ஸூரத்துல் லஹப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
111ஸூரத்துல் லஹப் (சுடர்) வசனங்கள்:5 மக்காவில் அருளப்பட்டது ۞♫♫mp3

ஸூரத்துல் லஹப் (ஆங்கில மொழி: al-lahab)(அரபு மொழி: سورة المسد) சுடர் / சுவாலை என்பது திருக்குர்ஆனின் 111வது அத்தியாயம் ஆகும்.


திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் 111 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் லஹப் (சுடர்)மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.


பெயர்[தொகு]

ஸூரத்துல் லஹப் அரபு மொழி: سورة المسد என்ற அரபுச் சொல்லுக்கு சுடர் / சுவாலை , எனப் பொருள்.

சுடர் / சுவாலை[தொகு]

இல அரபு தமிழாக்கம்
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ *அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
۞111:1. تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ *அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
۞111:2. مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ *அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை..
۞111:3. سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ *விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
۞111:4. وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ *விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
۞111:5. فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ *அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

பிற தகவல்கள்[தொகு]

முந்தைய சூரா:
ஸூரத்துந் நஸ்ர்
Islam template.svg சூரா111 அடுத்த சூரா :
ஸூரத்துல் இஃக்லாஸ்
அரபு Opened Qur'an.jpg

1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸூரத்துல்_லஹப்&oldid=3258768" இருந்து மீள்விக்கப்பட்டது