உள்ளடக்கத்துக்குச் செல்

பிளமேன்கோ இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளெமேன்கோ
நாகரிகம் துவக்கம்
  • அந்தலூசிய
  • எசுப்பானிய உரோமை
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
Subgenres
புதிய பிளமேன்கோ (nuevo flamenco)
இசை வகை
Flamenco chill (with downtempo)
மற்றவை
பிளெமேன்கோ குழு. பாடுபவர் காலிப் பெட்டி (கயோன்) மீது அமர்ந்து கைகளால் பெட்டியைத் தட்டுகிறார்.
ஆணின் உடை குறித்து நல்ல விளக்கம் தருகின்றது.
பெலன் மாயா - புகழ்பெற்ற நடனமணி

பிளமேன்கோ (Flamenco, எசுப்பானிய ஒலிப்பு: [flaˈmeŋko]) எசுப்பானியாவின் நாட்டார் இசை மற்றும் நடன வகையாகும். இது தெற்கு எசுப்பானியாவின் அண்டலூசியா பகுதிக்கு உரியதாகும். இதில் கான்டெ (பாடுதல்), கிதார் (கித்தாரிசை), பாய்லெ (நடனம்) மற்றும் பால்மாசு (கைத்தட்டல்) ஆகியன உள்ளடங்கி உள்ளன. இலக்கியங்களில் முதன்முறையாக 1774இல் குறிப்பிடப்பட்டாலும் இவ்வகை இசை அந்துலூசிய மற்றும் உரோமை மக்களின் இசை,நடனப் பாணிகளிலிருந்து உரவாகியுள்ளது தெளிபு.[1][2][3] பிளெமேன்கோ எசுப்பானியாவின் உரோமை மக்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது. பல புகழ்பெற்ற பிளெமேன்கோ கலைஞர்கள் இந்த இனத்திலிருந்து வந்தவர்களே. இவ்வகை இசை முதன்முதலாக 18ஆவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து 19ஆவது நூற்றாண்டில் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது.[4]

அண்மை ஆண்டுகளில் பிளெமேன்கோ உலகெங்கும் பரவலாகப் புகழ்பெற்று வருகின்றது; பல நாடுகளில் கற்பிக்கப்படுகின்றது. எசுப்பானியாவில் உள்ளதைவிட சப்பானில் கூடுதலான பிளெமேன்கோ அகாதமிகள் உள்ளன.[5][6] நவம்பர் 16, 2010 ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பிளெமேன்கோ இசையை மாந்த பாரம்பரியத்தின் வாய்வழி மற்றும் காணவியலா சிறப்புக்கூறுகளில் ஒன்றாக ஏற்றுள்ளது.[7]

மேற்சான்றுகள்[தொகு]

  1. In the book Cartas Marruecas by José Cadalso
  2. Ríos Ruiz notes that the origins and development of Flamenco are well documented: "the theatre movement of sainetes (one-act plays) and tonadillas, popular song books and song sheets, customs, studies of dances, and toques,perfection, newspapers, graphic documents in paintings and engravings...in continuous evolution together with rhythm, the poetic stanzas, and the ambiance". Ríos Ruiz Ayer y hoy del cante flamenco, Ediciones ISTMO, Tres Cantos (Madrid), 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7090-311-X
  3. See the third definition for "flamenco" in the Dictionary of Real Academia Española.
  4. Washabaugh, William (1996). Flamenco: Passion, Politics, and Popular Culture. Oxford, England: Berg Publishers. pp. 38–52.
  5. Mendoza, Gabriela (2011), "Ser flamenco no es una música, es un estilo de vida", El Diario de Hoy, p. 52
  6. En El Salvador la agrupación Alma Flamenca es considerada la máxima representante y pionera de este movimiento musical. Mendoza, Gabriela (2011), "Ser flamenco no es una música, es un estilo de vida", El Diario de Hoy, p. 52
  7. El flamenco es declarado Patrimonio Cultural Inmaterial de la Humanidad por la Unesco, Yahoo Noticias, 16 de noviembre de 2010, consultado el mismo día.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளமேன்கோ_இசை&oldid=2697840" இலிருந்து மீள்விக்கப்பட்டது