செம்மச்சக்கெண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மச்சக்கெண்டை
Not evaluated (IUCN 3.1)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்ரினிடே
பேரினம்:
தாவ்கின்சியா
இனம்:
தா. உருபுரோடிங்டசு
இருசொற் பெயரீடு
தாவ்கின்சியா உருபுரோடிங்டசு
(செருடன், 1849)
வேறு பெயர்கள்

புண்டியசு உருபுரோடிங்டசு (செருடன்1849)

தாவ்கின்சியா உருபுரோடிங்டசு (Dawkinsia rubrotinctus) என்பது தென்னிந்தியாவில் உள்ள காவேரி ஆற்றுப் படுகையில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது பார்ப் மீனாகும்.[2][3]

பரவல்[தொகு]

அதிகபட்சமாக 8.6 செ.மீ. நீளம் வளரக்கூடிய இந்த மீன்,[4] தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள பெரிய காவிரி நீர்ப்பிடிப்புக்குள் உள்ள கபினி ஆற்றின் துணை ஆறான மானந்தவாடி ஆற்றில் காணப்படுகிறது. தற்போது இந்த மீன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் காவிரி ஆற்றின் வடிகால் முழுவதும் பரவலாகக் கருதப்படுகிறது.

தெற்கு கேரளாவில் உள்ள கல்லடையாற்றிலிருந்து ஒரே மாதிரியான தோற்றமுடைய மீன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இதன் வரம்பின் முழு அளவும் உறுதி செய்யப்படவில்லை. குறிப்பாக இவை தா. அசிமிலிசுடன் இணைசேர்ந்து இயற்கையாகக் கலப்பினங்களை உருவாக்கலாம்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Conophytum truncatum: Young, A.J.. 2021-12-10. http://dx.doi.org/10.2305/iucn.uk.2022-1.rlts.t202850281a202872482.en. 
  2. Eschmeyer, W. N. (2 September 2015). "Catalog of Fishes". California Academy of Sciences. Archived from the original on 3 May 2015. பார்க்கப்பட்ட நாள் 21 September 2015.
  3. Seriously Fish Dawkinsia rubrotinctus (JERDON, 1849)
  4. Knight, J.D. Marcus; Devi, K. Rema; Atkore, Vidyadhar (2011-04-26). "Systematic status of Systomus rubrotinctus Jerdon (Teleostei: Cyprinidae) with notes on the Puntius arulius group of fishes". Journal of Threatened Taxa 3 (4): 1686–1693. doi:10.11609/jott.o2684.1686-93. பன்னாட்டுத் தர தொடர் எண்:0974-7893. http://dx.doi.org/10.11609/jott.o2684.1686-93. 
  5. "Dawkinsia rubrotinctus (Systomus rubrotinctus, Puntius arulius) — Seriously Fish". பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மச்சக்கெண்டை&oldid=3621717" இலிருந்து மீள்விக்கப்பட்டது