சுட்டி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

சுட்டி என்பது, ஒரு நூலில் அல்லது வேறு ஆவணங்களில், குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது சொற்றொடர்கள் தொடர்பான தகவல்கள் இருக்கும் இடங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அச்சொற்களையும் அவற்றுக்கான இடக் குறிகளையும் கொண்ட ஒரு பட்டியல் ஆகும். இது பொதுவாக அகர வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும். நூல்களின் இறுதியில் கொடுக்கப்படும் இத்தகைய சுட்டிகளில், நூலை வாசிப்பவர்களின் ஆர்வத்துக்கு உரியவை எனக்கருதப்படும் மக்கள், இடங்கள், நிகழ்வுகள், கருத்துருக்கள் போன்றவற்றின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். இவற்றுக்கு அருகில் இவை பற்றிய தகவல்கள் இருக்கும் இடங்களை அறிந்துகொள்ள உதவக்கூடிய இடக்குறிகள் இருக்கும். நூல்களைப் பொறுத்தவரை இவை பொதுவாகப் பக்க எண்களாக இருக்கலாம். சில தொழில்சார் அறிக்கைகள், சட்டம் தொடர்பான ஆவணங்கள் போன்றவற்றில் இடக்குறிகள் பிரிவு எண்களாக இருக்கக்கூடும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டி_(நூல்)&oldid=3522536" இருந்து மீள்விக்கப்பட்டது