சீனிவாசன் (பழங்காசு)
பழங்காசு சீனிவாசன், முன்னர் இவர் கல்வெட்டு ஆராய்ச்சிக்காக பழங்காசு எனும் பெயரில் ஒரு காலாண்டிதழை நடத்தினார். இதனால் இன்று இவரை ‘பழங்காசு’ சீனிவாசன் என்றால்தான் அனைவருக்கும் தெரியும். பழங்காசு சீனிவாசனின் நூல் சேகரிப்பில் 35,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது. புத்தகங்களுக்கென ஒரு கோடி ரூபாய் வரையில் செலவிட்டுள்ளார். 70 (2023ல்) வயதாகும் சீனிவாசன் தற்போது ஆவடியில் வசிக்கிறார்.
இவர் பழமையான் நூல்களை சேகரிப்பதுடன், வாசிக்கவும் செய்தார். இவரது ஆவடி பாரதி ஆய்வு நூலகம் எனும் சிறிய நூலகத்தில் தனது 35,000 நூல்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் திருவாரூருக்கு அருகில் உள்ள அடியக்கமங்கலம் ஊராட்சியில் படித்துக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள எரவாச்சேரி கிராமத்தின் அஞ்சலகர் அப்துல் கஃபூர் வைத்திருந்த கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்சு மற்றும் ராகுல சாங்கிருத்யாயன் ஆகியோர்களின் படைப்புகளை படித்ததால், சீனிவாசனுக்கு நூல்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ‘பழங்காசு’ சீனிவாசன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்காக பல ஆண்டுகள் உழைத்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்.[1][2]
இளமை
[தொகு]தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் எனும் சிற்றூரில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சீனிவாசன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, தோழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற பின், திருச்சிராப்பள்ளி பாரத மிகு மின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இக்காலத்தில் சீனிவாசன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தொழிற்சங்கப் பணிகளில் களமாடினார். அத்துடன் சீனிவாசன் இந்தியாவைக் குறித்த பல்வேறு நூல்களைத் தேடித்தேடி படித்தார்.
சேகரித்த நூல்களில் பழமையானவைகள்
[தொகு]- 1909ல் வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியால் பதிப்பிக்கப்பட்ட திருக்குறள் பரிமேலழகர் உரை மற்றும் பெயர் தெரியாத 4 பழைய உரைகள்
- பர்த்தலோமேயு சீகன்பால்க் மற்றும் சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் ஆகியோர் தமிழில் எழுதி மோனகன் பதிப்பகத்தார் வெளியிட்ட விவிலியம் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்.
- 1960ம் ஆண்டு வந்த ஒரு இதழில் தொடராக ‘மதினத்துந்து’ நூல் ‘தாமிரப் பட்டணம்’ எனும் கதையாக நவீன தமிழ் நடையில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
- வெ. சாமிநாத சர்மா எழுதிய 80 புத்தகங்கள்
- இராமாயணக் கும்மி, நலுங்கு இராமாயணம், இராமாயண வெண்பா, தக்கை இராமாயணம்
பழங்காசு காலாண்டு இதழ்
[தொகு]பழைய நாணயங்கள், கல்வெட்டுகள் மீது அதிக ஈடுபாட்டால் பழங்காசுகளைச் சேகரித்து வந்த சீனிவாசன், தனது மனைவி சுசீலாதேவியை ஆசிரியராகக் கொண்டு 2001ல் ‘பழங்காசு’ காலாண்டு இதழைத் தொடங்கினார்.