சூரத்து குறைஷின்
ஸூரத்து குறைஷின் ஆங்கில மொழி: Sūrat Qurayshஅரபு மொழி: سورة قريش குறைஷிகள் என்பது திருக்குர்ஆனின் 106வது அத்தியாயம் ஆகும்.
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 106 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.[1][2][3]
பெயர்
[தொகு]ஸூரத்து குறைஷின் அரபு மொழி: سورة قريش அரபுச் சொல்லுக்கு குறைஷிகள் எனப் பொருள்.
பெயர் விளக்கம்
[தொகு]- ஸூரத்து குறைஷின் سورة قريش இந்த பெயரானது 106:1 لِإِيلَافِ قُرَيْشٍ முதலாவது அயத்தின் இரண்டாவது வசனத்தில் இருந்து قُرَيْشٍ குறைஷின் என்ற இந்த பெயர் பெறப்பட்டது
- இந்த ஸூரத் குறைஷி இன மக்களைப்பற்றி பேசுவதால் இந்த சுராவுக்கு அரபு மொழி: سورة قريش ஸூரத்து குறைஷின் என்ற பெயர் வந்தது
குறைஷிகள்
[தொகு]இல | அரபு | தமிழாக்கம் |
---|---|---|
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
۞106:1. | لِإِيلَافِ قُرَيْشٍ | குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, |
۞106:2. | إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ | மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- |
۞106:3. | فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ | இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக. |
۞106:4. | الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ | அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wherry, Elwood Morris (1896). A Complete Index to Sale's Text, Preliminary Discourse, and Notes. London: Kegan Paul, Trench, Trubner, and Co. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- ↑ "quran.com, quraysh (106), Muhsin Khan".
- ↑ "quran.com, quraysh (106), Saheeh International".
வெளி இணைப்புகள்
[தொகு]- 106 குறைஷ் - 1
- Surah Quraysh[தொடர்பிழந்த இணைப்பு] (Complete text in Arabic with English and French translations)
- குட்டன்பேர்க் திட்டத்தில் Abdullah Yusuf Ali இன் படைப்புகள்
- The Holy Qur'an, translated by Abdullah Yusuf Ali
- Three translations at Project Gutenberg
- குட்டன்பேர்க் திட்டத்தில் Marmaduke Pickthall இன் படைப்புகள்
பிற தகவல்கள்
[தொகு]
|