ஹிரா தேவி வைபா
ஹிரா தேவி வைபா | |
---|---|
2010 எடுக்கப்பட்ட ஒளிப்படம் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 9 செப்டம்பர் 1940 இந்தியா, டார்ஜிலிங், அம்பூட்டியா |
இறப்பு | இந்தியா, சிலிகுரி,கடம்தலா | 19 சனவரி 2011
இசை வடிவங்கள் | நேபாள நாட்டுப்புற பாடல், தமாங் செலோ |
தொழில்(கள்) | நாட்டுப்புற பாடகர் |
இசைக்கருவி(கள்) | மேடல், ஹார்மோனியம், தம்பு |
வெளியீட்டு நிறுவனங்கள் | எச்எம்வி, நேபாள வானொலி, மியூசிக் நேபாள், ஏஐஆர் |
ஹிரா தேவி வைபா (Hira Devi Waiba) என்பவர் இந்திய மாநிலமான, மேற்கு வங்காளத்தின், டார்ஜிலிங்கைச் சேர்ந்த ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் ஆவார். மேலும் இவர் நேபாளி நாட்டுப்புற பாடல்களின் முன்னோடி என்று புகழப்படுகிறார்.
இவரது பாடலான 'சூரா த ஹோய்ன அஸ்துரா' ( நேபாளி : चुरा त होइन अस्तुरा) என்பது இதுவரை பதிவு செய்யப்பட்ட முதல் தமாங் செலோ பாடல் என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவின் எச்.எம்.வி இசை வெளியீட்டு நிறுவனத்தால் இவரது பாடல்கள் (1974 மற்றும் 1978 இல்) வெளியிடப்பட்டன. இவ்வாறு பாடல்கள் வெளியிடப்பட்ட ஒரே நேபாள நாட்டுப்புற பாடகர் ஹிரா தேவி வைபா ஆவார்.[1] அனைத்திந்திய வானொலியின் ஒரே அ தர நேபாளி நாட்டுப்புற பாடகி இவர் ஆவார்.
வாழ்க்கை மற்றும் இசை
[தொகு]ஹிரா தேவி வைபா, மேற்கு வங்காளத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள குர்சியோங்கிற்கு அருகிலுள்ள அம்பூட்டியா தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் பல தலைமுறையாக நேபாளி நாட்டுப்புற பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் வரிசையில் தோன்றியவர். இவரது பெற்றோர்களான சிங் மன் சிங் வைபா (தந்தை) மற்றும் ஷெரிங் டோல்மா (தாய்) ஆகியோருக்கு மகளாக பிறந்தார். 40 ஆண்டுகளாக தனது இசை வாழ்க்கையில் இவர் கிட்டத்தட்ட 300 நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார்.[2] 1966 ஆம் ஆண்டில் நேபாள வானொலிக்காக குர்சியோங்கில் மூன்று பாடல்களைப் பதிவுசெய்தபோது இவரது நாட்டுப்புற பாடல் வாழ்க்கை தொடங்கியது. இவர் 1963 முதல் 1965 வரை குர்சியாங்கில் உள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராக பணியாற்றினார்.[3]
வைபாவின் பிரபலமான பாடல்களில் ஃபரியா லயாய்டீச்சன், ஓரா த வுடி ஜாண்டா மற்றும் ராம்ரி தா ராம்ரி ஆகியன அடங்கும். தனது தந்தையின் நினைவைப் போற்றும் விதமாக, 2008 ஆம் ஆண்டில் சிலிகுரிக்கு அருகிலுள்ள கடம்தலாவில் உள்ள தனது வீட்டில் எஸ்.எம்.வைபா சர்வதேச இசை மற்றும் நடன அகாடமியை வைபா திறந்து வைத்திருந்தார். ஹிரா வைபா தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுடன் 2011 ஜனவரி 19 அன்று தனது 71 வயதில் இறந்தார்.[4] இவருக்கு நவ்னீத் ஆதித்யா வைபா மற்றும் சத்யா வைபா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[5]
மகள் மற்றும் மகன் அஞ்சலி
[தொகு]லெஜண்ட் ஹிரா தேவி வைபாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இவரது குழந்தைகள் சத்ய வைபா மற்றும் நவ்னீத் ஆதித்யா வைபா ஆகியோர் 2016-2017 ஆம் ஆண்டில் அவரது சில தனிப்பாடல்களை மீண்டும் பதிவு செய்து வெளியிட்டனர். நவ்னீத் ஆதித்யா வைபா இந்த பாடல்களைப் பாடினார். சத்ய வைபா ' Ama Lai Shraddhanjali -Tribute to Mother', இந்த திட்டத்தின் தயாரிப்பு மற்றும் நிர்வாகத்தை கவனித்தார். எனவே இவரது பிள்ளைகள் மரபுகளை மேலும் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றனர்.[6][7]
விருதுகள்
[தொகு]ஹிரா தேவிக்கு 1986 ஆம் ஆண்டில் டார்ஜிலிங்கின் நேபாளி அகாடமியால் மித்ராசென் புராஷ்கர் விருது வழங்கப்பட்டது. 1996 இல் சிக்கிம் அரசாங்கத்தால் மித்ராசென் ஸ்மிருதி புராஸ்கர் விருதும், 2001 இல் ஆகம் சிங் கிரி புராஸ்கர் மற்றும் கோர்கா சாஹித் சேவா சமிதியின் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்றவை வழங்கப்பட்டன. நேபாள அரசு இவருக்கு கோர்கா தட்சினா பாஹு (நேபாளத்தின் வீரத்திருத்தகை), சாதனா சம்மன் மற்றும் மதுரிமா புல் குமாரி மகாடோ போன்ற விருதுகளை வழங்கியது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "चुरा त होइन अस्तुरा - पहिलो तामाङ सेलो गीत ? - Tamang Online" (in en-US). Tamang Online. 2016-12-07 இம் மூலத்தில் இருந்து 4 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180304212229/http://www.tamangonline.com/news/13540.
- ↑ "Darjeeling's folk singer Hira Waiba dies of burn injuries". Archived from the original on 21 செப்டம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "North Bengal & Sikkim | School for Nepali folk music". Calcutta (Kolkata). Archived from the original on 5 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-03-05.
- ↑ "Hira Devi dies of burn injuries". Archived from the original on 25 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012.
- ↑ "Navneet Aditya Waiba, Satya Waiba". Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 26 January 2017.
- ↑ "Songs of Tribute, Ama Lai Shraddhanjali". Archived from the original on 12 December 2017. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ "Ama Lai Shraddhanjali". Archived from the original on 15 February 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் Hira Devi Waiba's songs and life in pictures
- ஹிரா தேவி வைபாவின் பாடல்கள்
- 'நவ்னீத் ஆதித்யா வைபா | அய் சியாங்போ '
- 'நவ்னீத் ஆதித்யா வைபா | ஃபரியா லயாடியேச்சன் '
- 'நவ்னீத் ஆதித்யா வைபா | சூயா மா ஹா | தன் நாச் கீத் '
- 'நவ்னீத் ஆதித்யா வைபா | தன்குட்டா - எங்கள் லாஹூர் சகோதரர்களுக்கு '
- 'நவ்னீத் ஆதித்யா வைபா | ஜில்கே நாச்சாய்கோ - தம்பு கீத் '