செந்தொண்டை ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தொண்டை ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: முயுசிகேபிடே
பேரினம்: பைசெடுலா
இனம்: பை. அல்பிசிலா
இருசொற் பெயரீடு
பைசெடுலா அல்பிசிலா
பாலாசு, 1811
வேறு பெயர்கள்
  • பைசெடுலா பர்வா அல்பிசிலா

செந்தொண்டை ஈப்பிடிப்பான்[2] அல்லது தைகா ஈப்பிடிப்பான் [Taiga flycatcher (பைசெடுலா அல்பிசிலா)] என்பது தொல்லுலக ஈப்பிடிப்பான் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு வலசை போகும் குருவி ஆகும். இக்குருவியினம் சைபீரிய தைகா காடுகள் தொடங்கி காம்சட்கா தீபகற்பம் வரையிலும் மங்கோலியாவிலும்[3] இனப்பெருக்கம் செய்கின்றது. இது இந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மழைக்காலத்தில் வலசை போகின்றது. இந்தியாவின் மேற்குப் பகுதிகளிலும் வட, வடகிழக்குப் பகுதிகளிலும் இக்குருவியைக் காணலாம்; தமிழ்நாட்டில் அரிதாகவே காணப்படுப்படுகிறது[4].

உடலமைப்பும் அடையாளமும்[தொகு]

  • உடல் நீளம் 11.5 செ. மீ. முதல் 12.5 செ. மீ. வரை நீளம் இருக்கும்; பழுப்பு நிற உடலும் வெண்ணிற அடிப்பகுதியும் கொண்டது.
  • வாலின் மேற்பகுதி கருப்பாகவும் ஓரமும் அடிப்பகுதியும் வெண்மையாகவும் இருக்கும்.
  • ஈப்பிடிப்பான்களுக்கே உரித்தான பெரிய கண்ணும் அதைச் சுற்றி வெண்ணிற வளையமும் உண்டு; கருத்த, சிறிய அலகினைக் கொண்டது.
  • ஆண் குருவியின் தொண்டைப் பகுதியில் உள்ள செம்மஞ்சள் (ஆரஞ்சு) திட்டும் தலைப்பகுதியின் நீலம் கலந்த சாம்பல் நிறமும் இதை எளிதில் அடையாளம் காண உதவும்.

கள இயல்புகள்[தொகு]

செந்தொண்டை ஈப்பிடிப்பானை மரங்கள் அடர்ந்த தோட்டங்களிலும் காடுகளிலும் காணலாம். பறக்கும் போதே இவை, இரையைப் பிடிப்பதும் இலைகளில் புழுக்களைத் தேடும் போது கதிர்குருவிகளைப் போன்ற செயல்பாட்டினையும் கொண்டது. மரங்களில் உள்ள பொந்துகளில் 4 முதல் 7 முட்டைகள் வரை இடும்[5]. மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால் இவ்வினத்திற்கு ஆபத்து ஏற்படுகின்றது.[6]

குரல்[தொகு]

ட்ர்ர்ர் (trrr...) என்றும் அழுத்தமான டிக் ... டிக் ... என்றும் குரலெழுப்பும்; குரல் உயர் சுருதியில் அதிர்வொலியாக இருக்கும்.[7]

படத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]