சிக்கிமின் இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  சிக்கிமின் இசையானது பாரம்பரிய நேபாளிகளின் நாட்டுப்புற இசை முதல் மேற்கத்திய பாப் இசை வரை அடங்கியுள்ளது. இன சமூகங்கள் லெப்சா, லிம்பு, பூட்டியா, கிராதிக்கள் மற்றும் நேபாளிகள் போன்றோர்களின் இசை பங்களிப்புகள் அடங்கியதே சிக்கிம் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாகும்.

தமாங் செலோ என்று அழைக்கப்படும் இந்திய நாட்டுப்புற இசை சிக்கிம் மாநிலத்தின் முக்கிய பாரம்பரிய பாணியாகும், தமாங் சமூகத்தின் இந்த இசை வடிவமானது தம்பு என்ற இசைக்கருவியின் தாள ஒலிக்கு ஏற்ப இசைக்கப்படுகிறது. மேற்கத்திய பாணி பரப்பிசை (பாப்) பிற மேற்கத்திய பாணி இசை பாணிகளைப்போல அஸ்ஸாம் மற்றும் சிக்கிம் பிராந்தியத்தில் பிரபலமாக உள்ளது.

ஹிரா தேவி வைபா, இந்திய நாட்டுப்புறப் பாடல்களின் முன்னோடி

தமாங் செலோ[தொகு]

இது தமாங் மக்களின் தனிப்பட்ட இசை வகையாகும்.மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சிக்கிம் பகுதிகளைப் பூர்விகமாக கொண்டுள்ள நேபாளி சமூகத்தினரிடையே இம்முறை மிகவும் பிரபலமானது. தற்காலத்தில் இந்த இசைவகையை இசைக்க இசைக்கலைஞர்கள் நவீன இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டாலும், பாரம்பரிய தமாங் கருவிகளான மடல், தம்பு மற்றும் துங்னா ஆகியவற்றை பயன்படுத்தி இசைக்கும் போது தமாங் செலோ கவர்ச்சியாகவும், கலகலப்பாகவும் அல்லது மெதுவாகவும், மெல்லிசையாகவும் இருக்கும், பொதுவாக துக்கம், காதல், மகிழ்ச்சி அல்லது அன்றாட சம்பவங்கள் போன்றவைகளை நாட்டுப்புறக் கதைகள் மூலமாக வெளிப்படுத்தப் பாடப்படுகிறது. [1]

மேற்கத்திய செல்வாக்கு[தொகு]

மற்ற வடகிழக்கு மாநிலங்களைப் போலவே சிக்கிம் மாநிலத்தின் இசையும் மேற்கத்திய பாணி இசை யின் பாதிப்புகளோடு இசைக்கப்பட்டு வருகிறது. ''பழங்குடி மழை'' என்ற பெயரில் இயங்கி வரும், மிகவும் பிரபலமான நேபாளி ஒலியியல் பரிசோதனை இசைக்குழு சிக்கிமின் நகரமான நாம்ச்சியைச் சேர்ந்தது. [2]

ஹிப்-ஹாப், கே பாப் மற்றும் ராப் போன்ற நவீன இசை வகைகளும் சிக்கிம் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. (ACCU), Asia⁄Pacific Cultural Centre for UNESCO. "Asia-Pacific Database on Intangible Cultural Heritage (ICH)". www.accu.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2018-07-21.
  2. Republica. "Tribal Rain's 'Sahara' in memory of late Rahul Rai". My City (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிமின்_இசை&oldid=3658995" இலிருந்து மீள்விக்கப்பட்டது