சூரத்துல் ஆதியாத்தி
சூரத்துத் சூரத்துல் ஆதியாத்தி அரபு மொழி: سورة العاديات திருக்குர்ஆனின் 100 ஆவது அத்தியாயம் ஆகும்.
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடையவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடையவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 100 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் ஆதியாத்தி மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
பெயர்
[தொகு]சூரத்துல் ஆதியாத்தி அரபு மொழி: سورة العاديات அரபுச் சொல்லுக்கு வேகமாகச் செல்லுபவை எனப் பொருள்.
சூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)
[தொகு]அரபு | ஆங்கிலம் | தமிழாக்கம் |
---|---|---|
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ |
bi-smi llāhi r-raḥmāni r-raḥīm |
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) |
|
۞1By the (steeds) that run, with panting. |
۞1மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக- |
|
۞2Striking sparks of fire (by their hooves), |
۞ 2பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், |
|
۞3And scouring to the raid at dawn. |
۞ 3பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்- |
|
۞4And raise the dust in clouds the while, |
۞4மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், |
|
۞5 Penetrating forthwith as one into the midst (of the foe); |
۞5 அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக- |
|
۞6Verily, man (disbeliever) is ungrateful to his Lord; |
۞6 நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். |
|
۞7And to that he bears witness (by his deeds); |
۞7 அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். |
|
۞8And verily, he is violent in the love of wealth |
۞8 இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். |
|
۞9Knows he not that when the contents of the graves are poured forth (all mankind is resurrected)? |
۞9 அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- |
|
۞10And that which is in the breasts (of men) is made known? |
۞10 மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- |
|
۞11Verily, that Day (i.e. the Day of Resurrection) their Lord will be Well-Acquainted with them |
۞11 நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன். |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பிற தகவல்கள்
[தொகு]
|