சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் 2017ல் வெளிவந்த அமெரிக்க சாகச புனைவுத் திரைப்படம். இப்படத்தை ஜேக் கஸ்டான் இயக்கினார். கிறிஸ் மெக்கேனா, எரிக் சோம்மர்ஸ், ஸ்காட் ரோஸன்பெர்க் மற்றும் ஜெப் பிங்க்னர் ஆகியோரால் எழுதப்பட்ட இப்படம், மெக்கேனா எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது . இது 1995ல் வெளிவந்த சுமான்சி படத்தொடரின் மூன்றாவது பாகம் ஆகும். முதல் படமான சுமான்சி படத்தில் முன்னனி நட்சத்திரமான ராபின் வில்லியம்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது பெயர் இப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1] இந்தத் திரைப்படத்தில் டுவேயின் ஜான்சன், ஜேக் பிளாக், கெவின் ஹார்ட், கரேன் கில்லன், நிக் ஜோனஸ் மற்றும் பாபி கேனவேல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .

சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் டிசம்பர் 5, 2017 அன்று பாரிசில் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டது. டிசம்பர் 20 ம் தேதி அமெரிக்காவில் ரியல் டி 3டி மற்றும் ஐ-மாக்ஸ் வடிவங்களில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. விமர்சகர்கள் இப்படத்தை "மகிழ்ச்சிகரமான ஆச்சரியம்" என்று புகழ்ந்தது. [2] சுமான்சியின் மூன்றாம் வெளியிடான இப்படம் உலகம் முழுவதும் 962 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்தது.[3] இதனால் இப்படம் அதிக வசூல் செய்த படங்களில் 45ஆவது இடத்தை பிடித்தது.

வரவேற்பு[தொகு]

வசூல்[தொகு]

சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் அமெரிக்கா மற்றும் கனடாவில் $ 404.6 மில்லியன், பிற நாடுகளில் $ 557.6 மில்லியன் என உலகளவில் மொத்தம் 962.1 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. [4]

விமர்சனம்[தொகு]

 • அழுகிய தக்காளிகள் நிறுவனம் சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் படத்திற்கு 6.2 மதிப்பென் வழங்கியது. [5]
 • மெட்டா கிரிட்டிக் நிறுவனம் இப்படத்திற்கு 100க்கு 58 மதிப்பென் வழங்கியது.[6]
 • போஸ்ட் டிராக் நிறுவனம் 84% மதிப்பென் வழங்கியது.

சுமான்சி 3[தொகு]

சுமான்சி 3 என்பது சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் படத்தின் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் உள்ள திரைப்படமாகும்.[7][8][9][10] சுமான்சி 3 படத்தின் படப்பிடிப்பு 2019 சனவரி மாதம் தொடங்கியது. இப்படம் 2019ல் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது.[11]

குறிப்புகள்[தொகு]

 1. Fullerton, Huw (December 20, 2017). "There's a touching tribute to Robin Williams in the new Jumanji film". Radio Times. Immediate Media Company. April 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 2. Giles, Jeff (December 21, 2017). "Jumanji: Welcome to the Jungle is Certified Fresh". அழுகிய தக்காளிகள். Fandango Media. December 21, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Jumanji: Welcome to the Jungle (2017)". பாக்சு ஆபிசு மோசோ. 2018-08-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-11-29 அன்று பார்க்கப்பட்டது.
 4. D'Alessandro, Anthony (March 26, 2018). "No. 4 'Jumanji: Welcome To The Jungle' Box Office Profits – 2017 Most Valuable Blockbuster Tournament". Deadline Hollywood. Penske Business Media. March 26, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Jumanji: Welcome to the Jungle (2017)". அழுகிய தக்காளிகள். May 28, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Jumanji: Welcome to the Jungle Reviews". Metacritic. October 29, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 7. Keyes, Rob (December 21, 2017). "Nick Jonas Has A Funny Idea For The Next Jumanji Sequel". Screen Rant. 2018-06-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 8. Dolloff, Matt (December 22, 2017). "Jack Black Has A Great Idea For Jumanji 3". Screen Rant. 2018-06-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 9. Isaac, Christopher (December 25, 2017). "Here's Who Jumanji's Stars Want to See in Jumanji 3". Screen Rant. 2018-06-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 10. Evangelista, Chris (December 27, 2017). "The 'Jumanji: Welcome to the Jungle' Cast Have 'Jumanji 3' Ideas, Plus an Alternate Ending for the New Sequel". /Film. April 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 11. Harp, Justin (April 24, 2018). "Dwayne Johnson's Jumanji: Welcome to the Jungle sequel drops first teaser as US release date is confirmed". Digital Spy. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]