டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
படத்தை தொகுத்துள்ளேன் .. .... அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
| spouse = டி. அனுராதா |
| spouse = டி. அனுராதா |
||
| children = ஒன்று |
| children = ஒன்று |
||
| party = [[அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்]] |
|||
| party = |
|||
| residence = 5, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், [[அடையாறு]], [[சென்னை]] |
| residence = 5, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், [[அடையாறு]], [[சென்னை]] |
||
| father = டி. விவேகானந்தம் |
| father = டி. விவேகானந்தம் |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.<ref> https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-counting-election-result-live-306109.html </ref> |
21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.<ref> https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-counting-election-result-live-306109.html </ref> |
||
பின்பு மார்ச்சு 15, 2018 அன்று [[அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்]] என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் இக்கட்சியைத் தொடங்கினேன் என்று கூறினார்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/article23250890.ece|title=அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்': கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்}} </ref> |
|||
== வழக்குகள் == |
== வழக்குகள் == |
06:36, 15 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்
டி.டி.வி. தினகரன் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 13, 1963 திருத்துறைப்பூண்டி |
இருப்பிடம் | 5, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை |
அரசியல் கட்சி | அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கைத் துணை | டி. அனுராதா |
பிள்ளைகள் | ஒன்று |
உறவினர்கள் | வி. என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி. கே. சசிகலா, எம். நடராஜன், ஜெ. இளவரசி, டாக்டர். எஸ். வெங்கடேஷ் |
டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளர் ஆவார்.[1] இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த அக்காளான வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.[2][3] இவரது தம்பி வி. என். சுதாகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.[சான்று தேவை]
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்.[5]
ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.[6] பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.[7][8]
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[9] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.[10]
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பிரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார். [11]
21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[12]
பின்பு மார்ச்சு 15, 2018 அன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் இக்கட்சியைத் தொடங்கினேன் என்று கூறினார்.[13]
வழக்குகள்
1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. [14]
செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[15]
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[16] பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
- ↑ "பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!". 18/03/2016. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ டி.டி.வி. தினகரனின் பின்னணி
- ↑ எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?
- ↑ http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu
- ↑ TTV Dinakaran: The nephew Sasikala believes in
- ↑ Jayalalithaa expels TTV Dinakaran
- ↑ VK Sasikala Placed Nephew In Charge Of Party. It Can't Get Enough Of Him
- ↑ Life and times of TTV Dinakaran — Sasikala's new pawn in TN's political battle
- ↑ RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate
- ↑ பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை
- ↑ "இரட்டை இலை சின்னம் தீர்ப்பு".
- ↑ https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-counting-election-result-live-306109.html
- ↑ "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்': கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்".
- ↑ "அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்".
{{cite web}}
: Unknown parameter|access date=
ignored (|access-date=
suggested) (help)தினகரன் - ↑ How TTV Dinakaran got relief from Jayalalithaa wealth case
- ↑ "AIADMK's TTV Dinakaran Arrested At Midnight After 4 Days Of Questioning". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 25, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)