சித்தாபுதூர்

ஆள்கூறுகள்: 11°01′16″N 76°58′33″E / 11.021200°N 76.975700°E / 11.021200; 76.975700
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தாபுதூர்
Siddhapudur
புறநகர்ப் பகுதி
சித்தாபுதூர் Siddhapudur is located in தமிழ் நாடு
சித்தாபுதூர் Siddhapudur
சித்தாபுதூர்
Siddhapudur
சித்தாபுதூர், கோவை, (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°01′16″N 76°58′33″E / 11.021200°N 76.975700°E / 11.021200; 76.975700
நாடு India
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
ஏற்றம்439 m (1,440 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்641044
தொலைபேசி குறியீடு+91422xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், டாடாபாத், ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, சாய்பாபா காலனி
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்பி. ஆர். நடராஜன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்வானதி சீனிவாசன்
இணையதளம்https://coimbatore.nic.in

சித்தாபுதூர் (Siddhapudur) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை, சித்தாபுதூரிலிருந்து சுமார் 3.5 கி.மீ. தூரத்தில், டாக்டர் நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 439 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சித்தாபுதூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'16.3"N 76°58'32.5"E (அதாவது, 11.021200°N 76.975700°E) ஆகும்.

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

சித்தாபுதூர் வழியாக, அரசினர் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனப் போக்குவரத்து பேருந்துகள் அதிகளவில் செல்கின்றன. அருகிலேயே கோயம்புத்தூர் மாநகராட்சி நகரப் பேருந்து நிலையம் அமைந்து, போக்குவரத்தை எளிதாக்குகிறது.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

அதிகமான மக்கள் பயன்படுத்தும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம், சித்தாபுதூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்திலுள்ள கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் அருகிலுள்ளதாகும்.

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

சித்தாபுதூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.

கல்வி[தொகு]

பள்ளி[தொகு]

பி. ஆர். சித்தா நாயுடு நினைவு மெட்ரிகுலேஷன் பள்ளி என்ற தனியார் பள்ளி ஒன்று சித்தாபுதூரில் இயங்குகிறது.

கல்லூரி[தொகு]

மாணவிகள் பயன் பெறும் வகையில், சிறீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சித்தாபுதூரில் அமைந்துள்ளது.

மருத்துவம்[தொகு]

ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்ட அருமையான சிறப்பு மருத்துவப் பிரிவுடன், சித்தாபுதூரில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது.[2]

ஆன்மீகம்[தொகு]

கோயில்[தொகு]

சித்தாபுதூரில் ஐயப்பன் கோயில் ஒன்று உள்ளது. ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் முதல் நாளன்று, ஐயப்ப பக்தர்கள் இக்கோயிலுக்கு விசயம் செய்து, மாலை அணிந்து, முறையாக விரதமிருந்து, பின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருவது வழக்கம். அவ்வகையில், இந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 17 (கார்த்திகை மாதம் முதல் நாள்) அன்று, இக்கோயிலுக்கு வந்து, மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.[3] சபரிமலை மண்டல பூசை மற்றும் மகரவிளக்கு தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் விரதம் அனுசரிப்பர் ஐயப்ப பக்தர்கள்.[4] ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் 14 ஆம் தியதி, சபரிமலை மகரசோதியை முன்னிட்டு, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில், பகலில், யானை வாத்தியத்துடன் கூடிய காட்சி சீவேலியும், அன்று மாலையில் மகா தீபாராதனையும் நடைபெறும்.[5]

காவல்துறை[தொகு]

சித்தாபுதூர் பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த வீடு ஒன்றைப் புதுப்பித்து, இப்பகுதியிலுள்ள காவல்துறை மற்றும் அரசு சாராத அமைப்புகள் இணைந்து, காவல்துறை இளைஞர் சங்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamil Nadu (India) Legislature Legislative Assembly (1985) (in ta). Madras Legislative Assembly debates; official report. Legislative Assembly. https://books.google.co.in/books?id=cvAY_nUWcA4C&q=%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&dq=%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwjNvv3lntv7AhXHBd4KHbAvAMwQ6AF6BAgJEAM. 
  2. "உடல் உறுப்பு தான விழிப்புணர்வு - Dinamalar Tamil News" (in ta). 2022-11-29. https://m.dinamalar.com/detail.php?id=3181780. 
  3. "சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: மாலை அணிந்து விரதம் துவக்கம்". Dinamalar. 2022-11-17. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  4. "சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..." (in ta). 2021-11-17. https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-district-devotees-started-their-fasting-at-siddhaputhur-ayappan-temple-in-coimbatore-due-to-karthigai-month-vai-615911.html. 
  5. மாலை மலர் (2022-11-16). "கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நாளை தொடங்குகிறது" (in ta). https://www.maalaimalar.com/devotional/worship/ayyappan-temple-mandala-pooja-on-tomorrow-537226. 
  6. The Hindu Bureau (2022-11-29). "Police boys and girls club set up in an unused building at Siddhapudur in Coimbatore" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/police-boys-and-girls-club-set-up-in-an-unused-building-at-siddhapudur-in-coimbatore/article66200614.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாபுதூர்&oldid=3631738" இலிருந்து மீள்விக்கப்பட்டது