அந்தலைத்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

நூலொன்றின் முன்புற அந்தலைத்தாள்.

அந்தலைத்தாள் என்பது ஒரு நூலின், முன்புறத்திலும், பின்புறத்திலும் காணப்படும் இரண்டு பக்கங்களைக் குறிக்கும். இவை நூலை விரித்த அளவிலான தாள்கள் ஆகும். இது இரண்டாக மடிக்கப்பட்டிருக்கும். முன்புற அந்தலைத்தாளில் இரண்டாக மடித்த ஒருபகுதி முன் அட்டையின் உட்புறத்தில் முழுமையாக ஒட்டப்பட்டிருக்கும். அடுத்த பகுதியின் மடிப்பை அண்டிய ஓரம் தலைப்புப் பக்கத்தின், அல்லது குறைத் தலைப்புப் பக்கம் இருப்பின் அதன் கட்டிய ஓரத்துடன் இறுக்கமாக ஒட்டப்பட்டிருக்கும். இது போன்றே பின்புற அந்தலைத் தாளின் ஒருபகுதி பின் அட்டையுடனும், மற்றப் பகுதியின் மடிப்பை அண்டிய ஓரம் நூலின் கடைசிப் பக்கத்தின் கட்டிய ஓரத்துடனும் ஒட்டப்பட்டிருக்கும். உண்மையில் இந்த அந்தலைத் தாள்கள் நூலையும் அதன் அட்டையையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றன.

இவற்றின் மேற்படி செயற்பாடு காரணமாக இத் தாள்கள் நூலின் ஏனைய பக்கங்களை விடத் தடிப்பாக இருப்பதுண்டு. பெரும்பாலும் இவை வெறுமையாகவே இருக்கும். சில வேளைகளில் இத்தாள்கள் கறுப்பு, மற்றும் பிற நிறங்களிலும் இருப்பதுண்டு. நூற்பதிப்பின் செலவைக் குறைக்க விரும்பும் பதிப்பகங்கள் சில இத் தாளின் முதற் பக்கத்திலேயே குறைத் தலைப்பை அச்சிடுவதும் உண்டு.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தலைத்தாள்&oldid=3469956" இருந்து மீள்விக்கப்பட்டது