சௌகத் அலி (வங்கதேச அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌகத் அலி
தேசிய நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர்
பதவியில்
25 சனவரி 2009 – 24 சனவரி 2014
பிரதமர்சேக் அசீனா
முன்னையவர்அக்தர் அமீது சித்திக்
பின்னவர்பசல் ராபி மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சனவரி 1937 (1937-01-27) (அகவை 87)
சரியத்பூர் மாவட்டம், பிரித்தானிய இந்தியா, தற்போது வங்காளதேசம்
அரசியல் கட்சிஅவாமி லீக்
வாழிடம்(s)டாக்கா, வங்காளதேசம்
முன்னாள் கல்லூரிதாக்கா பல்கலைக்கழகம்
தொழில்இராணுவ அதிகாரி, அரசியல்வாதி
Military service
பற்றிணைப்பு வங்காளதேசம்
 பாக்கித்தான் (1971க்கு முன்)
கிளை/சேவை
சேவை ஆண்டுகள்
தரம் கர்னல்
கட்டளைகட்டளை அலுவலக இயக்குநர்
போர்கள்/யுத்தங்கள்வங்காளதேச விடுதலைப் போர்

கர்னர் சௌகத் அலி (Shawkat Ali) ( (பிறப்பு 27 சனவரி 1937 ) இவர் ஓர் வங்காளதேச அரசியல்வாதியும், தேசிய நாடாளுமன்றத்தின் முன்னாள் துணைச் சபாநாயகரும் ஆவார். இவர் அவாமி லீக் கட்சியில் உறுப்பினராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் உள்ளார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் பிரிட்டிசு இந்தியாவில் (இப்போது வங்காளதேசம்) சரியத்பூரில் முன்சி முபாரக் மற்றும் மாலேகா பேகம் ஆகியோருக்குப் இவர் ஒன்பது குழந்தைகளில் மூத்த மகனாக்ப் பிறந்தார். இவருக்கு திருமணமாகி பைரோசு சௌகத் அலி, காலித் சௌகத் அலி என்ற இரு மகன்களும்,மெரினா சௌகத் அலிஎன்ற ஒரு மகளும் இருக்கின்றனர். [1] இவர் தனது இளங்கலை சட்டப்படிப்பை 1958 ஆம் ஆண்டில் தாக்கா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கொமிலா சட்டக் கல்லூரியில் படித்தார். அடுத்த ஆண்டு பாக்கித்தான் இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார்.

அகர்தலா சதி வழக்கு[தொகு]

1968 ஆம் ஆண்டில் இவர் கலபதியாக இருக்கும்போது பாக்கித்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரிக்க ஒரு சதிகாரராக அகர்தலா சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 35 பேரில் 26 வது இடத்தில் இவர் இருந்தார். [2] ஆரம்பத்தில் இவர் ஒரு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், ஆனால் ஒரு குடிமை விசாரணையிலிருந்து இராணுவத்தினர் அதிக நன்மை பெறுகிறார்கள் என்று பாக்கித்தான் அரசு உணர்ந்தது. பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு அடுத்த ஆண்டு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. இவர் 1969 இல் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [1]

இந்த வழக்கு ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் பிறரை சிக்கவைப்பதற்காக மட்டுமே என்று பெரும்பாலும் கருதப்பட்டாலும், [3] 2010 ஆம் ஆண்டில், பிப்ரவரி 22, 2011 அன்று வழக்கு திரும்பப் பெறப்பட்ட ஆண்டு நிறைவையொட்டி, இவர் பாராளுமன்றத்தில் ஒரு வாக்குமூலம் அளித்தார்.கிழக்கு பாகிஸ்தானின் தேசத்துரோகம் மற்றும் பிரிவினைக்காக அவர்கள் ஷேக் முஜிபுரின் கீழ் ஒரு சங்கிராம் பரிசத்தை உருவாக்கியதாக ஒப்புக்கொண்டார். [4] [5]

வங்கதேச ராணுவக் காலத்தில்[தொகு]

வங்காளதேசம் பாக்கித்தானில் இருந்து பிரிந்து சுதந்திரம் அறிவித்து, போர் ஆரம்பித்தபின், வங்காளாதேச விடுதலைப் போரை எதிர்த்துப் போராடுவதற்காக 1971 இல் வங்காளதேசப் படைகள் அமைக்கப்பட்ட பின்னர் இவர் மீண்டும் இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். [1] ஷேக் முஜிபுர் ரகுமான் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டில் இவர் கர்னலாக இருந்தபோது இரண்டாவது முறையாக ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஏனெனில் இவர் முஜிபூருடன் நெருக்கமாக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1979, 1991, 1996, 2001 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் பதவியில் இருந்த காலத்தில், பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். இதில் கப்பல் அமைச்சகத்தின் நிலைக்குழு மற்றும் தனியார் உறுப்பினர்கள் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் பற்றிய குழு 1996 மற்றும் 2001 க்கு இடையில் அவற்றின் தலைவராக பணியாற்றினார். இவர் உச்ச நீதிமன்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞராகவும் இருந்தார்.

அவாமி லீக் வெற்றியைத் தொடர்ந்து, சனவரி 25, 2009 அன்று ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் துணைச் சபாநயகராக இவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். [6]

இவர் துணைச் சபாநாயகராக இருந்த காலத்தில் சபாநாயகர் அப்துல் ஹமீத் இல்லாதபோது பாராளுமன்றத்தின் பல அமர்வுகளுக்கு தலைமை தாங்கினார். [7] [8] [9]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அகர்தலா சதி வழக்கு பற்றி இரண்டு புத்தகங்களை இவர் ஆங்கிலத்திலும் பங்களாவிலும் எழுதியுள்ளார் . [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Biography Deputy Speaker" (PDF). parliament.gov.bd. Parliament of Bangladesh. Archived from the original (PDF) on 23 ஆகத்து 2011. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டெம்பர் 2011.
  2. Begum, Shahida (2012). "Agartala Conspiracy Case". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (2nd ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Agartala_Conspiracy_Case. 
  3. Banglapedia: National Encyclopedia of Bangladesh. 
  4. "'Agartala conspiracy case was not false'". bdnews24.com. 23 பெப்பிரவரி 2011. Archived from the original on 19 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டெம்பர் 2011.
  5. "Textbook 'incorrectly' describes Agartala Case: Shawkat". 12 June 2010. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=142345. பார்த்த நாள்: 2 September 2011. 
  6. "Hold ruling party accountable". The Daily Star. 26 January 2009. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=72956. பார்த்த நாள்: 23 September 2011. 
  7. "Power outages to continue until Nov". bdnews24.com. 7 சூன் 2011. Archived from the original on 2 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டெம்பர் 2011.
  8. Mahbub, Sumon; Chowdhury, Moinul Haque (29 சூன் 2011). "55 amendments proposed in report". bdnews24.com. Archived from the original on 2 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டெம்பர் 2011.
  9. "EC planning to put EVM in place: info minister". bdnews24.com. 23 ஆகத்து 2011. Archived from the original on 2 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டெம்பர் 2011.