அக்ரோசெபாலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ரோசெபாலசு
பெரிய நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு அருண்டினேசியசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவைகள்
வரிசை: குருயுபார்மிசு
குடும்பம்: ராலிடே
பேரினம்: அக்ரோசெபாலசு
சிற்றினம்

சுமார் 35, உரையினைப் பார்க்கவு.

அக்ரோசெபாலசு (Acrocephalus) எனும் கதிர்குருவிகள் சிறிய, பூச்சியுண்ணுகின்ற பேரினமாகும். இவை பாசெரின் வரிசையினைச் சார்ந்த பறவைகள். முன்னதாக இவை பாராஃபைலெடிக் தொல்லுலக கதிர்குருவி தொகுப்பில் வைக்கப்பட்டன. தற்பொழுது இவை சதுப்பு மற்றும் மர கதிர்குருவி குடும்பமான அக்ரோசெபாலிடே என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை சில நேரங்களில் சதுப்பு கதிர்குருவி அல்லது நாணல் கதிர்குருவி என அழைக்கப்படுவதால் சில குழப்பங்கள் ஏற்படுகிறது.

இவை பொதுவாக சதுப்புநிலங்கள் அல்லது பிற ஈரநிலங்களுடன் தொடர்புடைய மந்தமான பழுப்பு நிற கதிர்குருவிகளாகும். சில கோடுகளுடனும், மற்றவை கோடுகள் இல்லாமலும் காணப்படும். மிதவெப்ப மண்டலங்களில் இனப்பெருக்கம் செய்யும் பல இனங்கள் வலசை போகும் வகையின.

இந்த பேரினம் வெப்பமண்டல அமைதிப் பெருங்கடல் தீவுகள் முழுவதும் பல சிற்றினங்களாகப் பெரிதும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக இத்தீவுகளுக்கே உரித்தன அகணிய உயிரியாக பல சிற்றினங்கள் உள்ளன. இவற்றில் பல அருகிய இனங்களாக உள்ளன. இவற்றில் பல சிற்றினங்கள் (மரியானா தீவுக்குச் சொந்தமான உயிரினங்களில் ஒன்று மற்றும் பிரெஞ்சு பாலினீசியாவிலிருந்து வந்த இரண்டு சிற்றினங்கள் உட்பட) ஏற்கனவே அற்றுவிட்ட இனமாகின .

இப்பேரினத்தின் மிகவும் புதிரான இனமான, பெரிய-அலகு நாணல் கதிர்குருவி (ஏ. ஓரினசு), மார்ச், 2006இல் தாய்லாந்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2009 கோடையில் ஆப்கானித்தானின் தொலைதூர மூலையிலும் காணப்பட்டது. இந்த சமீபத்திய பார்வைகளுக்கு முன்பு, இது 1867ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே கண்டறியப்பட்டது.

பல இனங்கள் தட்டையான தலையினைக் கொண்டுள்ளன. இதனால் இப்பேரினம் இப்பெயரினைப் பெற்றது. அக்ரோசெபாலசு என்ற பேரினப் பெயர் பண்டைய கிரேக்க அக்ரோசிலிருந்து வந்தது. இதற்கு "மிக உயர்ந்தது", மற்றும் கெஃபேல், "தலை" என்று பொருள். நாமன் மற்றும் நாமன் akros என்பதை "கூர்மையான முனை" எனப் பொருள் கொண்டனர்.[1]

சிற்றினப் பட்டியல்[தொகு]

ஐரோப்பிய ஆரிய நாணல் கதிர்குருவி ஒரு பொதுவான கொக்கு இளம் குஞ்சு.
  • மீசைக் கதிர்குருவி, அக்ரோசெபாலசு மெலனோபோகன்
  • தண்ணீர்க் கதிர்குருவி, அக்ரோசெபாலசு பலுடிகோலா
  • புல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு ஸ்கொனோபெனசு
  • ஸ்பெக்கிள்ட் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலஸ் சோர்கோபிலசு
  • கருப்பு-புருவம் கொண்ட நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு பிஸ்ட்ரிஜிசெப்சு
  • நெல்வயல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு அக்ரிகோலா
  • மஞ்சூரியன் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு டாங்கோரம் (சில நேரங்களில் ஏ. அக்ரிகோலாவில் சேர்க்கப்பட்டுள்ளது)
  • மழுங்கிய சிறகு கதிர்குருவி, அக்ரோசெபாலசு கான்சினென்சு
  • ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர் குருவி, அக்ரோசெபாலசு ஸ்கிர்பேசியசு
  • ஆப்பிரிக்க நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு பேட்டிகேட்டசு
  • பிளித் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு டுமெட்டோரம்
  • சதுப்பு கதிர்குருவி, அக்ரோசெபாலசு பலஸ்ட்ரிசு
  • பெரிய நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு அருண்டினேசியசு
  • ஓரியண்டல் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு ஓரியண்டலிசு
  • கிளாமரஸ் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு ஸ்டென்டோரியசு
  • பெரிய அலகு நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு ஓரினசு
  • பாஸ்ரா நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு கிரிசெல்டிசு
  • ஆத்திரேலிய நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு ஆஸ்ட்ராலிசு
  • நைட்டிங்கேல் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு லுசினியசு
  • சைபன் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு ஹிவா
  • அகுயுவான் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு நிஜோய்
  • † பாகன் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு யமாஷினே
  • † மங்கரேவா நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு அஸ்ட்ரோலாபி
  • கரோலினியன் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு சிரின்க்சு
  • நரு நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு ரெஹ்சி
  • மில்லர்பேர்ட், அக்ரோசெபாலசு பெமிலியாரிசு
  • போகிகோக்கிகோ, அக்ரோசெபாலசு அக்வினோக்டியாலிஸ்
  • டஹிடி நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு காஃபர்
  • மூரியா நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு லாங்கிரோஸ்ட்ரிஸ்
  • † காரெட்டின் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு மியூசே
  • துவாமோட்டு நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு அட்டிபஸ்
  • ரிமதாரா நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு ரிமடரே
  • பிட்காயின் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு வாகானி
  • ஹென்டர்சன் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு டைட்டி
  • வடக்கு மார்குவேசன் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு பெர்செர்னிசு
  • தெற்கு மார்குவேசன் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு மெண்டனே
  • குக் நாணல் கதிர்குருவி, அக்ரோசெபாலசு கெரராகோ
  • பெரும் சதுப்பு கதிர்குருவி, அக்ரோசெபாலசு ரூஃபெசென்சு
  • கேப் வெர்டே கதிர்குருவி, அக்ரோசெபாலசு ப்ரெவிபென்னிசு
  • சின்ன சதுப்பு கதிர்குருவி, அக்ரோசெபாலசு கிராசிலிரோஸ்ட்ரிசு
  • மடகாஸ்கர் சதுப்பு கதிர்குருவி, அக்ரோசெபாலசு நியூட்டோனி
  • ரோட்ரிக்சு கதிர்குருவி, அக்ரோசெபாலசு ரோடெரிகானசு
  • சீஷெல்ஸ் கதிர்குருவி, அக்ரோசெபாலசு செச்செலென்சிசு

இருடபன்யாவின் (தென்கிழக்கு அங்கேரி) மியோசின் பிற்கால (சுமார் 11 மை) துண்டு துண்டான தொல்லுயிர் எச்சம் இந்தப் பேரினத்தின் பொதுவான கிளைபாட்டியல்களைக் காட்டுகின்றன.[2] பெரும்பாலான பாசெரிடா பேரினங்கள் பிளியோசின் காலம் வரை அறியப்படவில்லை. இவை சரியாக இங்கே வைக்கப்படுகிறது என்று கூட உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் இவை அக்ரோசெப்பாலிடேவைச் சேர்ந்தவையாக இருக்க மிகவும் வாய்ப்பு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Olsson, U.; Rguibi-Idrissi, H.; Copete, J.L.; Arroyo Matos, J.L.; Provost, P.; Amezian, M.; Alström, P.; Jiguet, F. (2016). "Mitochondrial phylogeny of the Eurasian/African reed warbler complex (Acrocephalus, Aves). Disagreement between morphological and molecular evidence and cryptic divergence: A case for resurrecting Calamoherpe ambigua Brehm 1857". Molecular Phylogenetics and Evolution 102: 30–44. doi:10.1016/j.ympev.2016.05.026. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரோசெபாலசு&oldid=3878004" இலிருந்து மீள்விக்கப்பட்டது