வெர்சாய் ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: yo:Àdéhùn Versailles
சி தானியங்கிஇணைப்பு: tl:Tratado ng Versailles
வரிசை 114: வரிசை 114:
[[sw:Mkataba wa Versailles]]
[[sw:Mkataba wa Versailles]]
[[th:สนธิสัญญาแวร์ซายส์ (1919)]]
[[th:สนธิสัญญาแวร์ซายส์ (1919)]]
[[tl:Tratado ng Versailles]]
[[tr:Versailles Barış Antlaşması]]
[[tr:Versailles Barış Antlaşması]]
[[uk:Версальський договір 1919]]
[[uk:Версальський договір 1919]]

20:11, 20 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

வெர்சாய் ஒப்பந்தம்
ஜேர்மனிக்கும், கூட்டுப்படைகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம்.
ஒப்பந்தத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்பக்கம்
கையெழுத்திட்டது28 ஜூன் 1919
இடம்வெர்சாய், பிரான்ஸ்
நடைமுறைக்கு வந்தது10 ஜனவரி 1920
நிலைRatification by Germany and three Principal Allied Powers.
கையெழுத்திட்டோர்பிரான்சு பிரான்ஸ்
இத்தாலி இத்தாலி
சப்பான் ஜப்பான்n
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா
செருமனி ஜெர்மன் குடியரசு
வைப்பகம்பிரான்ஸ் அரசு
மொழிகள்பிரெஞ்சு, ஆங்கிலம்
முழு உரை
Treaty of Versailles விக்கிமூலத்தில் முழு உரை
இடமிருந்து, ஐக்கிய இராச்சியத்தின் தலைமை அமைச்சர் டேவிட் லாயிட் ஜார்ஜ், இத்தாலியின் தலைமை அமைச்சர் விட்டோரியோ இமானுவேல் ஓர்லண்டோ, பிரான்சின் தலைமை அமைச்சர் ஜார்ஜஸ் கிளமென்செயூ, ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் ஆகியோர்.

வெர்சாய் ஒப்பந்தம் (Treaty of Versailles) என்பது, முதலாம் உலகப் போரின் முடிவில் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தங்களுள் ஒன்று. இது ஜேர்மனிக்கும், கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது இப் போர் மூளுவதற்கான காரணங்களில் ஒன்றான ஆர்ச்டியூக் பிரான்ஸ் பேர்டினண்ட் என்பவர் கொலை செய்யப்பட்டுச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின் 1919 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. 1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு போரை உண்மையில் முடிவுக்குக் கொண்டு வந்தது ஆயினும், பாரிஸ் அமைதி மாநாட்டில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் ஆகின. ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான ஏற்பாட்டின்படி ஜேர்மனியும் அதன் கூட்டாளிகளும் போருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு நிலப் பகுதிகளை விட்டுக்கொடுப்பதுடன், இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டிலேயே தொடங்கிய நிகழ்வுகளால் ஒப்பந்தம் வலுவிழக்கத் தொடங்கியது. 1930 களின் நடுப்பகுதியில் பரவலான ஏளனத்துக்கு உரியதாகியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்சாய்_ஒப்பந்தம்&oldid=671615" இலிருந்து மீள்விக்கப்பட்டது