சுருலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருலி
சாவக சுருலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனி
குடும்பம்: செர்கோபித்திசிடே
பேரினம்: பிரசுபைடிசு
மாதிரி இனம்
சுமத்ரா சுருலி பிரசுபைடிசு மிட்ராட்டா
எக்சுசோல்ட்சு, 1821
(சிமியா மெலோபசு ரப்பீல்சு, 1821)
சிற்றினம்

11, உரையில்

சுரிலிசு (Surili) என்பது பிரசுபைடிசு பேரினத்தைச் சேர்ந்த பழைய உலக குரங்குகளின் குழுவாகும். இவை தாய்-மலாய் தீபகற்பத்தில், சுமத்ரா, போர்னியோ, சாவகம் மற்றும் அருகிலுள்ள சிறிய தீவுகளில் வாழ்கின்றன.[1] சுரிலியைத் தவிர, குரங்குகளின் பேரினத்தின் பொதுவான பெயர்கள் சில சமயங்களில் "மந்தி" அல்லது "இலைக் குரங்கு" என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றன.

விளக்கம்[தொகு]

சுரிலிசு சிறிய, மெலிந்த முதனி விலங்குகள் ஆகும். இவற்றின் உரோமங்கள் மேலே பழுப்பு, சாம்பல், கருப்பு அல்லது ஆரஞ்சு, மற்றும் கீழ் மேற்பரப்பில் வெண்மை அல்லது சாம்பல், சில நேரங்களில் ஆரஞ்சு நிறத்துடன் சில சிற்றினங்களின் தலையில் அல்லது இடுப்பில் வடிவங்களைக் கொண்டிருக்கும்.[2][3] இவற்றின் இடாய்ச்சு மொழி Mützenlanguren ("கவச மந்தி") இவற்றின் தலையில் உள்ள முடியினால் தோன்றியது. இவை மற்ற மந்தியிலிருந்து தலையின் வடிவத்தில் (குறிப்பாகச் சரியாக வளர்ச்சியற்ற அல்லது இல்லாத புருவ முகடுகள், மற்றும் முக்கிய மூக்கெலும்புகள்),[2] பற்கள் மற்றும் இவற்றின் கட்டைவிரல்களின் அளவு ஆகியவற்றால் வேறுபடுகின்றன. சுரிலிசின் முதிர்ச்சியடைந்த மந்தியின் நீளம் 40 முதல் 60 செ.மீ. வரை இருக்கும். வாலின் நீளம் 50-லிருந்து 85-செ.மீ வரை காணப்படும். இதன் எடை 5 முதல் 8 கிலோ வரை இருக்கும்.[2]

நடத்தை[தொகு]

பகலாடி வனவாசிகளான இம்மந்திகள் கிட்டத்தட்ட தங்கள் முழு வாழ்க்கையையும் மரங்களில் செலவிடுகின்றன. இவை கூட்டங்களாக 21 எண்ணிக்கையில் (பொதுவாக 10 அல்லது குறைவான விலங்குகள் பெரும்பாலான சிற்றினங்களில்) ஒரு ஆண், பல பெண்கள் மற்றும் அவற்றின் குட்டிகளைக் கொண்ட குழுக்களாக வாழ்கின்றனர்.[3] ஒரு சில சிற்றினங்கள் ஒருதுணை மணம் கொண்ட இணையாக (குறிப்பாக மென்டவாய் மந்தி) காணப்படுகின்றன.[3] இருப்பினும் இது அவற்றின் வாழ்விடத்தின் குறைவுக்கான எதிர்வினையாக இருக்கலாம். தனிமையான ஆண்கள் மற்றும் ஆண் குழுக்களும் பதிவாகியுள்ளன.[2] குழுக்கள் படிநிலையாக உருவாக்கப்பட்டு, குரல் மற்றும் தோரணை ஆகிய இரண்டிற்கும் இடையேயான தொடர்பு கொண்டது.

உணவு[தொகு]

சுரிலிசின் உணவில் இலைகள், பழங்கள் மற்றும் விதைகள் உள்ளன.[3]

இனப்பெருக்கம்[தொகு]

கர்ப்ப காலம் 5-6 மாதங்கள் ஆகும். ஒரு குட்டியினை ஈனுகின்றன. புதிதாகப் பிறந்த குட்டிகள் வெள்ளை நிறத்தில் உள்ளன. பின்புறத்தில் ஒரு கருப்பு பட்டை காணப்படும். இருப்பினும் சில குறுக்கு வடிவ அடையாளத்தைக் கொண்டுள்ளன. ஒரு வயதிற்குள், குட்டிகள் பாலூட்டப்பட்டு, 4-5 வயதில், இவை முழுமையாக முதிர்ச்சியடைகின்றன. காடுகளின் வழக்கமான ஆயுட்காலம் அறியப்படவில்லை. ஆனால் வளரிடத்தில் வளர்க்கப்பட்ட சுமத்ரான் சுரிலிசு 18 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்கிறது.[2]

பாதுகாப்பு[தொகு]

இந்த பேரினத்தில் உள்ள பல சிற்றினங்கள் விரிவான வாழ்விட அழிவைக் கொண்ட பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வேட்டையாடுவதாலும் அச்சுறுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, 11 சிற்றினங்களில் எட்டு சிற்றினங்கள் அழிவாய்ப்பு இனமாக அல்லது மோசமானவை எனப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.[4] மேலும் சரவாக் சுரிலி "உலகின் அரிதான விலங்குகளில் ஒன்று" எனக் குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில், ஹோஸின் மந்தி துணையினமான மில்லர்சு கிரிஸ்ல்டு மந்தி அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. போர்னியோ தீவின் கிழக்கு முனையில் உள்ள[5] காட்டில் மீண்டும் இது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இது உலகின் மிகவும் அழிவாய்ப்பு உள்ள விலங்குகளில் ஒன்றாக உள்ளது.

வகைப்பாட்டியல்[தொகு]

இரண்டு பேரினங்கள், ட்ரச்சிபிதேகசு மற்றும் செம்னோபிதேகசு, முன்பு பிரசுபைடிசுஸின் துணைப்பேரினமாக கருதப்பட்டன.[1] பிரிசுபைடிசு பேரினத்தின் சிற்றினங்கள் வகைபிரித்தலானது சிக்கலானது மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.[1][6][7][8]

 • பேரினம் பிரசுபைடிசு [1]
  • கருப்பு முகடு சுமத்ரா மந்தி, பிரசுபைடிசு மெலலோபோசு
  • கருப்பு வெள்ளை மந்தி பிரசுபைடிசு பைகாலர்
  • சுமத்ரா கருப்பு மந்தி பிரசுபைடிசு சுமத்ரானா
  • மிட்டரேட் மந்தி பிரசுபைடிசு மிட்ராட்டா
  • ராபிள்ஸ் பட்டை மந்தி, பிரசுபைடிசு பெமோரலிசு
  • ராபின்சனின் பட்டை மந்தி, பிரசுபைடிசு ராபின்சோனி
  • கிழக்கு சுமத்ரா <i>பட்டை மந்தி பிரசுபைடிசு</i>, பிரசுபைடிசு பெர்குரா
  • சரவாக் சுரிலி, பிரசுபைடிசு கிரிசோமெலாசு
   • போர்னியன் பட்டை சுரிலி, பிரசுபைடிசு கிரிசோமெலாசு கிரிசோமெலாஸ்
   • மூவர்ண சுரிலி, பிரசுபைடிசு கிரிசோமலாஸ் குரூசிகர்
  • வெள்ளை தொடை சுரிலி, பிரசுபைடிசு சியாமென்சிசு
   • மலேய வெள்ளை தொடை சூரிலி, பிரசுபைடிசு சியாமென்சிசு சியாமென்சிசு
   • பிரசுபைடிசு சியாமென்சிசு ரியோனிசு
   • பிரசுபைடிசு சியாமென்சிசு கானா
   • பிரசுபைடிசு சியாமென்சிசு பேனுலாட்டா
  • வெள்ளை முகப்பு சுரிலி, பிரசுபைடிசு ப்ரண்டேட்டா
  • ஜாவன் சுரிலி, பிரசுபைடிசு கோமாட்டா
   • வறண்ட இலை குரங்கு, பிரசுபைடிசு கோமாட்டா கோமாட்டா
   • ஜாவன் பசுகசு மந்தி, பிரசுபைடிசு கோமாட்டா ப்ரெடெரிகே
  • தாமஸ் மந்தி, பிரசுபைடிசு தோமசி
  • ஹோஸ் மந்தி, பிரசுபைடிசு ஹோசி
   • ஹோஸின் நரை மந்தி, பிரசுபைடிசு ஹோசி ஹோசி
   • எவரெட்டின் நரை மந்தி, பிரசுபைடிசு ஹோசி எவெரெட்டி
  • சபான் நரை மந்தி, பிரசுபைடிசு சபானா
  • மில்லர்சு மந்தி, பிரசுபைடிசு கேனிக்ரசு
  • மெரூன் இலை குரங்கு, பிரசுபைடிசு ரூபிகுண்டா
   • முல்லரின் பழுப்பு சிவப்பு மந்தி, பிரசுபைடிசு ரூபிகுண்டா ரூபிகுண்டா
   • பிரசுபைடிசு ரூபிகுண்டா ரூபிடா
   • பிரசுபைடிசு ரூபிகுண்டா இக்னிடா
   • டேவிஸின் பழுப்பு சிவப்பு மந்தி, பிரசுபைடிசு ரூபிகுண்டா கிரிசியா
   • கரிமாதா தீவு பழுப்பு சிவப்பு மந்தி, பிரசுபைடிசு ரூபிசுண்டா கரிமேடே
  • மென்டவாய் மந்தி அல்லது ஜோஜா, பிரசுபைடிசு பொடென்சியானி
  • சைபரட் மந்தி, பிரசுபைடிசு சைபெரு
  • நாட்டுனா தீவு சுருலி, பிரசுபைடிசு நாட்டுனே

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 Groves, C. P. (2005). Wilson, D. E.; Reeder, D. M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press. pp. 170–172. ISBN 0-801-88221-4. OCLC 62265494.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Novak, R. M. (1999).
 3. 3.0 3.1 3.2 3.3 Rowe, N. (1996).
 4. IUCN (2008). 2008 IUCN Red List of Threatened Species.
 5. The Guardian, guardian.co.uk, Friday 20 January 2012: 'Extinct' monkey rediscovered in Indonesia jungle.
 6. Meyer, Dirk; Rinaldi, Ir. Dones; Ramlee, Hatta; Perwitasari-Farajallah, Dyah; Hodges, Keith; Roos, Christian (2011). "Mitochondrial phylogeny of leaf monkeys (genus Presbytis, Eschscholtz, 1821) with implications for taxonomy and conservation". Molecular Phylogenetics and Evolution 59 (2): 311–319. doi:10.1016/j.ympev.2011.02.015. பப்மெட்:21333742. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1055790311000662. பார்த்த நாள்: 2020-04-08. 
 7. Ang, A.; Roesma, D.I.; Nijman, V.; Meier, R.; Srivathsan, A.; Rizaldi (2020). "Faecal DNA to the rescue: Shotgun sequencing of non-invasive samples reveals two subspecies of Southeast Asian primates to be Critically Endangered Species". Scientific Reports 10: 9396. https://www.nature.com/articles/s41598-020-66007-8. 
 8. Abdul-Latiff MAB; Baharuddin H; Abdul-Patah P; Md-Zain BM (2019). "Is Malaysia's banded langur, Presbytis femoralis femoralis, actually Presbytis neglectus neglectus? Taxonomic revision with new insights on the radiation history of the Presbytis species group in Southeast Asia.". Primates 60 (1): 63–79. doi:10.1007/s10329-018-0699-y. பப்மெட்:30471014. http://eprints.uthm.edu.my/id/eprint/11825/1/J7645_56e2f675fd08ae5a4dd12c6ef963c619.pdf. பார்த்த நாள்: 2022-06-05. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருலி&oldid=3584299" இலிருந்து மீள்விக்கப்பட்டது