ஸூரத்துந் நாஸ்
ஸூரத்துந் நாஸ் Sura An-Nās (அரபு மொழி: سورة الناس,மனிதர்கள் என்பது திருக்குர்ஆனின் 114வது அத்தியாயம் ஆகும்..
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.[1][2][3]
திருக்குர்ஆனின் 114 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
பெயர்
[தொகு]ஸூரத்துந் நாஸ் என்ற அரபுச் சொல்லுக்கு மனிதர்கள் எனப் பொருள்.
மனிதர்கள்
[தொகு]இல | அரபு | ஆங்கிலம் | தமிழாக்கம் |
---|---|---|---|
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ | Bismillāhi r-Raḥmāni r-Raḥīm | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
114.1 | قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ | Qul aʿūḏu bi-Rabbi n-nās | (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.. |
114.2 | مَلِكِ النَّاسِ | Maliki n-nās | (அவனே) மனிதர்களின் அரசன்;- |
114.3 | إِلَٰهِ النَّاسِ | Ilāhi n-nās | (அவனே) மனிதர்களின் நாயன்.- |
114.4 | مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ | Min sharri l-waswāsi l-ḫannās | பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்) |
114.5 | الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ | Alladhī yuwaswisu fī ṣudūri n-nās | அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். |
114.6 | مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ | Mina l-ǧinnati wa n-nās | (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "quran.com". An-Nas 114 : 1–6, Muhsin Khan
- ↑ "Quran Surah Falaq – Surah Nas, Tafsir Ibn Kathir, Arabic English".
- ↑ Sura Ben
பிற தகவல்கள்
[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
|