உள்ளடக்கத்துக்குச் செல்

முடிவுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முடிவுரை நூல், கட்டுரை போன்ற ஆக்கங்களின் இறுதிப் பகுதியாக அமைகின்றது. முடிவுரைகள், நூலில் அல்லது கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்ட வாதங்களை, தருக்க அடிப்படையிலான முடிவுக்குக் கொண்டுவருகின்றன. ஆக்குனர் வாசகர்களோடு தொடர்பு கொள்ளும் இறுதிச் சந்தர்ப்பமாக இப்பகுதி இருப்பதால் ஒரு ஆக்கத்தில் முடிவுரை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆக்கத்தின் அறிமுகப் பகுதி வாசகர்களை நூலுக்குள் இழுத்து அதனை வாசிக்கச் செய்வதுபோல், நூலை வாசித்து முடிக்கும்போது வாசகர்கள் நூலின் கருத்துக்களைச் சரியாக உள்வாங்கிச் செல்வதற்கு முடிவுரைகள் உதவுகின்றன.

முடிவுரைகளை நூலில் அல்லது கட்டுரையில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்லை. குறித்த விடயத்துக்கு வெளியிலும் அவ்விடயத்துடன் தொடர்புள்ள பரந்த அம்சங்களைப் பற்றியும் முடிவுரையில் குறிப்பிடுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிவுரை&oldid=1775898" இலிருந்து மீள்விக்கப்பட்டது