உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வால் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வால் தேன்சிட்டு
ஆண் (♂) சிக்கிமில் (இந்தியா)
பெண், நேபாளத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. இக்னிகாடா
இருசொற் பெயரீடு
ஏதோபைகா இக்னிகாடா
கோட்ஜ்சன், 1836

செவ்வால் தேன்சிட்டு (Fire-tailed sunbird) என்பது தீ வால் தேன்சிட்டு (ஏதோபைகா இக்னிகாடா) என்று அறியப்படுகிறது. இது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு தேன்சிட்டு பறவையாகும் .

பரவல்[தொகு]

செவ்வால் தேன்சிட்டு இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதிகளிலும், முதன்மையாக இமயமலையிலும், தென்கிழக்கு ஆசியாவின் அருகிலுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் திபெத் ஆகிய நாடுகளில் இந்த சிற்றினம் காணப்படுகிறது.

வாழிடம்[தொகு]

செவ்வால் தேன்சிட்டின் இயற்கையான வாழ்விடங்கள் மிதமான காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

விளக்கம்[தொகு]

நீண்ட வாலுடன் ஆண் பறவை 15 செ.மீ. நீளமும் பெண் பறவை 10 செ.மீ. வரையும் வளரும். இவை 4,000 மீட்டர் உயரத்தில் ஊசியிலையுள்ள காடுகளில் வாழ்கின்றன. குளிர்ந்த பருவத்தில் பள்ளத்தாக்கு பகுதிக்குச் செல்கின்றன. இவை பூச்சிகள் மற்றும் தேனைச் சாப்பிடுகின்றன. ஆண் பெண் என இரண்டு பெற்றோர்களும் குஞ்சுகளுக்கு உணவளிப்பதில் பங்கேற்கின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Aethopyga ignicauda". IUCN Red List of Threatened Species 2018: e.T22718100A131982762. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22718100A131982762.en. https://www.iucnredlist.org/species/22718100/131982762. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Felix, Dr. Jiri.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வால்_தேன்சிட்டு&oldid=3827628" இலிருந்து மீள்விக்கப்பட்டது