தொழிற்பயிற்சி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியாவில் கைவினைஞர்கள் பயிற்சிக்காக தொழிற்பயிற்சி நிலையங்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் இந்திய அரசின் தொழிற்பயிற்சிப் பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளன. இங்கு அளிக்கப்படும் பயிற்சிகளுக்கான காலம், பயிற்சிக்கு ஏற்ப ஒரு வருடம், இரண்டு வருடங்கள் எனக் கால அளவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியின் முடிவில் நடைபெறும் தேர்வுகளுக்கு வினாத்தாள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக அமைக்கப்படுகின்றன. இத்தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பயிற்சியின் பெயரிலான தேசியத் தொழிற்பயிற்சிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தொழிற்பயிற்சி நிலைய வகை[தொகு]

இந்திய அரசின் கட்டுப்பாட்டில், மாநில அரசின் நேரடி நிர்வாகத்தில் நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் என்றும், தனியார் அமைப்புகளின் மூலம் நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இதையும் பார்க்க[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்