உள்ளடக்கத்துக்குச் செல்

சிவிங்கி மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Litocranius|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஜெரிநக்
Gerenuk
கிடாய்
சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலையில் இரு பெண் சிவிங்கி மான்கள்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Litocranius
இனம்:
இருசொற் பெயரீடு
Litocranius walleri
(Brooke, 1879)
     distribution of gerenuk (2008)[2]
வேறு பெயர்கள் [3]

ஜெரிநக் அல்லது சிவிங்கி மான் (gerenuk, also known as the giraffe gazelle) எனப்படுவது கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் ஒரு நீண்ட கழுத்து கொண்ட மறிமானாகும். இது லிட்டோக்ரேனியஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினர். சிவிங்கி மானை முதன்முதலில் இயற்கை ஆர்வலர் விக்டர் புரூக்கால் 1879 இல் விவரித்தார். இது அதன் நீண்ட, மெல்லிய கழுத்து மற்றும் கால்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மான் 80-105 சென்டிமீட்டர் (2 அடி 7 அங்குலங்கள் - 3 அடி 5 அங்குலங்கள்) உயரம் கொண்டது. மேலும் இது 18 முதல் 52 கிலோகிராம் (40 மற்றும் 115 பவுண்டுகள்) எடையுள்ளதாக இருக்கும். இதன் உரோமங்கள் மென்மையானவை. இவற்றின் உடல் இரண்டு வகையான வண்ணங்களைக் கொண்டிருக்கும். இவற்றின் முதுகு சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும், பக்கவாட்டுப் பகுதிகள் இளமஞ்சள் நிறத்திலிருந்து பழுப்புமஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் காணப்படும். அவை யாழ்வடிவில் பின்னோக்கி வளைந்து பின் சற்று முன்னோக்கி வளைந்திருக்கும். கொம்புகள் 25–44 cm (10–17+12 அங்) நீளமுடன் இருக்கும்.

வகைபிரித்தல்[தொகு]

சிவிங்கி மான் முதன்முதலில் விக்டர் புரூக்கால் "ஆப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதி, சான்சிபார் தீவின் வடக்கே" வாங்கப்பட்ட மூன்று ஆண் மாதிரிகளின் அடிப்படையில் 1879 இல் விவரிக்கப்பட்டது.[4] ஜெரால்ட் வாலர் (மாதிரிகளை வழங்கியவர்) தன் இறந்த சகோதரரின் பெயரைச் சூட்டுமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், புரூக் கெசெல்லா வாலேரி என்ற அறிவியல் பெயரை அதில் பயன்படுத்தினார்.[4] பின்னர் இதி்ல் இடம்பெற்ற இடத்தில் பெயர் ஜான் கிர்க்கால் சரி செய்யப்பட்டது. இந்த மானின் பொதுவான பெயரான ஜெரிநாக் ( gáránúug ) என்பது இந்த விலங்குக்கான சோமாலி பெயரிலிருந்து வந்தது. இந்த பெயரின் முதல் பதிவு 1895 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டது.[5] ஒட்டகச்சிவிங்கியை ஒத்திருப்பதால் இது " சிவிங்கி மான்" என்றும் அழைக்கப்படுகிறது.

இதில் இரண்டு துணையினங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் இவை சில ஆய்வாளர்களால் தனி இனங்களாகக் கருதப்படுகின்றன.[3][6][7][8]

விளக்கம்[தொகு]

ஒரு ஆண் மானின் நெருக்கமான காட்சி. முகத்தில் வெள்ளை அடையாளங்கள் மற்றும் யாழ் வடிவ கொம்புகளைக் கவனியுங்கள்.

சிவிங்கி மான் குறிப்பிடத்தக்க உயரமுள்ள, மெலிந்த மறிமான் ஆகும். இது வனப்புமிக்க சிறுமான்களை ஒத்திருக்கிறது. இதன் நீண்ட, மெல்லிய கழுத்தும், கால்களும், தட்டையான, ஆப்பு போன்ற தலை மற்றும் பெரிய, வட்டமான கண்களால் வகைப்படுத்தப்படுகிறது. ஆண் மான்கள் உயரம் கிட்டத்தட்ட 89–105 cm (35–41+12 அங்) இருக்கும். அதேசமயம் பெண் மான்கள் ஆண் மானை விட சற்று குட்டையாக 80–100 cm (31–39 அங்) உயரம் இருக்கும். தலை மற்றும் உடல் நீளம் பொதுவாக 140 மற்றும் 160 cm (55 மற்றும் 63 அங்) வரை இருக்கும் . ஆண் மான்களின் எடை 31 மற்றும் 52 kg (68 மற்றும் 115 lb) வரை இருக்கும் ; பெண் மான்கள் ஆணைவிட எடை குறைவாக 28–45 kg (62–99 lb) எடை கொண்டவை இ்வாறு இந்த மான்கள் பால் ஈருருமை கொண்டவையாக உள்ளன. கருப்புக் குஞ்சங்களோடு இருக்கும் இதன் வால் 25-35 செமீ (10-14 அங்குலம்) நீளம் கொண்டிருக்கும்.[7][9]

இதன் உடலிலின் மென்மையான மேற்பகுதியில் இரண்டு வகையான வண்ணங்கள் தெளிவாகத் தெரியும். முதுகுப் பகுதி செம்பழுப்பு நிறத்திலும், பக்கவாட்டுப் பகுதிகள் இளமஞ்சள் நிறத்திலிருந்து பழுப்புமஞ்சள் நிறத்திலும் இருக்கும். கால்கள் அடிவயிறு, அடிப்பகுதி பாலேட்டு நிறத்தில் இருக்கும். கண்களும் வாயும் வெள்ளை உரோமங்களால் சூழப்பட்டிருக்கும். பெண் மான்களுக்கு மண்டையில் ஒரு கருமையான திட்டு உள்ளது. ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் உண்டு. அவை ஏறக்குறைய "S" வடிவத்தில், பின்னோக்கி வளைந்து பின் சற்று முன்னோக்கி வளைந்து இருகும். இவை 25–44 cm (10–17+12 அங்) நீளம் கொண்டவை.

சிவிங்கி மான் கிழக்கு மற்றும் மத்திய சோமாலியா மற்றும் தென்கிழக்கு எத்தியோப்பியாவில் இருக்கும் நிமிர்வால் மறிமான்களுடன் ஒத்தத் தன்மையைக் கொண்டுள்ளது. இரண்டும் பல், முகம், மண்டையோடு அம்சங்கள், உடல் நிறத்தில் இரண்டு வகையான வண்ணங்கள், வலுவான தடிமனான கொம்புகள் (ஆண் மான்களுக்கு மட்டும்) போன்றவற்றில் ஒத்துள்ளன.[10] இருப்பினும், சிவிங்கி மானிலிருந்து வேறுபடுத்தும் சில அம்சங்களும் உள்ளன, இதில் கொம்புகள், வால், பின்-கண்குழிப் பகுதி, பிடர் எலும்பு செயல்முறைகள் ஆகியவற்றில் முக்கிய உருவ வேறுபாடுகள் உள்ளன. சிவிங்கி மான் நீண்ட, கனமான கழுத்து மற்றும் குறுகிய வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[7] சிவிங்கி மானின் காதுகளின் கீழ் விளிம்பில் (அதன் நுனிக்கு அருகில்) உள்நோக்கி வளைந்த மடல் இல்லாதது ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு.[10] சிவிங்கி மானின் கிளையினங்கள் நிறத்தில் ஒத்தவை; தெற்கு ஜெரிநக் அந்த இரண்டில் சிறியதாகும்.[7]

சூழலியல் மற்றும் நடத்தை[தொகு]

சிவிங்கி மான் ஒரு பகலாடி விலங்கு (முக்கியமாக பகலில் வெளிவந்து நடமாடும்), இருப்பினும் இது பொதுவாக நண்பகலில் நிழலில் நிற்கிறது அல்லது ஓய்வெடுக்கிறது. தீவனம் தேடுதல் மற்றும் உணவுண்ணல் என்பது நாள் முழுவதும் நடக்கும் ஒரு முக்கிய செயல்பாடாக உள்ளது. பெண் மான்கள் உணவு உண்பதில் மிகுந்த நேரம் செலவிடுகிறன. சிவிங்கி மான் மழையின்போது மறைவிடத்திலிருந்து வெளிவந்து மழையில் நனையும். அநேகமாக அது தன் உடலை குளிர்விப்பதற்காக இருக்கலாம்.[11] இந்த மான்களின் சமூக அமைப்பானது இரண்டு முதல் ஆறு மான்களைக் கொண்ட சிறிய மந்தைகளாக உள்ளன. மந்தைகள் பொதுவாக ஒற்றை பாலின மான்களை உள்ளடக்கியதாக இருக்கும். இருப்பினும் பெண் மான் மந்தைகளில் கூடுதலாக குட்டிகளைக் கொண்டிருக்கின்றன. சில ஆண் மான்கள் தனிமையில் வாழ்கின்றன.

இவை சண்டையிடுவதும் பயணம் செய்வதும் அசாதாரணமான நிகழ்வாகும், ஒருவேளை உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலைச் சேமிப்பதற்கான ஒரு உத்தியாக இருக்கலாம். இருபாலினத்தவையும் 3–6 km2 (1–2+12 sq mi) பரப்பளவிலான தங்களுக்கான பெரிய பிரதேசத்தைப் பராமரிக்கின்றன. ஆண் மான்கள் தங்கள் பிரதேசத்தை தன் உடலில் உள்ள வாசனை சுரப்பிளில் உள்ள சுரப்பியை செடி போன்ற பொருட்களில் தடவி உறுதிபடுத்துகின்றன. இந்த மான்களில் இடப்பெயர்ச்சி இல்லாத போக்கு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.

உணவுமுறை[தொகு]

சிவிங்கி மான் இலைகளை உண்ணுதல்

சிவிங்கி மான் புதர்களின் இலைகள் மற்றும் மரங்கள், தளிர்கள், செடிகள், பூக்கள் மற்றும் பழங்களை உண்கிறது.[12] அது தன் பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கழுத்தை நீட்டுவதன் மூலம் மற்ற கேணல்கள் எனப்படும் வனப்புமிக்க சிறுமான்கள் மற்றும் மறிமான்களை விட உயரமான கிளைகளில் உள்ளவற்றை எட்ட முடியும்; இது தரையில் இருந்து 2 மீ (6 அடி 7 அங்குலம்) உயரத்தை அடைய உதவுகிறது. இதனால் வறட்சியின் போதும் பசுமையான தாவரங்கள் உணவாக கிடைக்கின்றன. இதற்கு அமைந்துள்ள கூர்மையான வாய் முட்கள் நிறைந்த தாவரங்களிலிருந்து இலைகளைப் பிரித்தெடுத்து உண்ண உதவுகிறது.[8] சிவிங்கி மான்களுக்கு அவ்வப்போது தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியமில்லை.[12] இந்த மான்களை வேட்டையாடுபவைகளில் முக்கியமானவையாக ஆப்பிரிக்க காட்டு நாய்கள், சிவிங்கிப்புலிகள், கழுதைப்புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் போன்றவை உள்ளன.

இனப்பெருக்கம்[தொகு]

சிவிங்கி மான்கள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செயக்கூடியன. பெண் மான்கள் சுமார் ஒரு ஆண்டில் பாலியல் முதிர்ச்சி அடைகிறன. அதேசமயம் ஆண் மான்கள் 1.5 வருடங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகிறன. இருப்பினும் காடுகளில் இவை ஒரு பிரதேசத்தை (ஒருவேளை 3.5 ஆண்டுகள்) தனக்கான பிரதேசமாக ஆக்கிக் கொண்டபிறகே வெற்றிகரமானதாக ஆக முடியும்.[12] சுமார் ஏழுமாத கர்ப்ப காலத்துக்கப் பிறகு இவை ஒரு குட்டியைப் பெற்றெடுக்கின்றன. குட்டிகள் பிறக்கும்போது சுமார் 3 கிலோ (7 பவுண்டுகள்) எடையுடன் இருக்கும். புளோரிடாவின் யூலியில் உள்ள ஒயிட் ஓக் கன்சர்வேஷனில் 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக செயற்கை விந்தூட்டல் மூலம் இந்தக் குட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன. நான்கு பெண் குட்டிகள் பிறந்தன. செயற்கை கவிந்தூட்டலில் இருந்து பிறந்த இரண்டாவது தலைமுறை கன்றுகளும் உருவாக்கபட்டது.[13] சிவிங்கி மான்கள் பிடித்து வளர்க்கப்படும் இடங்களில் பதின்மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வாழ்கின்றன. அதுவே காடுகளில் அதைவிடக் குறைவாக எட்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றன.[12]

குறிப்புகள்[தொகு]

 1. IUCN SSC Antelope Specialist Group (2016). "Litocranius walleri". IUCN Red List of Threatened Species 2016: e.T12142A50190292. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T12142A50190292.en. https://www.iucnredlist.org/species/12142/50190292. பார்த்த நாள்: 12 November 2021. 
 2. IUCN SSC Antelope Specialist Group (2008). "Litocranius walleri". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/12142/0. பார்த்த நாள்: 21 June 2012. 
 3. 3.0 3.1 Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link) பிழை காட்டு: Invalid <ref> tag; name "MSW3" defined multiple times with different content
 4. 4.0 4.1 Victor Brooke (1878). "On a new species of gazelle from western Africa". Proceedings of the Zoological Society of London: 929–930. https://www.biodiversitylibrary.org/page/28519641. 
 5. [Merriam-Webster Dictionary] gerenuk
 6. Groves, C.; Grubb, P. (2011). [[[:வார்ப்புரு:Google Books]] "Litocranius"]. Ungulate Taxonomy. Baltimore: Johns Hopkins University Press. pp. 156–157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781421400938. {{cite book}}: Check |chapter-url= value (help)
 7. 7.0 7.1 7.2 7.3 Castelló, J. R. (2016). [[[:வார்ப்புரு:Google Books]] "Gerenuk"]. Bovids of the World: Antelopes, Gazelles, Cattle, Goats, Sheep, and Relatives. Princeton: Princeton University Press. pp. 158–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-16717-6. {{cite book}}: Check |chapter-url= value (help)
 8. 8.0 8.1 Kingdon, J. (2015). [[[:வார்ப்புரு:Google Books]] "Gerenuk"]. The Kingdon Field Guide to African Mammals. London: Bloomsbury. pp. 569–571. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4729-1236-7. {{cite book}}: Check |chapter-url= value (help)
 9. Estes, R.D. (2004). The Behavior Guide to African Mammals: Including Hoofed Mammals, Carnivores, Primates. Berkeley: University of California Press. pp. 84–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520080850.
 10. 10.0 10.1 Macdonald, D. W. (20 November 2014). [[[:வார்ப்புரு:Google Books]] "Gerenuk Litocranius walleri"]. In Kingdon, J.; Happold, D.; Hoffmann, M.; Butynski, T. (eds.). Mammals of Africa. Vol. VIவார்ப்புரு:SndsHippopotamuses, Pigs, Deer, Giraffe and Bovids. Bloomsbury. pp. 387–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-8994-8. {{cite book}}: Check |chapter-url= value (help)
 11. Leuthold, B.M.; Leuthold, W. (1978). "Daytime activity patterns of gerenuk and giraffe in Tsavo National Park, Kenya". African Journal of Ecology 16 (4): 231–43. doi:10.1111/j.1365-2028.1978.tb00444.x. 
 12. 12.0 12.1 12.2 12.3 Leuthold, Walter (1978). "Ecology of the gerenuk Litocranius walleri". Journal of Animal Ecology 47 (2): 561–580. doi:10.2307/3801. 
 13. "One of our member institutions working with assisted reproductive techniques". Conservation Centers for Species Survival. Archived from the original on 2021-02-18. பார்க்கப்பட்ட நாள் 3 June 2013.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவிங்கி_மான்&oldid=3929971" இலிருந்து மீள்விக்கப்பட்டது