இனவழிப்புக்கு எதிரான தமிழர்
இனவழிப்புக்கு எதிரான தமிழர் (Tamils Against Genocide) என்பது ஒரு அரச-சார்பற்ற நிறுவனம். இது ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் கொலம்பியா நகரில் இயங்குகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும் ஈழப்போருக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது[1]. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழரை ஈழப்போரின் போது படுகொலை செய்ததாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இரண்டு இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக இவ்வமைப்பு அமெரிக்காவில் வழக்குத் தொடுத்தது. இவர்களது வழக்குரைஞராக அமெரிக்காவின் புகழ் பெற்ற வழக்கறிஞர் புரூஸ் பெயின் அமர்த்தப்பட்டார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-03-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190330144644/http://www.tamilsagainstgenocide.org/Contacts.aspx.
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2019-03-30 at the வந்தவழி இயந்திரம்