சைப்பேன் நாணல் கதிர்க்குருவி
| சைப்பேன் நாணல் கதிர்க்குருவி | |
|---|---|
| சைப்பேன் நாணல் கதிர்க்குருவி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வரிசை: | |
| குடும்பம்: | அக்ரோசெபாலிடே
|
| பேரினம்: | அக்ரோசெபாலசு
|
| இனம்: | A. hiwae
|
| இருசொற் பெயரீடு | |
| Acrocephalus hiwae யாமாசினா, 1942) | |
சைப்பேன் நாணல் கதிர்க்குருவி (Saipan reed warbler)(அக்ரோசெபாலசு ஹிவே) என்பது வடக்கு மரியானா தீவுகளில் காணப்படும் மிக அருகிய இன கதிர்க்குருவி சிற்றினம் ஆகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]சில வகைப்பாட்டியல் அறிஞர்கள் சில சமயங்களில் அழிந்துபோன நைட்டிங்கேல் நாணல் கதிர்க்குருவியின் (ஏ. லூசினியசு) துணையினமாக இதனைக் கருதுகின்றனர்.
வாழிடம்
[தொகு]இது சைப்பேன் மற்றும் அலமகன் தீவுகளில் காணப்படுகிறது. 2009ஆம் ஆண்டில் சைப்பேனில் 2700 பறவைகள் இருந்ததாகவும், 2010ஆம் ஆண்டில் அலமகனில் 950 பறவைகள் இருந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இது ஈரநிலங்கள், முட்கள் மற்றும் காடுகளின் ஓரங்களில் வாழ்கிறது.
விளக்கம்
[தொகு]சைப்பேன் நாணல் கதிர்க்குருவி தோராயமாக 17 cm (6.7 அங்) நீளமும், சாம்பல் கலந்த ஆலிவ்-பழுப்பு நிறத்தில் வெளிர்-மஞ்சள் நிறத்தின் கீழ்ப்பகுதி காணப்படும். பெண் ஆணை விடச் சற்று சிறியது. மற்ற நாணல் கதிர்க்குருவி சிற்றினங்களுடன் ஒப்பிடும்போது இரு பாலினருக்கும் நீண்ட அலகு உள்ளது.
பாதுகாப்பு
[தொகு]நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்தின் விளைவாக வாழ்விட அழிவு, ஆக்கிரமிப்பு இனங்களின் அறிமுகம் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஆகியவை சைப்பேன் நாணல் கதிர்க்குருவியின் உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல்களில் அடங்கும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rounds, Rachel; Radley, Paul. "Nightingale Reed-Warbler (Acrocephalus luscinia)". Web Page of Pacific Bird Conservation, Hawaii. Archived from the original on 21 September 2015. Retrieved 21 September 2015.
- ↑ "Saipan Reed-warbler". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/species/103780118/125502795. பார்த்த நாள்: 11 December 2020.
