உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கழுத்து உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கழுத்து உள்ளான்
இனப்பெருக்ககாலத் தோற்றம்
குளிர்காலத் தோற்றம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
இனம்:
P. lobatus
இருசொற் பெயரீடு
Phalaropus lobatus
(லின்னேயஸ், 1758)
Range of P. lobatus      Breeding range     Wintering range

செங்கழுத்து உள்ளான் அல்லது செங்கழுத்து ஃபாலரோப் (Red-necked phalarope) என்பது உள்ளானைப் போலத் தோற்றம் தரும் இது குட்டைகள், உப்பங்கழிகள், கடல் ஆகியவற்றில் நீந்திக் கொண்டிருக்கக் காணலாம். குளிர்காலத்தில் வலசைவரும் போது படத்தில் உள்ளது போல நீல நிற உடலும், வெண்மையான மார்பும், வயிறும் கொண்டதாகக் காட்சி தரும். ஏப்ரலில் வடக்கே திரும்பும் முன், கழுத்தில் சிறிது செம்மை தோன்றும்.

விளக்கம்[தொகு]

காடை அளவுள்ள இது சுமார் 19 செ.மீ. நீளம் இருக்கும். பெண் பறவையைவிட ஆண்பறவை சற்று சிறியது. இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் நீலங்கலந்த கறுப்பாகவும் இருக்கும். கோடைக் காலத்தில் அதாவது இனப்பெருக்ககாலதில் இதன் கழுத்து செம்பழுப்பு நிறமாக திகழ்வதால் இப்பெயரை இது பெற்றது. ஆனால் குளிர் காலத்தில் இது இந்தியாவுக்கு வலசை வரும்போது இதன் கழுத்தில் அந்த நிறத்தைக் காணமுடியாது. குளிர் காலத்தில் இவை வலசை வரும்போது வெள்ளை உள்ளானை ஒத்திருக்கும். உடம்பின் மேற்பகுதி வெள்ளையும் சாம்பலுமாக இருக்கும். கண்ணின் வழியாக ஒரு கரும் புருவக்கோடு செல்லும். பறக்கும்போது இறக்கைகளில் வெள்ளைப் பட்டை தெளிவாக தெரியும்.

பொதுவான அளவீடுகள்[2][3]
நீளம் 170–200 mm (6.5–8 அங்)
எடை 35 g (1.2 oz)
சிறகு அகலம் 380 mm (15 அங்)
சிறகு 101–106.5 mm (4.0–4.2 அங்)
வால் 45–51 mm (1.8–2.0 அங்)
அலகு 20.2–23.5 mm (0.80–0.93 அங்)
கணுக்கால் 19.8–21.6 mm (0.78–0.85 அங்)

இனப்பெருக்கம்[தொகு]

வைஸ்பேடன் அருங்காட்சியகத்தில் உள்ள முட்டைகள்

இந்த இனப் பறவைகளில், ஆண் பறவைகளை விட பெண் பறவைகள் பெரியதாகவும் பிரகாசமான நிறத்துடனும் இருக்கும். இனப்பெருக்க காலத்தில் பெண் பறவைகளே ஆண் பறவைகளை பின் தொடர்ந்து காதலூட்டத்தை நிகழ்த்தும். மேலும் மூட்டையிடுதல் முடிந்து முட்டைகளை ஆண் அடைகாக்கும் வரை மற்ற பெண் பறவைகளிடமிருந்து தன் துணையைப் பாதுகாக்கும். ஆண் பறவைகள் அடைகாத்தால், குஞ்சு வளர்ப்பு பணிகளையும் செய்கின்றன. அதே நேரத்தில் பெண் பறவை மற்றொரு துணையை கண்டுபிடிக்க முயற்சி செய்யக்கூடும். ஆண் பறவை தனது முட்டைகளை வேட்டையாடிகளிடம் இழந்தால், அது தன் அசல் துணையுடனோ அல்லது ஒரு புதிய துணையிடனோ மீண்டும் இணையும். இனப்பெருக்க காலத்தில் மிகவும் தாமதமாகிவிட்டால், முட்டைகளை அடைகாத்தல், குஞ்சுகளை கவனித்துக்கொள்ளுதல் பொறுப்பை ஆண் பறவைகளிடம் விட்டுவிட்டு, பெண் பறவைகள் தங்கள் தெற்கு நோக்கிய வலசையைத் தொடங்கிவிடுகின்றன.

குஞ்சு

இந்தப் பறவையின் கூடு என்பது ஒரு சிறிய மேட்டின் புல் நிறைந்த சிறு பள்ளமாகும். பொதுவாக நான்கு முட்டைகளை இடும். அடைகாத்தல் காலம் சுமார் 20 நாட்கள் ஆகும்.[2] குஞ்சு பொரித்த 20 நாட்களுக்குள் இளம் பறவைகளால் பறக்க முடியும்.

காணப்படும் இடங்கள்[தொகு]

கடற்கரைகளிலும் கடற்கரை சார்ந்த ஆழமற்ற நீர்நிலைகளிலும் ஆங்காங்கே காணலாம். கோடிக் கரையில் காணப்பட்ட குறிப்பு உள்ளது. 20 முதல் 100 வரையான கூட்டமாகக் கடலில் நீந்தித்திரியும். படகுகள் நெருங்கும் போது கூட்டமாக எழுந்து பறந்து தொலைவில் சென்று அமர்ந்து கொள்ளும்.

உணவு[தொகு]

உப்பங்கழிகள் ஏரிகள் ஆகியவற்றில் கூட்டமாக நீந்தியபடி இரைதேடும் இது நீரில் சுற்றிச் சுழன்றும் வட்டமடித்தும் தன்னை நெருங்குபவர்களைப் பற்றி கவலைப்படாது இரை தேடியபடி இருக்கும். பிளேங்டன், பூச்சிகள் அவற்றின் முட்டை ஆகியவற்றைக் கடல் நீரிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் தேடித்தின்னும் ஒன்றோடு ஒன்று நெருங்கியபடி கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பறக்கும். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Phalaropus lobatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 Godfrey, W. Earl (1966). The Birds of Canada. Ottawa: National Museum of Canada. p. 169.
  3. Sibley, David Allen (2000). The Sibley Guide to Birds. New York: Knopf. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-45122-8.
  4. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:54

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phalaropus lobatus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Red-necked phalarope – RSPB Birds by Name

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கழுத்து_உள்ளான்&oldid=3930154" இலிருந்து மீள்விக்கப்பட்டது