கலபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலபதி என்பது கடலோடும் கப்பற்தலைவனின் சட்டபூர்வ தகுதியாகும். அனேக வர்த்தக ஆவணங்களில் தலைவன் என்றே இவர் குறிப்பிடப்படுகிறார். கலபதியானவர் குடிமகனாகவோ அல்லது கடற்படை உறுப்பினராகவோ இருத்தல் முடியும். ஒரு கப்பலின் கட்டளைத்தலைவர் என்னும் வகையில் அவருக்கு பரந்த சட்டவுரிமை உண்டு. இவ்வுரிமையானது கலகங்களை அடக்கும் பொருட்டும் கடற் கொள்ளைகளை எதிர்க்கும் பொருட்டும் உயிர்ச் சேதம் உண்டாகக்கூடிய நடவடிக்கைகளையும் ஆணையிடும் அனுமதியை அளிக்கிறது.கலகம் என்பது, முக்கியமாக, கப்பலை கைப்பறும் நோக்குடன் கலபதியின் சட்டபூர்வ கட்டளைகளுக்கு அடிபணியாமல் இருப்பதைக் குறிக்கும். எனினும், பரவலான நம்பிக்கைக்கு மாறாக, ஒரு திருமணத்தை நடத்தி வைக்கும் சிறப்பு சட்டபூர்வ அதிகாரம் எதுவும் கலபதிக்கு கிடையாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலபதி&oldid=1482239" இலிருந்து மீள்விக்கப்பட்டது