சிட்டிசன் மணி
Appearance
சிட்டிசன் மணி (Citizen Mani) என்பவர் ஒரு இந்திய நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தமிழ் படங்களில் பணிபுரிகிறார். 200 திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் 2019 இல் பெருநாளி என்ற படத்தை இயக்கி நடித்தார்.
தொழில்
[தொகு]திரைப்படத்தில் நடிப்பதற்காக மணி தனது கிராமத்திலுருந்து சென்னைக்கு வந்தார். சிட்டிசனில் (2001) ஒரு தேநீர் மாஸ்டராக இவர் பாத்திரம் ஏற்று நடித்தார். தேனீர் மாஸ்டராக இவரது நடிப்பு பாராட்டுக்களைப் பெற்ற பிறகு, மணி தனது திரைப் பெயரில் 'சிட்டிசன்' என்ற அடைமொழியைச் சேர்த்துகொண்டார். சிட்டிசன் படத்தில் இவர் பெற்ற பிரபலமானது அந்நியன் (2005), ஆறு (2005) உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களைப் பெற இவருக்கு உதவியது.[1] இவர் பெருநாளி (2019) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[2][3][4][5]
திரைப்படவியல்
[தொகு]- மகாநதி (1994)
- சிட்டிசன் (2001)
- 12 பி (திரைப்படம்) (2001)
- தவசி (2001)
- தேவன் (2002)
- ஸ்ரீ (2002)
- பகவதி (திரைப்படம்) (2002)
- பீஷ்மர் (2003 திரைப்படம்) (2003)
- ஜி (2005)
- அந்நியன் (திரைப்படம்) (2005)
- தாஸ் (2005)
- ஆறு (2005)
- குருச்சேத்திரம் (2006)
- செங்காத்து (2006)
- மறந்தேன் மெய் மறந்தேன் (2006)
- தாமிரபரணி (திரைப்படம்) (2007)
- முனி (2007)
- துணிச்சல் (திரைப்படம்) (2010)
- வல்லக்கோட்டை (2010)
- சிங்கம் 2 (திரைப்படம்) (2013)
- செல்ல (2017)
- ஹரஹர மஹாதேவகி (2017)
- ஆடை (2019)
- பெருநாளி (2019; also director)
குறிப்புகள்
[தொகு]
- ↑ "Actor Citizen Mani Interview". Tamil Box Office.
- ↑ .
- ↑ "Dinamalar Nellai Mobile". Dinamalar. Archived from the original on 2021-04-30. பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
- ↑ "பெருநாளியில்தாய்மாமனின் பாசப்போராட்டம்". Daily Thanthi. 19 March 2019.
- ↑ "அக்கா மகள்களுக்காக வாழ்வை தியாகம் செய்யும் தாய்மாமன்! - Kungumam Tamil Weekly Magazine". Kungumam.