காணிக்கை (நூல்)
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று: |
|
பதிப்பியல் தொடர்பில் காணிக்கை என்பது, ஒருவருடைய நூலாக்கத்தை அவர் இன்னொருவருக்கோ பலருக்கோ காணிக்கை ஆக்குவது ஆகும். பல தமிழ் நூல்களில் இதனைச் "சமர்ப்பணம்" என்னும் வட மொழிச் சொல்லாலும் குறிப்பிடுவர்.
நூலொன்றில் பொதுவாக இதற்கெனத் தனியான பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஓரிரு வரிகளை மட்டுமே கொண்டிருக்கும் இந்தக் காணிக்கைப் பக்கத்தில் யாருக்குக் காணிக்கை ஆக்கப்படுகிறது என்பதும், அதற்கான காரணமும் இருக்கும். சில வேளைகளில் காரணம் எதுவும் குறிப்பிடப்படாமலேயே யாருக்குக் காணிக்கை என்பது மட்டும் குறிப்பிடப்படும்.
நூல்கள் பல வகையானோருக்குக் காணிக்கையாக்கப் படுகின்றது. இவற்றுட் சில வகையினர் பின்வருமாறு:
- பெற்றோர்
- குடும்பத்தைச் சேர்ந்த பிறர்
- ஆசிரியர்கள்
- நண்பர்கள்
- உயரதிகாரிகள்
- பொதுமக்கள்
- கடவுளர்
காணிக்கையாக்குவதற்கான காரணங்களும் மிகப்பல.
- பொதுவாக உயர் நிலையை எய்துவதற்குக் காரணமாக இருந்தமை.
- நூல் எழுதும் காலப் பகுதியில் வேண்டிய ஆதரவு அளித்தமை
- நூல் எழுதுவதற்குத் தூண்டியமை
- அடிப்படைக் கல்விக்கு ஊக்கம் கொடுத்தமை
- நூல் எழுதுவதற்கான அறிவை ஊட்டியமை.
- குறித்த துறையில் பெரும் பங்காற்றியமை
- அகத்தூண்டலுக்குக் காரணமானமை
- எடுத்துக்கொண்ட தலைப்பின் இருப்புக்குக் காரணமானமை
- அருள் புரிந்தமை
- எல்லாம் அவன் செயல் என்னும் கருத்து