ஜகத்ஜித் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர் ஜகத்ஜித் சிங்
கபுர்த்தலாவின் மகாராஜா
படிமம்:Major-General H.H. Farzand-i-Dilband Rasikh- al-Iqtidad-i-Daulat-i-Inglishia, Raja-i-Rajagan, Maharaja Sir Jagatjit Singh, Bahadur, Maharaja of Kapurthala, GCSI , GCIE , GBE.jpg
ஜகத்ஜித் சிங் பகதூர், கபுர்தலா மகாராஜா.
கபுர்த்தலாவின் மகாராஜா
ஆட்சிக்காலம்3 செப்டம்பர் 1877 – 15 ஆகத்து 1947
முடிசூட்டுதல்24 நவமபர் கிப் பகதூர்
முன்னையவர்கரக் சிங் (ஒரு ராஜாவாக)
பின்னையவர்முடியாட்சி ஒழிக்கப்பட்டது
பிறப்புநவம்பர் 24, 1872(1872-11-24)
அரண்மனை, கபுர்த்தலா, கபுர்த்தலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா
இறப்பு19 சூன் 1949(1949-06-19) (அகவை 76)
தாஜ் விடுதி, மும்பை, இந்தியா[சான்று தேவை]
துணைவர்ஆறு மனைவிகள்
குடும்பம்ஐந்து மகன்களும், ஒரு மகளும்
அரசமரபுஅலுவாலியா வம்சம்
தந்தைகரக் சிங் சாகிப் பகதூர்
தாய்ஆனந்த் கௌர் சாகிபா
மதம்சீக்கியர்

சர் ஜகத்ஜித் சிங் சாகிப் பகதூர் (Sir Jagatjit Singh Sahib Bahadur) (24 நவம்பர் 1872 - 19 சூன் 1949) இவர் 1877 முதல் 1949 இல் தான் இறக்கும் வரை பிரிட்டிசு இந்தியாப் பேரரசில் கபுர்த்தலா என்ற சுதேச அரசின் ஆளும் மகாராஜா ஆவார். இவர் அக்டோபர் 16, 1877 அன்று கபுர்தலா மாநிலத்தின் அரியணையில் ஏறினார். நவம்பர் 24, 1890 இல் முழு ஆளும் அதிகாரங்களை ஏற்றுக்கொண்டார். பின்னர் உலகப் பயணி மற்றும் பிராங்கோபில் என ஒரு தொழிலைத் தொடங்கினார். இவர் அலுவாலியா சந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் 1911 இல் மகாராஜா என்ற பட்டத்தைப் பெற்றார். கபுர்த்தலா நகரில் அரண்மனைகளையும் தோட்டங்களையும் கட்டினார்; இவரது பிரதான அரண்மனையான ஜகத்ஜித் அரண்மனை என்பது வெர்சாய் அரண்மனையைப் போலவே இருந்தது.

குருநானக்கிற்கு சுல்தான்பூர் லோதியில் ஒரு குருத்வாராவையும் கட்டினார்.

இவர் 1925, 1927, மற்றும் 1929 ஆம் ஆண்டுகளில் ஜெனீவாவில் நடந்த உலக நாடுகள் சங்கத்தின் பொதுச் சபையின் இந்திய பிரதிநிதியாக இருந்தார். [1] 1931 இல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டார். மேலும் 1949 இல் தனது 76ஆவது வயதில் இறக்கும் போது பட்டியாலா, கிழக்கு பஞ்சாப் அரசுகளின் ஒன்றியத்தின் துணைநிலை ஆளுநராக இருந்தார். இவர் பிரிட்டிசு இராச்சியத்தில் உயர்நீதிமன்றத்தின் பணியாற்றிய ஒரு சில இந்திய நீதிபதிகளில் ஒருவரான சர்தார் பகத் சிங்கின் உறவினர். இவரது பேரன் அருண் சிங் ராஜீவ் காந்தி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்.

திருமணங்கள்[தொகு]

  • இவர் முதன்முதலில் 1886 ஏப்ரல் 16 ஆம் தேதி பாப்ரோலாவில் காங்ராவைச் சேர்ந்த மியான் ரஞ்சித் சிங் குலேரியாவின் மகள் மகாராணி அர்பன்சு கௌர் சாகிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். (இவர், இதய செயலிழப்பு காரணமாக 1941 அக்டோபர் 17 அன்று முசோரியில் இறந்தார்). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
  • 1891 ஆம் ஆண்டு கட்டோச் சர்தாரின் மகள் ராணி பார்வதி கௌர் சாகிபா என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். (இவர், பிப்ரவரி 20, 1944 இல் கபூர்தலாவில் இறந்தார்). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
  • 1892 ஆம் ஆண்டு பசாகரைச் சேர்ந்த ஒரு ராஜபுத்திர குடும்பத்தின் இளவரசி ராணி இலட்சுமி கௌர் சாகிபா என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். (இவர், செப்டம்பர் 1959 இல் கபூர்தலாவில் இறந்தார்). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
  • 1895இல் நான்காவதாக, சுபபாலின் திவானின் மகள் ராணி கனரி சாகிபாவி என்பவரை மணந்தார். (இவர், 1910 ஆம் ஆண்டு இறந்தார்). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர்.
  • இவரது ஐந்தாவது திருமணம் ராணி பிரேம் கௌர் சாகிபா என்கிற அனிதா தெல்கடோ என்பவருடன்,1908 சனவரி 28 அன்று பாரிஸில் நடந்தது. (பின்னர் விவாகரத்தானது). (இவர், 1890 இல் எசுப்பானியாவின் மாலாகாவில் பிறந்தவர். இதய செயலிழப்பால் மத்ரித்த்தில் 1962 சூலை 7 இல் இறந்தார்). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
  • இவரது ஆறாவது திருமணம், ராணி தாரா தேவி சாகிபா என்கிற யூஜீனியா மேரி க்ரோசுபோவா என்ற ஒரு நடிகையுடன் இருந்தது. இவர் செக் குடியரசின் நினா மேரி குரோசுபோவாவின் மகளாவார்.

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகத்ஜித்_சிங்&oldid=3016986" இருந்து மீள்விக்கப்பட்டது