உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 13°05′22″N 80°03′05″E / 13.0895°N 80.0514°E / 13.0895; 80.0514
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:13°05′22″N 80°03′05″E / 13.0895°N 80.0514°E / 13.0895; 80.0514
பெயர்
வேறு பெயர்(கள்):சித்துக்காடு தாத்திரீசுவரர் கோயில்
பெயர்:நெல்லீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:சித்தர்காடு
சட்டமன்றத் தொகுதி:பூந்தமல்லி
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர்
ஏற்றம்:53.08 m (174 அடி)
கோயில் தகவல்
மூலவர்:தாத்திரீசுவரர்
தாயார்:பிரசன்ன குந்தளாம்பிகை என்ற பூங்குழலி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்தரம், திருக்கார்த்திகை ஆடிக் கார்த்திகை, தைக் கார்த்திகை, மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), விநாயகர் சதுர்த்தி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
கட்டிய நாள்:800 வருடங்களுக்கு முன்பு
அமைத்தவர்:மதுரையை ஆண்ட சுந்தர பாண்டியன்

தாத்திரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் சித்தர்காடு என்ற புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இத்தலம் நெல்லி மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. 'தாத்ரி' என்ற சமசுகிருதச் சொல்லுக்கு 'நெல்லி' என்று பொருள். எனவே, இங்கு குடியிருக்கும் இறைவன் தாத்திரீசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.[1] தாயார் பிரசன்ன குந்தளாம்பிகை என்ற பூங்குழலி ஆவார். தலவிருட்சம் நெல்லி மரம் ஆகும். 'சித்தர்காடு' என்றிருந்த இவ்விடம் காலப்போக்கில் பெயர் மருவி 'சித்துக்காடு' என்றாயிற்று. எனவே, 'சித்துக்காடு தாத்திரீசுவரர் கோயில்' என்ற பெயரிலும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் மதுரையை ஆண்ட சுந்தர பாண்டியன் இக்கோயிலைக் கட்டினார்.[2]

இக்கோயிலுக்கு அருகிலேயே சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சுந்தரராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 53.08 மீ. உயரத்தில், (13°05′22″N 80°03′05″E / 13.0895°N 80.0514°E / 13.0895; 80.0514) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில் (தமிழ் நாடு)

திருவிழாக்கள்

[தொகு]

மகா சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்தரம், திருக்கார்த்திகை ஆடிக் கார்த்திகை, தைக் கார்த்திகை, மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.[3]

இதர தெய்வங்கள்

[தொகு]

தட்சிணாமூர்த்தி, நடராசர் இலட்சுமி, சரசுவதி, கணபதி, சுப்பிரமணியர், நந்தி, ஆதி சங்கரர், படுக்கை ஜடாமுனி சித்தர் மற்றும் பிராண தீபிகா சித்தர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மாலை மலர் (2024-02-03). "திருமணத்தடை நீக்கும் தாத்ரீஸ்வரர்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. Suriyakumar Jayabalan. "Sithukadu Thatheeswarar temple: பழமை வாய்ந்த தாத்திரீஸ்வரர் கோயில்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  3. "Thatheeswarar Temple : Thatheeswarar Thatheeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  4. Ganesh (2019-06-27). "Sri Thateeswarar,sri Valeeswarar,Sri Sundararaja Temples- Sithukadu(Thirumanam)" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.