முக்தி வாகினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முக்தி வாகினி (Mukti Bahini) (வங்காள: মুক্তি বাহিনী[1][2]இதனை வங்காளதேச விடுதலைப் படைகள் என்றும் அழைப்பர். வங்காளதேச விடுதலைப் போரின் போது, பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்த வங்காளப் போர் வீரர்கள் மற்றும் படை அதிகாரிகளைக் கொண்டு முக்தி வாகினி படை அமைக்கப்பட்டது. முக்தி வாகினி படையில் உள்ளூர் வங்காள இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் தன்னிச்சையாக இணைந்தனர். இந்திய இராணுவத்தின் ஒத்துழைப்புடன் முக்தி வாகினி நடத்திய வங்காளதேச விடுதலைப் போரின் முடிவில், கிழக்கு பாகிஸ்தான் என முன்பு அறியப்பட்ட பகுதி டிசம்பர் 1971-இல் வங்காளதேசம் எனும் புதிய நாடு உருவானது. [3]

வரலாறு[தொகு]

25 மார்ச் 1971 அன்று வங்கதேச தந்தை எனப் போற்றப்படும் சேக் முஜிபுர் ரகுமான், வங்காளதேச விடுதலைக்கு, பாகிஸ்தான் படைவீரர்களுக்கு எதிராகப் போரிட வங்காள மக்கள் தாங்கள் தாங்களாகவே முன் வர வேண்டும் கோரிக்கை விடுத்தார். [4]

சேக் முஜ்புர் ரஹ்மான் தலமையில் தற்காலிக வங்காளதேச அரசு 4 ஏப்ரல் 1971-இல் அமைக்கப்பட்டது. இவ்வரசின் கீழ் இராணுவத் தலைவர் உஸ்மானி தலைமையில் இராணுவக் குழு அமைக்கப்பட்டது. வங்காளதேசத்தை 11 பிரதேசங்களாகப் பிரித்து, பிரதேச இராணுவத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.[5] கிழங்கு வங்காளப் படைப்பிரிவு, கிழக்கு பாகிஸ்தான் துப்பாக்கிகள் பிரிவு மற்றும் முக்தி வாகினி படைகளைக் கொண்டு 4 ஏப்ரல் 1971-இல் துவக்கப்பட்ட வங்காளதேச இராணுவத்திற்கு ஜெனரல் உஸ்மானி தலைமை வகித்தார். [6]

இந்திய – பாகிஸ்தான் போரின் போது, முக்திவாகினி படையினரும் கூட்டு சேர்ந்து பாகிஸ்தான் படைவீரர்கள் மீது போர் தொடுத்தனர்.[7][7][8]

பின்னனி[தொகு]

வங்காளதேச விடுதலைப் போரின் போது பயன்படுத்தப் பட்ட வங்கதேசக் கொடி

1971-இல் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், கிழக்கு பாகிஸ்தானின் சேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி, பாகிஸ்தானின் நடுவண் அரசில் ஆட்சி அமைக்கப் போதுமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் யாகியாகானும், மேற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் சேக் முஜிபுர் ரஹ்மானை ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சேக் முஜிபுர் ரஹ்மான் 7 மார்ச் 197-இல் கிழக்கு பாகிஸ்தான் எனப்படும் வங்காளதேசத்தை சுதந்திர தனி நாடாக அறிவித்தார்.[9]

இதைத் தொடர்ந்து அதே நாளில் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர் யாகியாகான், சேக் முஜிபுர் ரஹ்மானை தேசத் துரோகி என அறிவித்தார்.[10][11] மேலும் பாகிஸ்தான் இராணுவம் வங்காளதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அவாமி லீக் கட்சித் தலைவர்களை கைது செய்ததுடன், முக்தி வாகினி படையினருடன் மோதியது.

தாக்குதல்கள்[தொகு]

மேற்கு பாகிஸ்தான் படையினர் (பச்சை நிறம்) மற்றும் முக்தி வாகினி படையினர் (சிவப்பு நிறம்) மார்ச், 1971

25 மார்ச் 1971 அன்று கிழக்கு பாகிஸ்தானில் (வங்காள தேசம்) இராணுவச் சட்டம் செயல்படுத்தப்பட்டது. வெளிநாட்டுப் பத்திரிக்கைச் செய்தியாளர்களை பாகிஸ்தான் இராணுவம் வெளியேற்றியது. அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது. கட்சியின் தலவர் சேக் முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக, முக்தி வாகினி படைகளுடன் சேர்ந்து கிழக்கு பாகிஸ்தான் துப்பாக்கிப் படைப் பிரிவுகளும், கிழக்கு வங்காள போர்படைப் படை பிரிவு வீரர்களும் தாக்குதல்கள் தொடுத்தது.[12] இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் படைவீரர்கள் கண்மூடித்தனமான வங்கதேச மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். இத்தாக்குதல்களில் பல்லாயிரம் வங்காள மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால் காஜிபூர், காரிப்பூர், சில்ஹெட், தலாய், ரங்கமதி-மகால்சாரி, குஸ்தியா, தருயின், பரிசால் ஆகிய இடங்களில் முக்திவாகினி படையினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் பெரும் போர் நடைபெற்றது.

முக்தி வாகினி – இந்தியக் கூட்டணிப் படைகள்[தொகு]

பாகிஸ்தான் இராணுவத் தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் ஏ. ஏ. கே. நியாசி, இந்திய இராணுவத் தலைவர் ஜெகத் சிங் அரோராவிடம் சரணாகதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடம் காட்சி

இந்நிலையில் இந்திய அரசு முக்தி வாகினி போராட்ட வீரர்களுடன் கூட்டணி அமைத்து, மார்ச் 1971-இல் கிழக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் மீது போர் தொடுத்தது. இந்திய இராணுவத்தின் விமானப் படைகள் கிழக்கு பாகிஸ்தான் நிலைகள் மீது சரமாரி தாக்குதல்கள் துவக்கியது. போரின் முடிவில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் இராணுவத் தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் ஏ. ஏ. கே. நியாசி, 90,000 பாகிஸ்தான் இராணுவ வீரர்களுடன், இந்திய இராணுவத் தலைவர் ஜெகத் சிங் அரோராவிடம் சரணாகதி அடைந்து சரணாகாதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். 6 டிசம்பர் 1971-இல் சேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான சுதந்திர வங்காளதேச அரசை இந்தியாவும், பூடானும் அங்கீகாரம் செய்தது.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Rounaq Jahan (February 1973). "Bangladesh in 1972: Nation Building in a New State". Asian Survey 13 (2): 31. doi:10.2307/2642736. 
 2. Benvenisti, Eyal (23 February 2012). The International Law of Occupation. Oxford University Press. பக். 189–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-163957-9. https://books.google.com/books?id=f19hVb54_s8C&pg=PA189. 
 3. Alagappa, ed. by Muthiah (2001). Coercion and governance : the declining political role of the military in Asia. Stanford, Calif.: Stanford Univ. Press. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0804742278. 
 4. Abu Md. Delwar Hossain (2012), "Operation Searchlight", in Sirajul Islam and Ahmed A. Jamal (ed.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), Asiatic Society of Bangladesh
 5. The Colonel Who Would Not Repent: The Bangladesh War and Its Unquiet Legacy, Salil Tripathi, Yale University Press, 2016, pg 146.
 6. South Asian Crisis: India — Pakistan — Bangla Desh, Robert Jackson, Springer, 1972, pgs. 33, 133
 7. 7.0 7.1 Stanton, Andrea L. (2012-01-05) (in en). Cultural Sociology of the Middle East, Asia, and Africa: An Encyclopedia. SAGE. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781412981767. https://books.google.com/books?id=GtCL2OYsH6wC. 
 8. "The battle for Bangladesh".
 9. "1971 war: Witness to history" (16 December 2015). பார்த்த நாள் 9 January 2016.
 10. "East Pakistan Secedes, Civil war breaks out". Boston Globe. பார்த்த நாள் 9 January 2016.
 11. "Civil war flares in East-Pakistan". The Deseret News. பார்த்த நாள் 9 January 2016.
 12. McDermott, Rachel Fell; Gordon, Leonard A.; T. Embree, Ainslie; Pritchett, Frances W.; Dalton, Dennis (2013). Sources of Indian Tradition Modern India, Pakistan, and Bangladesh (Third edition. ). New York: Columbia University Press. பக். 851. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780231510929. 
 13. "Bhutan, not India, was first to recognize Bangladesh". PTI. பார்த்த நாள் 14 January 2016.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தி_வாகினி&oldid=2180037" இருந்து மீள்விக்கப்பட்டது