சிறிய கொண்டை ஆலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Thalasseus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சிறிய கொண்டை ஆலா
மகாராட்டிரத்தின் அக்சி கடற்கரையில் உள்ள ஒரு ஜோடி சிறிய கொண்டை ஆலாக்கள்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Thalasseus
இனம்: வார்ப்புரு:Taxonomy/ThalasseusT. bengalensis
இருசொற் பெயரீடு
Thalasseus bengalensis
(Lesson, 1831)
வேறு பெயர்கள்

Sterna bengalensis Lesson, 1831

சிறிய கொண்டை ஆலா ( Lesser crested tern ) [2] என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆலா ஆகும்.

சொற்பிறப்பியல்[தொகு]

இந்த இனத்தின் விலங்கியல் பெயரில் உள்ள பேரினப் பெயரான Thalasseus என்பது பண்டைய கிரேக்கச் சொல்லான தலசா (thalassa) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் "கடல்" என்பதாகும். விலங்கியல் பெயரில் உள்ள இனப்பெயரான பெங்கலென்சிஸ் (bengalensis) என்பது " வங்காளத்தின் " என்று பொருள்படும். இது வட இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் பெரும்பகுதியை வரலாற்று ரீதியாக குறிப்பிடும் சொல்லாகும். [3]

பரவல்[தொகு]

சிறிய கொண்டை ஆலா

இது உலகின் துணை வெப்பமண்டல கடலோரப் பகுதிகளில் முக்கியமாக செங்கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வழியாக மேற்கு அமைதிப் பெருங்கடல் மற்றும் ஆத்திரேலியா வரை இனப்பெருக்கம் செய்கிறது. லிபிய கடற்கரையிலிருந்து இரண்டு தீவுகளில் நடுநிலக் கடலின் தெற்கு கடற்கரையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்படுகிறது. இத்தாலியிலும், பிரான்சிலும் தற்செயலான இனப்பெருக்கம் பதிவாகியுள்ளது. ஆத்திரேலியப் பறவைகள் அநேகமாக அங்கேயே இருக்கும். ஆனால் மற்ற பகுதியில் உள்ள பறவைகள் குளிர்காலத்தில் தெற்கு நோக்கி தென்னாப்பிரிக்கா வரை வலசை போகின்றன.

துணை இனங்கள்[தொகு]

இந்தப் பறவை பல புவியியல் துணையினங்களைக் கொண்டுள்ளது. இவற்றிற்கிடையே முதன்மையாக அளவு மற்றும் இறகு நிறத்தில் சிற்சில வேறுபடுகள் காணப்படுகின்றன:

மத்திய தரைக்கடல் இனம் ஐரோப்பாவிற்கு அரிதாக வந்து அலைந்து திரிகிறது. மேலும் இத்தாலி, எசுப்பானியா, இங்கிலாந்தில் தூய அல்லது கலப்பு ஜோடிகளால் ( சாண்ட்விச் ஆலாவுடன் ) இனப்பெருக்கம் ஆகிறது.

இந்த இனம் கடற்கரைகள் மற்றும் தீவுகளில் அடர்த்தியான கூட்டமாக சேர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது. இது கடலில் உயர்ந்து நிற்கும் பாறைகள் மீதும் தீவுகளின் தரையிலும் அருகருகே நெருக்கமாக கூடு கட்டி ஒன்று முதல் இரண்டு (அரிதாக மூன்று) முட்டைகளை இடும். கூடு கட்டும் நடத்தை சாண்ட்விச் ஆலாக்களைப் போலவே உள்ளது. மிகவும் அடர்த்தியாக கூட்டம் சேர்ந்து கூடு கட்டுவதன் மூலம் வேட்டையாடிகளிடமிருந்து தப்ப முயல்கிறது. மேலும் (குறைந்தபட்சம் எமிக்ரேட்டா துணையினம்) வேட்டையாடியான மஞ்சள்-கால் கடற்காக்கை இனப்பெருக்கத்தை முடித்துவிட்டு கூடுகளை விட்டு வெளியேறும்போது அதாவது கோடையின் பிற்பகுதியில் இவை கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன.

தலசியஸ் பெங்காலென்சிஸ் - MHNT

விளக்கம்[தொகு]

அனைத்து தலசீயஸ் ஆலாக்களைப் போலவே, சிறிய கொண்டை ஆலாக்களும் பொதுவாக உவர் நீரில் குதித்து மீன்களைப் பிடித்து உணவாக கொள்கின்றது. காதலூட்டத்தில் ஒரு பகுதியாக பெண் பறவைக்கு ஆண் பறவை மீனைப் பரிசாக அளிக்கும்.

கிரேட் பேரியர் ரீஃப், ஆத்திரேலியா.

இது ஒரு நடுத்தர அளவுள்ள பெரிய ஆலாவாகும். இதன் மூன்று மிக நெருங்கிய உறவினர்களான சாண்ட்விச் ஆலா, எலிகண்ட் ஆலா , சைனீஸ் க்ரெஸ்டட் ஆலா ஆகியவற்றுடன் மிகவும் ஒத்த அளவும், பொதுவான தோற்றமும் கொண்டது. முதிர்ந்த பறவைகள் கோடைக் காலத்தில் (இனப்பெருக்க காலம்) தலை உச்சி கறுப்பாகவும், கால்கள் கறுப்பாகவும், நீண்ட கூர்மையான ஆரஞ்சு அலகும் கொண்டது. மேல் இறக்கைகள், பிட்டம், மத்திய வால் இறகுகள் சாம்பல் நிறமாகவும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். இறக்கையில் உள்ள முதன்மை பறக்கும் இறகுகள் கோடையில் கருமையாகின்றன. குளிர்காலத்தில், உச்சந்தலையும், நெற்றியும் கருங்கோடுகளுடன் கூடிய வெண்மையாக மாறும். அழைப்பு சாண்ட்விச் ஆலா போன்ற உரத்த குரலில் இருக்கும்.

பாதுகாப்பு[தொகு]

இந்த ஆலாவானது ஆப்பிரிக்க-ஐரேவசிய புலம்பெயர் நீர்ப்பறவைகளுக்கான பாதுகாப்பு ஒப்பந்ததால் ( AEWA ) பாதுகாக்கபடும் இனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் மத்திய தரைக்கடல் கடல் பறவைகள் செயல் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 10 கடல் பறவை இனங்களில் இதுவும் ஒன்றாகும். [4]

இந்தியாவில் பி. எம். சயீத் கடல் பறவைகள் காப்பகப் பகுதியில் இந்த ஆலா ஆலா பாதுகாக்கப்படுகிறது. [5]

மேன்லி மெரினா, தெ.கி குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியாவில் க்ரெஸ்டட் மற்றும் காஸ்பியன் ஆலாக்கள், சில்வர் குல்ஸ் மற்றும் பைட் சிப்பி கேட்சர்
இந்தியாவின் கேரளத்தில் உள்ள கண்ணூரில் படம்பிடிக்கபட்ட ஒரு தனி சாண்ட்விச் ஆலாவுடன் பல சிறு கொண்டை ஆலாகள்.
முழப்பிலங்காடு கடற்கரையில் சிறிய கொண்டை ஆலாக்கள்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thalasseus bengalensis
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_கொண்டை_ஆலா&oldid=3773087" இருந்து மீள்விக்கப்பட்டது