செவ்வால் குழாய் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வால் குழாய் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிலிண்ட்ரோபிலிடே
பேரினம்:
சிலிண்ட்ரோபிசு
இனம்:
சி. ரபசு
இருசொற் பெயரீடு
சிலிண்ட்ரோபிசு ரபசு
இலாரெண்டி, 1768

செவ்வால் குழாய் பாம்பு, சிவப்பு உருளை பாம்பு[2] அல்லது பொதுவான குழாய் பாம்பு[1] எனும் சிலிண்ட்ரோபிசு ரபசு (Cylindrophis ruffus) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு விசமற்ற சிலிண்ட்ரோபைட் பாம்பு சிற்றினமாகும். இதன் கீழ் எந்த துணையினமும் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை.

விளக்கம்[தொகு]

செவ்வால் குழாய் பாம்பு 39 அங்குலம் (1 மீ) நீளம் வரை வளரக்கூடியது.[3]

இதனுடைய முதுகு செதில்கள் மென்மையானவை. 19 அல்லது 21 வரிசைகளில், 186-245 வயிற்றுப்புற தகடுகளுடன், அடுத்தடுத்த முதுகு செதில்களை விட பெரியதாகக் காணப்படும். குத தகடு பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்து முதல் 10 வாலடி தகடுகள் காணப்படும்.[4]

மற்ற பாம்புகளுடன் ஒப்பிடும்போது, சி. ரபசு குறைந்த வாய்ப்பிளவு அளவைக் கொண்டுள்ளது.[5] இவற்றின் முதன்மை உணவாகப் பாம்புகள், சிறுகண் காலிலி மற்றும் விலாங்குகள் உள்ளிட்ட நீண்ட, மெல்லிய இரை விலங்குகள் உள்ளன.[6]

புவியியல் வரம்பு[தொகு]

செவ்வால் குழாய் பாம்பு மியான்மர் மற்றும் தெற்கு சீனாவில் (புஜியான், ஆங்காங் மற்றும் ஆய்னான் தீவு), தெற்கே வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, மலாய் தீபகற்பம் மற்றும் கிழக்கிந்தியத் தீவுகள் முதல் இந்தோனேசியா (ரியாவ் தீவுக்கூட்டம், சுமாத்திரா, பாங்கா, போர்னியோ, சாவகம் வரை) காணப்படுகிறது., சுலாவெசி, பூட்டான் மற்றும் சுலா தீவுகள்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Wogan, G.; Vogel, G.; Nguyen, T.Q.; Thy, N. (2012). "Cylindrophis ruffus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2012: e.T192080A2037269. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192080A2037269.en. http://www.iucnredlist.org/details/192080/0. பார்த்த நாள்: 5 January 2018. 
  2. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume).
  3. Burnie D, Wilson DE.
  4. Burnie D, Wilson DE. 2001. Animal. Dorling Kindersley. 624 pp. ISBN 0-7894-7764-5.
  5. Cundall, David (1995). "Feeding behaviour in Cylindrophis and its bearing on the evolution of alethinophidian snakes". Journal of Zoology 237 (3): 353–376. doi:10.1111/j.1469-7998.1995.tb02767.x. https://archive.org/details/sim_journal-of-zoology_1995-11_237_3/page/353. 
  6. Kupfer, Alexander (2003). "Field observations on the predation of the caecilian amphibian, genus Ichthyophis (Fitzinger, 1826), by the red-tailed pipe snake Cylindrophis ruffus (Laurenti, 1768)". Amphibia-Reptilia 24 (2): 212–215. doi:10.1163/156853803322390462. 
  7. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வால்_குழாய்_பாம்பு&oldid=3852396" இலிருந்து மீள்விக்கப்பட்டது