அனிதா தெல்கடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனிதா டெல்கடோ பிரையன்ஸ் (Anita Delgado Briones) (1890-1962) இவர் எசுபானிய பிளமேன்கோ நடனக் கலைஞரும், ஆந்தாலூசியாவைச் சேர்ந்த பாடகரும் ஆவார். இவர் இந்தியாவின் கபுர்த்தலாவின் மகாராஜாவை மணந்தார்.

சுயசரிதை[தொகு]

இவர் 1890 பிப்ரவரி 8 அன்று மாலாகாவில் பிறந்தார். குடும்பம் மத்ரித்துக்கு குடிபெயர்ந்தது. அங்கு இவரது அழகும் சகோதரியின் அழகும் வரவேற்கப்பட்டது. ஓவியர்கள் ஜூலியோ ரோமெரோ டி டோரஸ்ஸும் ரிக்கார்டோ பரோஜாவும் தங்களது ஓவியத்திற்கு மாதிரியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அனிதா மறுத்துவிட்டார்.

மத்ரித்தில் எசுப்பாணிய மன்னர் பதிமூன்றாவது அல்போன்சோவின் திருமண விழாவின் போது நடந்த இவரது இசை நிகழ்ச்சியில் கபுர்த்தலாவின் மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) மன்னர் அரசு ஜகத்ஜித் சிங் இவரைச் சந்தித்தார். [1] இவர்கள் 1908 சனவரி 28 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவில் ஒரு சீக்கியத் திருமணத்திற்குப் பிறகு, இவர் தனது பெயரை மகாராணி பிரேம் கௌர் சாகிபா என்று மாற்றிக்கொண்டார். [2]

பின்னர் இவர்கள் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் பயணம் செய்தனர். "இம்ப்ரெஷனெஸ் டி மிஸ் வாயேஜஸ் எ லாஸ் இந்தியாஸ்" என்ற புத்தகத்த்தில் இதைப் பற்றி இவர் எழுதினார். இவர்களுக்கு அஜித் சிங் என்ற ஒரு மகன் பிறந்த்தார். (பிறப்பு: ஏப்ரல் 26, 1908), கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலும், தேராதூன் உள்ள இராணுவப் பள்ளியிலும் படித்தார். அஜித் சிங் அர்ஜெண்டினாவில் உள்ள இந்திய வர்த்தக ஆணையரின் உதவியாளராக இருந்தார். இவர் 1982 இல் இறந்தார்). முதல் உலகப் போரின் போது, இவரது கணவரின் 7 வது திருமணத்திற்குப் பின்னர் இவர்கள் பிரிந்தனர். இதன் விளைவாக, தெல்கடோ பாரிஸில் தனது செயலாளருடன் ரகசியமாக வசித்து வந்தார். பிரான்சுக்கு தனது நகைகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் வழியில் மூழ்கியது. நகைகள் மில்லியன் கணக்கானவை என்று கூறப்படுகிறது. [3] இவர் 1962 சூலை 7 அன்று மத்ரித்தில் இறந்தார்.[சான்று தேவை]

ஊடகங்களில்[தொகு]

எசுப்பானிய நடிகை பெனிலோப் குரூஸ் என்பவரின் நடிப்பில் லா பிரின்செசா டி கபுர்தலா என்ற அனிதாவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு திரைப்படம் 2006 இல் படப்பிடிப்பு தொடங்கவிருந்தது. ஆனால், ஜகத்ஜித் சிங்கின் வழித்தோன்றல், சத்ருஜித் சிங், ஜேவியர் மோரோவின் புதினம் உண்மையை சிதைக்கிறது என்று கருதுவதால், படப்பிடிப்பை எதிர்த்தார். குறிப்பாக மகாராஜா அனிதாவை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் காரணமாக இருந்தது. [4]

புகைப்படத் தொகுப்பு[தொகு]

எழுத்துகளில்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_தெல்கடோ&oldid=3017722" இருந்து மீள்விக்கப்பட்டது