உள்ளடக்கத்துக்குச் செல்

ச. க. பாசுகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. க. பாசுகரன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சந்திரோத் கல்யாதன் பாஸ்கரன்
பிறப்பு(1941-05-05)5 மே 1941
தலச்சேரி, கேரளம், இந்தியா
இறப்பு21 நவம்பர் 2020(2020-11-21) (அகவை 79)
ஹியூஸ்டன், டெக்சஸ்,அமெரிக்கா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்துவீச்சாளர்
உறவினர்கள்சி. கே. விஜயன் (சகோதரர்)
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1957/58–1965/66கேரள துடுப்பாட்ட அணி
1966/67–1968/69தமிழ்நாடு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது
ஆட்டங்கள் 42
ஓட்டங்கள் 580
மட்டையாட்ட சராசரி 11.60
100கள்/50கள் 0/2
அதியுயர் ஓட்டம் 76*
வீசிய பந்துகள் 5,243
வீழ்த்தல்கள் 106
பந்துவீச்சு சராசரி 29.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 7/86
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
28/–
மூலம்: ESPNcricinfo, 17 மே 2016

சந்திரோத் கல்யாதன் பாஸ்கரன் (Chandroth Kalyadan Bhaskaran 5 மே 1941 – 21 நவம்பர் 2020) ஓர் இந்திய மேனாள் முதல்தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் கேரளா மற்றும் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். 1965 இல் சிலோனுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற தேர்வுப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். "அறுபதுகளில் நாட்டின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக்" கருதப்பட்டார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

தெல்லிச்சேரியில் (தற்போது தலச்சேரி) பிறந்த பாஸ்கரன் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார். [2] தனது 16 ஆவது வயதில் 1957 திசம்பரில் கேரளாவுக்காக முதல்தரப் போட்டியில் அறிமுகமானார் [3] சனவரி 1965 இல், அகமதாபாத்தில் சிலோனுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற தேர்வுப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். [4] 1967-68 இரஞ்சிக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த தமிழக அணியில் விளையாடினார். பம்பாய்க்கு எதிரான இறுதிப் போட்டியில், முதல் ஆட்டப்பகுதியில்ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களும் 68 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.[5] இவர் மொத்தம் 42 முதல்தரப் போட்டிகளில் பங்கேற்று 106 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.

இவர், இயூசுடனில் மருத்துவராகப் பணியாற்றினார், விளையாட்டு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றார். மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். 2006 ஆம் ஆண்டில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க "மிஷன் கோல்ட் ஃபார் இந்தியா" நிறுவனத்தைத் தொடங்கினார். [6]

பாஸ்கரனின் சகோதரர் சி.கே.விஜயனும் கேரளாவுக்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.

21 நவம்பர் 2020 இல் இயூசுடனில் தனது 79 ஆவது வயதில் காலமானார் [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rayan, Stan (9 November 2006). "American solution for Indian drought". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  2. Guha, Ramachandra (20 January 2002). "Warriors from Kerala". தி இந்து. Archived from the original on 16 November 2003. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  3. "First-Class Matches played by Chandroth Bhaskaran". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  4. "India v Ceylon in 1964/65". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  5. "Bombay v Madras in 1967/68". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  6. Rayan, Stan (9 November 2006). "American solution for Indian drought". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.Rayan, Stan (9 November 2006). "American solution for Indian drought". The Hindu. Retrieved 16 June 2016.
  7. Thiruvallath, Abhinath. "Dr. CK Bhaskaran Nair, first Keralite to play for India in Test Cricket, passes away". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.

வெளி இணைப்புகள்[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ச. க. பாசுகரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._க._பாசுகரன்&oldid=3971764" இலிருந்து மீள்விக்கப்பட்டது