சாம்பல் தலை மைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாம்பல் தலை மைனா
Chestnut-tailed starling, Satchari National Park.jpg
சட்சாரி தேசியப் பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: Sturnidae
பேரினம்: Sturnia
இனம்: S. malabarica
இருசொற் பெயரீடு
Sturnia malabarica
கமீலின், 1789
Chestnut-tailed Starling Range.jpg
     approximate range
வேறு பெயர்கள்

Temenuchus malabaricus

சாம்பல் தலை மைனா[2][3] [Chestnut-tailed starling (Sturnia malabarica)] அல்லது சாம்பல் தலை நாகணவாய்[4] என்பது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் இசுடர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை.

உடலமைப்பும் கள அடையாளங்களும்[தொகு]

நாகணவாயை விட அளவில் சிறியது (நீளம் = 17 - 22 cm[5]); தலையும் நெற்றியும் சாம்பல் நிறம். கழுத்திற்குக் கீழுள்ள அடிப்பகுதி செம்பழுப்பு நிறம்.

வளர்ந்த புள்ளினது அலகின் அடிப்பகுதி நீல நிறத்திலும் நடுப்பகுதி செம்மஞ்சளாகவும் முனை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மேலிறகுகள் கருஞ்சாம்பல் நிறத்திலும் ஓரங்கள் கருப்பாகவும் இருக்கும். வாலிறகுகள் செம்பழுப்பும் சாம்பல் நிறமும் கலந்து காணப்படும்[5].

உள்ளினங்கள்[தொகு]

S. malabarica இனம் இரு உள்ளினங்களைக் கொண்டுள்ளது:

முன்னிறுத்தப்பட்ட இனம்: S. m. malabarica; உள்ளினம்: S.m. nemoricola

பரவல்[தொகு]

S. m. malabarica: குஜராத்தின் பூஜ்ஜிலிருந்து வட கிழக்காக சண்டிகருக்குத் தெற்கேயுள்ள இந்தியாவின் பெரும்பகுதி, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து கிழக்காக நேப்பாளம் வழியாக பூட்டான், வடகிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் மிசுமி மலைகள், வடக்கு அசாம் வரை, தெற்கே ஒடிசா வரை காணப்படுகின்றது. குளிர்காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகளுக்கு வலசை போகின்றது[6].

வாழ்விடம்[தொகு]

மலையடிவாரங்கள் (2000 m வரை), தாழ்நிலப் பகுதிகள், அடர்ந்து வளராத காட்டிலாக்காத் தோட்டங்கள், மரங்களடர்ந்த பகுதிகளில் (மரங்கள் ஆங்காங்கு உள்ள பகுதிகள் உட்பட) காணலாம்; மனிதர் வாழும் பகுதிகளுக்கு அருகாமையில் காணப்படும் சாம்பல் தலை மைனா மனிதர் வாழும் பகுதிகளிக்குத் தொலைவிலும் காணப்படும்[5].

வலசை[தொகு]

உணவு[தொகு]

பெரும்பாலும் மரத்தில் இருந்தபடியே உணவைப் பிடிக்கும்; அரிதாகவே தரையிறங்கும். உணவு: பெருமளவில் பூச்சிகள், பழங்கள், தேன் ஆகியவை; சில சமயம் மகரந்தம், மொட்டு ஆகியவற்றையும் உண்ணும். கூட்டிலுள்ள குஞ்சுகளுக்கு கம்பிளிப்பூச்சிகளையும் வண்டுகளையும் உணவாகக் கொடுக்கும். ஒரு நாளின் செயல்கள் முடிந்த பின்னர் இவை கூட்டமாகப் புதர்களில் அடைகின்றன[6].

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Sturnia malabarica". IUCN Red List of Threatened Species 2016: e.T22710858A94263973. https://www.iucnredlist.org/species/22710858/94263973. பார்த்த நாள்: 23 May 2021. 
  2. க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 57 (280).
  3. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 186:1. பி. என். எச். எஸ்.
  4. க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக். 156 (310). மெய்யப்பன் பதிப்.
  5. 5.0 5.1 5.2 Feare. C. & Craig. A. (1998). Starlings and Mynas. p. 173 (58)
  6. 6.0 6.1 "BOW: Chestnut-tailed Starling: Subspecies distribution". 13 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_தலை_மைனா&oldid=3169636" இருந்து மீள்விக்கப்பட்டது