கையூட்டு
Jump to navigation
Jump to search
கையூட்டு அல்லது இலஞ்சம் என்பது, ஊழலின் ஒரு வடிவம் ஆகும். வாங்குபவர் தனது கடமைகளுக்குப் பொருத்தமில்லாத வகையில், அல்லது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்காகப் பணம் அல்லது அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்வதை இது குறிக்கும். கையூட்டு ஒரு குற்றம் ஆகும். பிளாக்கின் சட்ட அகரமுதலி (ஆங்கிலம்), பொது அல்லது நீதிச் சேவையில் உள்ள அலுவலர் அல்லது பிற பணியாளர் ஒருவருடைய செயல்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன் பெறுமதியான ஏதாவது ஒன்றை வழங்க முற்படுதல், கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு ஆகும் என வரையறுக்கின்றது.