செட்சர் குள்ள சுண்டெலி
செட்சர் குள்ள சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முரிடே
|
பேரினம்: | மசு (பேரினம்)
|
இனம்: | M. setzeri
|
இருசொற் பெயரீடு | |
Mus setzeri பீட்டர், 1978 |
செட்சர் குள்ள சுண்டெலி (Setzer's pygmy mouse)(மசு செட்செரி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது போட்சுவானா, நமீபியா மற்றும் சாம்பியாவில் காணப்படுகிறது.
வாழிடம்
[தொகு]வறண்ட புன்னிலம், ஆறுகள், நன்னீர் ஏரிகள் மற்றும் இடைப்பட்ட நன்னீர் ஏரிகள் ஆகியவை இதன் இயற்கை வாழ்விடங்களாகும். போட்சுவானாவில் இது பகுதி வறண்ட பகுதிகளில் உள்ள களர்நில மற்றும் ஈரநிலங்களின் விளிம்புகளிலிருந்து அறியப்படுகிறது. தெற்கு அங்கோலாவின் மெசிக் மத்திய உயர்நிலங்களில் உள்ள மியோம்போ வனப்பகுதியில் பரவலாக காணப்பட்டது. இங்கு இது குய்டோ மற்றும் குவானாவல் நதிகளின் ஆதாரங்கள் மற்றும் குண்டே நீர்வீழ்ச்சிப் பகுதிகளில் காணப்படுவது பதிவு செய்யப்பட்டது.
விளக்கம்
[தொகு]செட்சர் குள்ள சுண்டெலியின் உடல் நீளம் 54 மி.மீ. ஆகும். வால் 31 முதல் 48 மிமீ வரை நீளமுடையது. இதன் எடை 5 முதல் 9 கிராம் வரையும் உள்ளது. மென்மையான உரோமம் வெளிர் பப் அல்லது வெளிர் ஆரஞ்சு நிறமானது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Monadjem, A.; Coetzee, N. (2008). "Mus setzeri". IUCN Red List of Threatened Species 2008: e.T13981A4377625. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T13981A4377625.en. https://www.iucnredlist.org/species/13981/4377625.
- ↑ https://www.gbif.org/species/2438803