உள்ளடக்கத்துக்குச் செல்

சியார்சியா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியார்சியா தேசிய காற்பந்து அணி
Shirt badge/Association crest
அடைபெயர்ჯვაროსნები
சிலுவைப்போர் வீரர்கள்
கூட்டமைப்புசியார்சிய காற்பந்துக் கூட்டமைப்பு
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்வில்லி சாக்னோல்
அணித் தலைவர்குராம் காசியா
Most capsகுராம் காசியா (113)
அதிகபட்ச கோல் அடித்தவர்சோட்டா அர்வெலாத்சே (26)
தன்னக விளையாட்டரங்கம்போரிசு பைச்சாத்சே தினாமோ திடல் (முதன்மை), அசாரபெத் திடல், மிக்கேல் மேசுக்கி திடல், ரமாசு சஙேலியா திடல்
பீஃபா குறியீடுGEO
பீஃபா தரவரிசை 78 4 (6 அக்டோபர் 2022)[1]
அதிகபட்ச பிஃபா தரவரிசை42 (செப்டெம்பர் 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை156 (மார்ச் 1994)
எலோ தரவரிசை 49 33 (26 அக்டோபர் 2022)[2]
அதிகபட்ச எலோ49 (11 அக்டோபர் 1995)
குறைந்தபட்ச எலோ108 (2009)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
Third colours
முதல் பன்னாட்டுப் போட்டி
அதிகாரபூர்வமற்றது
சியார்சியா SSR 2–2 லித்துவேனியா 
(திபிலீசி, சியார்சியா; 27 மே 1990)
அதிகாரபூர்வம்
 லித்துவேனியா 1–0 சியார்சியா 
(கவுனாசு, லித்துவேனியா; 2 செப்டம்பர் 1992)
பெரும் வெற்றி
 சியார்சியா 8–0 தாய்லாந்து 
(திபிலீசி, சியார்சியா; 12 அக்டோபர் 2023)
பெரும் தோல்வி
 சியார்சியா 1–7 எசுப்பானியா 
(திபிலீசி, சியார்சியா; 8 செப்டம்பர் 2023)
ஐரோப்பிய வாகை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2024 இல்)
சிறந்த முடிவுTBD (2024)

சியார்சியா தேசிய காற்பந்து அணி அல்லது ஜோர்ஜியத் தேசியக் காற்பந்து அணி (Georgia national football team, சியார்சிய: საქართველოს ეროვნული საფეხბურთო ნაკრები) என்பது ஆண்கள் பன்னாட்டுக் காற்பந்துப் போட்டிகளில் சியார்சியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது சியார்சியக் கால்பந்துக் கூட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. சியார்சிய அணியின் முதல் போட்டி 1990 இல் அந்நாடு சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது நடைபெற்றது. யூஈஎஃப்ஏ யூரோ 1996 முதல் ஒவ்வொரு பெரிய போட்டிகளுக்கும் சியார்சிய அணி தகுதி பெற முயற்சித்துள்ளது, இந்நாட்டின் முதல் பன்னாட்டுப் பங்கேற்பு யூரோ 2024 இல் ஆகும். சியார்சியத் தேசிய அணியின் உள்ளூர் ஆட்டங்கள் திபிலீசியில் உள்ள போரிசு பைச்சாட்சே தினாமோ திடலில் விளையாடப்படுகின்றன.

சியார்சிய காற்பந்துக் கூட்டமைப்பு ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம், பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றில் 1992 இல் உறுப்பினரானது,[3] இது சியார்சியாவிற்கு போட்டிகளில் விளையாட உதவியது. இவற்றில் முதலாவது செப்டம்பர் 1994 இல், யூரோ 1996 இற்கான தகுதிப் போட்டியின் ஒரு பகுதியாக மல்தோவாவிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.[4] சியார்சியா தனது குழுவில் மல்தோவா, வேல்சு, அல்பேனியா அணிகளைவிட மூன்றாவது இடத்தைப் பிடித்தது, ஆனால் இரண்டாவது இடத்தைப் பிடித்த பல்கேரியாவில் இருந்து ஏழு புள்ளிகள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

சியார்சியா பிரான்சில் நடைபெற்ற 1998 உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கு விளையாடத் தகுதி பெறவில்லை. அப்போது சியார்சியா பிஃபா உலகத் தரவரிசையில் 42-ஆவது நிலையில் இருந்தது.

யூரோ 2024 இற்கான தகுதி-காண் போட்டியில் 0-0 என்ற கோல் கணக்கில் கிரேக்கத்தை சமன்நீக்கி மோதலில் 4–2 என்ற கணக்கில் தோற்கடித்தது, இது சியார்சியாவின் முதல் பன்னாட்டுப் போட்டிக்கு உத்தரவாதம் அளித்தது.[5][6][7][8][9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. 6 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2022.
  2. Elo rankings change compared to one year ago. "World Football Elo Ratings". eloratings.net. 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2022.
  3. "Georgian Football Federation". UEFA. Archived from the original on 12 April 2010. பார்க்கப்பட்ட நாள் 30 December 2006.
  4. "Georgia – International Results". RSSSF. Archived from the original on 15 October 2009. பார்க்கப்பட்ட நாள் 30 December 2006.
  5. "Georgia defeated Greece in a penalty shootout and will play at the European Championship for the first time in history". newshub.ge. 2024-03-27. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  6. "Making history: Georgia's national football team will play at Euro 2024, after defeating Greece in playoff final | AGENDA.GE". agenda.ge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-28.
  7. "Georgia and star Kvaratskhelia head to Euro 2024 after beating Greece in penalty shootout". AP News (in ஆங்கிலம்). 2024-03-26. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  8. "Georgia qualify for first European Championships after penalty shootout win over Greece". Irish Independent (in ஆங்கிலம்). 2024-03-26. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  9. "Georgia create history by reaching Euro 2024" (in en-GB). BBC Sport. https://www.bbc.com/sport/football/68603222. 
  10. "Georgia reach Euro 2024 with Greece shootout win to make history". ராய்ட்டர்ஸ். March 26, 2024. பார்க்கப்பட்ட நாள் March 26, 2024.

வெளி இணைப்புகள்[தொகு]