சுமான்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுமான்சி (Jumanji) 1995ல் வெளிவந்த அமெரிக்க சாகச புனைவுத் திரைப்படம். இப்படத்தை ஜோ ஜான்ஸ்டன் இயக்கினார் .

இது கிறிஸ் வான் ஆல்ஸ்பர்க் அவர்களால் 1981ல் எழுதப்பட்ட சுமான்சி எனும் கதை புத்தகத்தின் தழுவலாகும். இந்தப் படத்தை வான் ஆல்ஸ்பர்க், கிரெக் டெய்லர், ஜொனாதன் ஹென்ஸ்லே மற்றும் ஜிம் ஸ்ட்ரெய்ன் ஆகியோர் எழுதினர். ராபின் வில்லியம்ஸ், போனி ஹன்ட், கிர்ஸ்டென் டன்ஸ்ட், பிராட்லி பியர்ஸ், ஜொனாதன் ஹைட், பெபே நியூவிர்த் மற்றும் டேவிட் ஆலன் க்ரீர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டிசம்பர் 15, 1995 இல் இந்த படம் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், இது வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது உலகளவில் $ 263 மில்லியனை ஈட்டி, 1995 ஆம் ஆண்டின் பத்தாவது மிக அதிக வசூலைப் பெற்ற படமாக ஆனது.

தயாரிப்பு[தொகு]

சுமான்சி திரைப்படம் 65 மில்லியன் அமெரிக்க டாலர்களை பட்ஜெட்டாக கொண்டு உருவாக்கப்பட்டது.

வரவேற்பு[தொகு]

சுமான்சி திரைப்படம் அமெரிக்கா மற்றும் கனடாவில் 100.5 மில்லியன் டாலர்கள், பிற நாடுகளில் 162.3 மில்லியன் டாலர்கள் என மொத்தமாக 262.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை செய்தது. [1] [2] 1995 ஆம் ஆண்டின் பத்தாவது மிக அதிக வசூலைப் பெற்ற படமாக இது ஆனது.

இப்படத்தின் தொடர்ச்சி திரைப்படங்கள்[தொகு]

  • சத்துரா: ஒரு விண்வெளி சாகசம்[3]
  • சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள்[4]
  • சுமான்சி 3[5]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமான்சி&oldid=2757231" இருந்து மீள்விக்கப்பட்டது