முன்னுரை
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று: |
|
ஒரு நூல் தொடர்பில் முன்னுரை என்பது நூலை ஆக்கியவர் எழுதும் ஒரு அறிமுகம் ஆகும். இது ஆக்கியோன் தவிர்ந்த இன்னொருவர் எழுதும் நூலின் அறிமுகமான அணிந்துரையில் இருந்தும் வேறுபட்டது. முன்னுரைகளில், நூலை உருவாக்குவதற்கான எண்ணம் எவ்வாறு தோன்றியது, நூல் உருவான வரலாறு போன்ற விபரங்களும், சில சமயங்களில் நூல் உருவாவதற்குப் பங்களிப்பும், உதவிகளும் செய்தவர்களுக்கு நன்றி செலுத்தலும் முன்னுரைகளின் காணப்படும். நூலில் நன்றியுரைக்குத் தனிப்பகுதி இருப்பின் முன்னுரையில் இது இடம்பெறாது.
முன்னுரையின் இறுதியில் பொதுவாக ஆக்கியோனின் பெயரும், முன்னுரை எழுதப்பட்ட இடம், தேதி என்பனவும் இருக்கும்.