ஜெ. இளவரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜெ. இளவரசி, என்பவர் வி. கே. சசிகலாவின் மூத்த அண்ணன் ஜெயராமன் என்பவரின் மனைவி ஆவார். [1] ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் இளவரசின் கணவர் ஜெயராமன் மேற்பார்வையாளராக இருந்தபோது, டிசம்பர், 1991-ஆம் ஆண்டில் மின்சாரம் தாக்கி இறந்தார். எனவே விதவையான இளவரசியை ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தன்னுடன் இருத்தி அடைக்கலம் கொடுத்து வைத்துக் கொண்டார். இவர் சசிகலா குடும்பம் சார்ந்த முக்கியநபர் ஆவார்.

சொத்து குவிப்பு வழக்கில்[தொகு]

ஜெயலலிதாவுடன் கூட்டுச் சதி செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சொத்து குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட இளவரசி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பின்னர் மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பின்னர் கர்நாடகா அரசு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்யுமாறு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 15 பிப்ரவரி 2017 அன்று உச்ச நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்ததுடன், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, இளவரசிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு,[2] 16 பிப்ரவரி 2017 அன்று கர்நாடகா மாநில பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் இளவரசியுடன் வி. கே. சசிகலா மற்றும் வி. என். சுதாகரனும் அடைக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._இளவரசி&oldid=3398820" இருந்து மீள்விக்கப்பட்டது