரிங்[18] 203 0.33% 13வது தேம்ஸ் மீதான ரிச்மண்ட்[19] 147 0.28% 13வது
புரொம்லி[20] 619 0.71% 9வது ஹிலிங்டன் சவுத்வார்க்[21] 163 0.30% 13வது
காம்டன்[22] 121 0.26% 15வது ஹவுன்சுலோ[23] 1,054 2.09% 8வது சட்டன்[24] 1,664 3.40% 7வது
குரோய்டன்[25] 3,128 3.87% 8வது இஸ்லிங்டன்[26] 128 0.30% 15வது டவர் ஹாம்லெட்ஸ்[27] 109 0.24% 16வது
ஈலிங்[28] 4,716 6.51% 6வது கென்சிங்டன், செல்சி[29] 70 0.26% 15வது வால்த்தம் ஃபொரெஸ்ட்[30] 1,493 2.86% 8வது
என்ஃபீல்ட்[31] 1,194 1.83% 8வது தேம்ஸ் மீதான கிங்ஸ்டன்[32] 2,150 5.16% 6வது வான்ட்ஸ்வர்த்[33] 928 1.35% 8வது
கிரீனிச்[34] 773 1.53% 9வது லாம்பெத்[35] 176 0.31% 14வது வெஸ்ட்மின்ஸ்டர்[36] 100 0.27% 16வது
ஹாக்னி மேர்ட்டன்[37] 3,960 7.95% 6வது லண்டன் நகரம்[38] 4 0.19% =14வது

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "MIA's endorsement expected to boost Jananayagam's MEP prospects". தமிழ்நெட் (3 June 2009). பார்த்த நாள் 4 ஜூன் 2009.
 2. "Official list and contact details". ஐரோப்பிய நாடாளுமன்ற ஐக்கிய இராச்சிய அலுவலகம். பார்த்த நாள் 4 ஜூன் 2009.
 3. "Candidates". ஐரோப்பிய நாடாளுமன்ற ஐக்கிய இராச்சிய அலுவலகம். பார்த்த நாள் 4 சூன் 2009.
 4. Stop-Genocide’ candidate secures record result, but misses London seat
 5. "British Tamil contests seat for European Parliament". தமிழ்நெட் (15 மே 2009). பார்த்த நாள் 4 June 2009.
 6. "Policies". Vote4Kan. பார்த்த நாள் 4 சூன் 2009.
 7. "European Election 2009: London". பிபிசி (8 June 2009). பார்த்த நாள் 8 சூன் 2009.
 8. "European Election 2009: UK Results". பிபிசி (8 சூன் 2009). பார்த்த நாள் 8 சூன் 2009.
 9. "European Parliamentary Election Results". London Borough of Barking & Dagenham. பார்த்த நாள் 9 June 2009.
 10. "Hammersmith & Fulham declaration". London Borough of Hammersmith & Fulham. பார்த்த நாள் 9 June 2009.
 11. "Lewisham Council - Documents - European Parliamentary Election 4 June 2009". London Borough of Lewisham. பார்த்த நாள் 12 June 2009.
 12. "Barnet declaration". London Borough of Barnet. பார்த்த நாள் 9 June 2009.
 13. "European Parliamentary Election results 2009". Newham Council. பார்த்த நாள் 9 June 2009.
 14. "Bexley declaration". London Borough of Bexley. பார்த்த நாள் 9 June 2009.
 15. "European Parliamentary Election - Thursday 4th June 2009". Harrow Council. பார்த்த நாள் 9 June 2009.
 16. "European Election results". Redbridge i. பார்த்த நாள் 9 June 2009.
 17. "Election results for Brent". Brent Council. பார்த்த நாள் 9 June 2009.
 18. "Euro Election Results". Havering Council. பார்த்த நாள் 9 June 2009.
 19. "Richmond upon Thames declaration". London Borough of Richmond upon Thames. பார்த்த நாள் 9 June 2009.
 20. "European Parliamentary Election 4 June 2009 - result of poll for the local counting area of Bromley". London Borough of Bromley. பார்த்த நாள் 9 June 2009.
 21. "Southwark declaration". London Borough of Southwark. பார்த்த நாள் 9 June 2009.
 22. "European Parliamentary election results". Camden Council. பார்த்த நாள் 9 June 2009.
 23. "Hounslow declaration". London Borough of Hounslow. பார்த்த நாள் 9 June 2009.
 24. "Election and other news". London Borough of Sutton. பார்த்த நாள் 9 June 2009.
 25. "Croydon declaration". Croydon Council. பார்த்த நாள் 9 June 2009.
 26. "European Parliamentary Election 2009". Islington Council. பார்த்த நாள் 9 June 2009.
 27. "Results of the European Parliament Election for Tower Hamlets on June 4 2009". Tower Hamlets Council. பார்த்த நாள் 9 June 2009.
 28. "European Elections 2009". Ealing Council. பார்த்த நாள் 9 June 2009.
 29. "European Parliamentary Elections on 4 June 2009". Royal Borough of Kensington & Chelsea. பார்த்த நாள் 9 June 2009.
 30. "European election results". Waltham Forest Council. பார்த்த நாள் 9 June 2009.
 31. "Enfield declaration". Enfield Council. பார்த்த நாள் 9 June 2009.
 32. "European Parliamentary Election 2009 - Results". Royal Kingston. பார்த்த நாள் 9 June 2009.
 33. "Wandsworth declaration". Wandsworth Borough Council. பார்த்த நாள் 9 June 2009.
 34. "Greenwich declaration". Greenwich Council. பார்த்த நாள் 9 June 2009.
 35. "Lambeth declaration". Lambeth Council. பார்த்த நாள் 9 June 2009.
 36. "Westminster declaration". Westminster City Council. பார்த்த நாள் 9 June 2009.
 37. "Merton declaration". Merton Council. பார்த்த நாள் 9 June 2009.
 38. "City of London declaration". Westminster City Council. பார்த்த நாள் 9 June 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனனி_ஜனநாயகம்&oldid=2714619" இருந்து மீள்விக்கப்பட்டது