கு. ஞானசம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = கு. ஞானசம்பந்தன்
|image =
|image_size =
|caption =
|birth_name = கு. ஞானசம்பந்தன்
|birth_date =
|birth_place = [[சோழவந்தான்]],
[[மதுரை மாவட்டம்]],
[[தமிழ்நாடு]],
[[இந்தியா]].
|death_date =
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence = [[மதுரை]]
|nationality =[[இந்தியா|இந்தியர்]]
|other_names =
|known_for = 1. பட்டிமன்ற நடுவர்,
2. நகைச்சுவைப் பேச்சாளர்
3. எழுத்தாளர்
|education = தமிழில் முனைவர் பட்டம்
|employer =
| occupation = தமிழ்ப் பேராசிரியர்
| title =
| religion= இந்து
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=

'''கு. ஞானசம்பந்தன்''' என்பவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] மக்களுக்கு [[பட்டிமன்றம்|பட்டிமன்ற]] நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். [[மதுரை மாவட்டம்]] [[சோழவந்தான்]] எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது [[மதுரை]]யில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள [[தியாகராயர் கல்லூரி]]யில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் [[சென்னை]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[நாகர்கோவில்]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[சிவகங்கை]] உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
'''கு. ஞானசம்பந்தன்''' என்பவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] மக்களுக்கு [[பட்டிமன்றம்|பட்டிமன்ற]] நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். [[மதுரை மாவட்டம்]] [[சோழவந்தான்]] எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது [[மதுரை]]யில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள [[தியாகராயர் கல்லூரி]]யில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் [[சென்னை]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[நாகர்கோவில்]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[சிவகங்கை]] உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.

வரிசை 52: வரிசை 84:
*[http://www.tamilauthors.com/10/10.html எழுத்தாளர், பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்]
*[http://www.tamilauthors.com/10/10.html எழுத்தாளர், பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்]

[[பகுப்பு: தமிழறிஞர்]]
[[பகுப்பு: தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: நகைச்சுவைப் பேச்சாளர்கள்]]
[[பகுப்பு: நகைச்சுவைப் பேச்சாளர்கள்]]

16:30, 16 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கு. ஞானசம்பந்தன்
பிறப்புகு. ஞானசம்பந்தன்
சோழவந்தான்,
மதுரை மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியா.
இருப்பிடம்மதுரை
தேசியம்இந்தியர்
கல்விதமிழில் முனைவர் பட்டம்
பணிதமிழ்ப் பேராசிரியர்
அறியப்படுவது1. பட்டிமன்ற நடுவர்,
2. நகைச்சுவைப் பேச்சாளர்
3. எழுத்தாளர்
சமயம்இந்து

கு. ஞானசம்பந்தன் என்பவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள தியாகராயர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.

தமிழ்த்துறை வழிகாட்டுநர்

• தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவரது வழிகாட்டலில் இதுவரை 35 மாணவர்கள் “ஆய்வியல் நிறைஞர்” பட்டங்களையும், 4 மாணவர்கள் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளனர்.

எழுதியுள்ள நூல்கள்

பல்வேறு அச்சிதழ்களில் முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் கீழ்காணும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.

1. வாங்க சிரிக்கலாம்.
2. பரபரப்பு - சிரிப்பு.
3. பேசும் கலை.
4. உலகம் உங்கள் கையில்.
5. இன்றைய சிந்தனை.
6. வாழ்வியல் நகைச்சுவை.
7. சினிமாவுக்குப் போகலாம் வாங்க!
8. கல்லூரி அதிசயங்கள்.
9. இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்.

ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள்

இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் ஒலிநாடாக்களாகவும் குறுந்தகடுகளாகவும் கீழ்காணும் தலைப்புகளில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

1. வாங்க சிரிக்கலாம்
2. சிரிக்கலாம் வாங்க
3. இலக்கியமும் நகைச்சுவையும்
4. சிரிப்பும் சிந்தனையும்
5. வெற்றி நம் பக்கம்

தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்வுகள்

• பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். குறிப்பாக தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார்.
• ஜெயா தொலைக்காட்சியில் தினமும் காலை மலர் நிகழ்வில் “இன்றைய சிந்தனை” எனும் தலைப்பில் ஜூன் 12, 2006 முதல் தொடர்ந்து சிறப்புத் தகவல்களை வழங்கி வருகிறார்.

தமிழ்ச் சொற்பொழிவுகள்

தமிழ்நாடு தவிர இந்தியாவின் முக்கிய நகரங்களிலுள்ள தில்லி, மும்பை, கல்கத்தா, ஹைதராபாத், அந்தமான் தமிழ்ச் சங்கங்களிலும், சிங்கப்பூர், மலேசியாத் தலைநகர் கோலாலம்பூர், அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் அரபு நாடுகளில் சவூதி அரேபியா, குவைத், ஜெத்தா தமிழ்ச் சங்கங்களில் சிறப்பு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.

நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்

• இவர் “விருமாண்டி”, “இதயத் திருடன்”, “கைவந்த கலை”, “ஆயுதம் செய்வோம்”, “சிவா மனசுல சக்தி” போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

விருது மற்றும் சிறப்புக்கள்

1. தமிழ்நாடு அரசின் 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது.
2. தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கிய “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” பட்டம்.
3. பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் வழங்கிய “உவகைப் புலவர்”, “தமிழறிஞர்”, “நகைச்சுவை அரசர்”, “நகைச்சுவைத் தென்றல்”, “இளைய கலைவாணர்”, “சித்த பத்மஸ்ரீ” போன்ற பட்டங்கள்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._ஞானசம்பந்தன்&oldid=1024014" இலிருந்து மீள்விக்கப்பட்டது